ஓபன்ஹெய்மர் படத்தின் ஹீரோவுக்கே இவ்ளோ கம்மி சம்பளமா? அயன்மேனே ஆனாலும் அளந்து தான் சம்பளமாம்!

ஏஞ்சல்ஸ்: இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் படத்தில் நடிப்பதையே நடிகர்கள் பெருமிதமாக கருதி வரும் நிலையில், சம்பளத்தை பற்றியெல்லாம் அவர்கள் கருத்தில் கொள்வதே இல்லையாம்.

பீக்கி பிளைண்டர்ஸ் நாயகன் சிலியன் மர்பி தான் இந்த படத்தில் ஓபன்ஹெய்மராகவே வாழ்ந்துள்ளார். அவர் உள்பட அயன்மேனாக நடித்து மார்வெல் நிறுவனத்திடம் பல நூறு கோடிகள் சம்பளமாக வாங்கிய ராபர்ட் டவுனி ஜூனியர் உள்ளிட்ட அனைவருக்குமே நோலன் படத்தில் குறைவான சம்பளம் தான் வழங்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Oppenheimer budget, Cilian Murphy and Robert Downey Jr Salary details are here

ஓபன்ஹெய்மருக்கு போட்டியாக ரிலீஸ் ஆன பார்பி படத்தின் பட்ஜெட்டும் ஓபன்ஹெய்மர் பட்ஜெட்டுக்குமே 10 மடங்கு வித்தியாசம் இருப்பது தான் இதில் வேறலெவல் மிரட்டலான சம்பவம்.

ஓபன்ஹெய்மர் படத்தின் பட்ஜெட்: 100 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பட்ஜெட்டில் தான் கிறிஸ்டோபர் நோலன் ஓபன்ஹெய்மர் படத்தையே இயக்கி உள்ளார். இதை விட பல மடங்கு அதிக பட்ஜெட்டுடன் பார்பி படம் உருவாகி உள்ள நிலையிலும், பாக்ஸ் ஆபிஸ் போட்டியில் இரண்டு படங்களும் ஒன்றுக்கொன்று சளைத்தது இல்லை என சர்வதேச அளவில் கடும் போட்டி போட்டு வருகின்றன.

Oppenheimer budget, Cilian Murphy and Robert Downey Jr Salary details are here

சிலியன் மர்பி சம்பளம்: பீக்கி பிளைண்டர்ஸில் அப்படியே பில்டிங்கை வெடிக்க விட்டு மாஸாக நடந்து வந்ததை பார்த்த கிறிஸ்டோபர் நோலன் தான் இயக்கப் போகும் அணுகுண்டு படத்துக்கு இவர் தான் சரியான நபராக இருப்பார் என சிலியன் மர்பியை ஓபன்ஹெய்மர் கதாபாத்திரத்திற்கே தேர்வு செய்துள்ளார்.

இந்த படத்திற்காக சிலியன் மர்பிக்கு 10 மில்லியன் டாலர் சம்பளம் வழங்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது இந்திய மதிப்பில் 82 கோடி ரூபாய் தான் சம்பளம்.

அயன்மேன் நடிகருக்கே இவ்ளோ தானா: மார்வெல்ஸ் தயாரிப்பில் அயன்மேனாக நடித்து 400 கோடிக்கும் மேல் சம்பளம் வாங்கிய ராபர்ட் டவுனி ஜூனியர் இந்த படத்தில் வில்லனாக நடித்துள்ளார். அவருக்கான சம்பளமாக வெறும் 4 மில்லியன் டாலரைத் தான் வழங்கி உள்ளார்களாம். இந்திய மதிப்பில் 32 கோடி தான் சம்பளம் என்பது குறிப்பிடத்தக்கது.

Oppenheimer budget, Cilian Murphy and Robert Downey Jr Salary details are here

மற்ற நடிகர்கள் சம்பளம்: ஹீரோயின் எமிலி பிளன்டுக்கும் 4 மில்லியன் டாலர் சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். மார்ஷியன் படத்தில் நடித்த பிரபல ஹாலிவுட் ஹீரோ மேட் டேமன் இந்த படத்தில் மான்ஹாட்டன் ப்ராஜெக்ட்டை தலைமை ஏற்று நடத்தும் ராணுவ அதிகாரியாக நடித்துள்ளார். அவருக்கு, வெறும் 3 மில்லியன் டாலர் தான் சம்பளம் வழக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். படத்தின் பட்ஜெட்டுக்கு ஏற்றவாறு நடிகர்களின் சம்பளமும் குறைத்துக் கொள்ளப்பட காரணமே கிறிஸ்டோபர் நோலன் என்கிற படைப்பாளி தான் காரணம் என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X