பாலியல் வழக்கில் சிக்கிய பிரபலத்துக்கு வாய்ப்பு?.. விக்னேஷ் சிவன் - நயன்தாராவுக்கு எழும் எதிர்ப்பு
சென்னை: போடா போடி படத்தில் இயக்குநராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். அந்தப் படம் சுமாரான வரவேற்பை பெற்றாலும் அவர் அடுத்ததாக இயக்கிய நானும் ரௌடிதான் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அந்தப் படத்தின்போதுதான் நடிகை நயன்தாராவை காதலித்தார். பிறகு இருவரும் திருமணம் செய்துகொண்டார்கள். இப்போது அவர் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தை இயக்கியிருக்கிறார்.
சிம்பு, வரலட்சுமி, ஷோபனா, விடிவி கணேஷ் என பலர் நடித்திருந்த போடா போடி படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். அந்தப் படம் நல்ல கதையம்சத்துடன் வந்தாலும் போட்டியாக களமிறங்கிய துப்பாக்கி படத்தினால் இருக்கும் இடம் தெரியாமல் போனது போடா போடி திரைப்படம். அந்தப் படத்துக்கு பிறகு விக்னேஷ் சிவனுக்கு படம் இயக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே போஸ்டர் டிசைன், பாடல்கள் எழுதுவது என தன்னை சினிமாவில் வைத்துக்கொண்டார். அப்படி அவர் என்னை அறிந்தால் படத்திலும் ஒரு பாடலை எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது.
நயன்தாராவுடன் திருமணம்: அதனையடுத்து நானும் ரௌடிதான் படத்தை இயக்கினார். அந்தப் படத்தில்தான் விக்னேஷ் சிவனும், நயனும் காதலிக்க தொடங்கினர். பல வருடங்கள் லிவிங் டுகெதரில் இருந்தவர்கள் கடந்த 2022ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு உயிர், உலக் என இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். அவர்களது வாழ்க்கை சுமூகமாக போய்க்கொண்டிருக்கிறது.

எல்ஐகே விக்னேஷ் சிவன்: அஜித்தின் 62ஆவது படத்தை இயக்குவதாக இருந்த விக்னேஷ் சிவன் அதிலிருந்து வெளியேறி; இப்போது எல்ஐகே என்ற படத்தை இயக்கிவருகிறார். முதலில் அந்தப் படத்துக்கு எல்ஐசி என்று பெயர் வைக்கப்பட்டிருந்தது. லலித் படத்தை தயாரிக்க இதில் பிரதீப் ரங்கநாதன், எஸ்.ஜே.சூர்யா, கீர்த்தி ஷெட்டி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் இதில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
படம் எப்போது ரிலீஸ்?: பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்த லவ் டுடே, டிராகன் ஆகிய இரண்டு படங்களுமே 100 கோடி ரூபாய் வசூலை அள்ளியது. எனவே இந்தப் படத்தையும் ஹிட் படமாக கொடுத்து ஹாட்ரிக் வெற்றியை ருசிக்க காத்திருக்கிறார் பிரதீப். படமானது செப்டம்பர் 18ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. இந்நிலையில் இந்தப் படம் குறித்து புதிய சர்ச்சை ஒன்று எழுந்திருக்கிறது.
என்ன சர்ச்சை?: அதாவது தமிழ் மற்றும் தெலுங்கில் ஏராளமான படங்களில் நடன இயக்குநராக பணியாற்றியவர் ஜானி மாஸ்டர். அவர் திருச்சிற்றம்பலம் படத்துக்காக தேசிய விருதையும் வாங்கியிருந்தார். சூழல் இப்படி இருக்க கடந்த வருடம் அவர் மீது நடனம் ஆடும் பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்தார். அதனையடுத்து ஜானி கைது செய்யப்பட்டார். இப்போது அவர் ஜாமீனில் வெளியே வந்திருக்கிறார்.
எப்படி கொடுக்கலாம்?: அப்படி பாலியல் புகாரில் சிக்கிய ஜானி மாஸ்டரை விக்னேஷ் சிவன் இந்தப் படத்தில் பணியாற்ற வைத்திருப்பதாக கூறப்படுகிறது. படத்தை நயன்தாராதான் தயாரிக்கிறார். ஒரு பெண்ணாக இருந்துகொண்டு பாலியல் புகாரில் சிக்கிய ஒருவரை எப்படி தான் தயாரிக்கும் படத்தில் பணியாற்ற வைக்கிறார் நயன்; ஏற்கனவே அவரையும்,விக்னேஷ் சிவனையும் சுற்றி ஏகப்பட்ட சர்ச்சைகள் ஓடிக்கொண்டிருக்கின்றன. இப்படிப்பட்ட நிலைமையில் இது தேவைதானா என்று ரசிகர்கள் கேள்விகளை அடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











