twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    காலாவை "கவுடா" காப்பாத்திருவார்.. ரஜினியின் நம்பிக்கை!

    காலா படத்திற்கு இதைவிட அதிக எதிர்ப்புகளை எதிர்பார்த்ததாகத் தெரிவித்துள்ளார் ரஜினி.

    |

    Recommended Video

    கர்நாடகாவில் காலா ரிலீசாகும் தியேட்டர்களுக்கு பாதுகாப்பு- வீடியோ

    சென்னை: காலா படத்தை கர்நாடகாவில் தடை செய்ய தேவகவுடா விட மாட்டார் என நடிகர் ரஜினி நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

    பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள காலா படம் நாளை மறுதினம் உலகம் முழுவதும் ரிலீசாக இருக்கிறது. ஆனால், காவிரி விவகாரம் தொடர்பாக ரஜினியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடகாவில் காலா படத்தை ரிலீஸ் செய்யக் கூடாது என அம்மாநில திரைப்பட வர்த்தக சபை தடை விதித்துள்ளது.

    Opposition to Kaala less than expected: Rajini

    இந்நிலையில், காலா பட தெலுங்கு பத்திரிகையாளர் சந்திப்பிற்காக படக்குழு ஹைதராபாத் சென்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு சென்னை திரும்பிய ரஜினி, விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

    அப்போது அவர் பேசியதாவது, "காலா படத்திற்கு இதைவிட அதிக எதிர்ப்பை எதிர்பார்த்தேன். ஆனால், இது குறைவு தான். அரசியல் வேறு, சினிமா தொழில் வேறு. ஆனால் இரண்டையும் சேர்த்துப் பார்க்கிறார்கள். ஒரு படத்தில் நல்ல விஷயம் இருந்தால் நிச்சயம் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள். இல்லையென்றால் விட்டு விடுவார்கள்.

    Opposition to Kaala less than expected: Rajini

    காவிரி விவகாரத்தில் பேசித் தீர்வு கண்டால் நல்லது. கர்நாடக முதல்வரை கமல் சந்தித்ததில் தவறில்லை. காலா படம் வெளியீடு குறித்து கர்நாடக அரசு ஏற்பாடு செய்யும் என நம்புகிறேன். படத்தை தடை செய்ய தேவகவுடா விட மாட்டார்" என நம்பிக்கைத் தெரிவித்தார்.

    English summary
    Tamil superstar Rajinikanth on Tuesday expressed the hope that Karnataka Government will ensure smooth release of his latest film Kaala as any ban on it would amount to “cheating” lakhs of people who wanted to see him back on the silver screen.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X