twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மும்பை செய்தியாளர்கள் மீது தாக்குதல் - ஓப்ரா வின்ப்ரேயின் பாதுகாவலர்கள் கைது!

    By Shankar
    |

    மும்பை: செய்தியாளர்களைத் தாக்கிய பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி நடத்துனர் ஓப்ரா வின்ப்ரேவின் பாதுகாவலர்கள் மூவரை போலீசார் கைது செய்தனர்.

    அமெரிக்காவின் பிரபல டிவி நிகழ்ச்சி நடத்துநர் ஓப்ரா வின்ப்ரே. இவர் இப்போது தனது புதிய டிவி நிகழ்ச்சியான நெக்ச் சேப்டர் படப்பிடிப்புக்காக இந்தியாவுக்கு வந்துள்ளார். அவருக்கு பாதுகாவலர்களாக இந்தியாவைச் சேர்ந்த மூவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    நேற்று பிருந்தாவன் நகரில் உள்ள கோயில்களில் நடக்கும் பஜனைகளில் பங்கேற்ற அவர், அந்தப் பகுதி மக்களின் வாழ்க்கை முறையை படமாக்கிக் கொண்டிருந்தார். அப்போது அவரைப் பார்க்க முயன்ற பத்திரிகையாளர்களுக்கும் வின்ப்ரேயின் பாதுகாவலர்களுக்கும் மோதல் ஏற்பட்டது.

    இதில் பத்திரிகையாளர்களைத் தாக்கிய பாதுகாவலர்கள், அவர்களது ஸ்டில் மற்றும் வீடியோ கேமிராக்களை சேதப்படுத்திவிட்டனர். இதைத் தொடர்ந்து செய்தியாளர்கள் போலீசில் புகார் செய்ததால், பாதுகாவலர்கள் மூவரும் கைது செய்யப்பட்டனர்.

    மாலையில், செய்தியாளர்களிம் மன்னிப்புக் கேட்டதால், மூவரும் விடுவிக்கப்பட்டனர்.

    Read more about: attack oprah media
    English summary
    American talk show queen Oprah Winfrey's three Indian bodyguards have been arrested after their scuffle with journalists in the holy town of Vrindavan on Thursday January 19. But they were later on released after they wrote a letter of apology to the media persons.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X