twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஜெ.எம். பஷீரை "தேவரய்யா" என்றழைத்த ஓபிஎஸ்.. பெரும் புகழ் பெற மனதார பாராட்டு!

    |

    சென்னை : 'தேசிய தலைவர்' படத்தினால் உங்களுக்கு பெரும் புகழ் கிடைக்கும் என்று கூறி ஜெ.எம். பஷீரை மனதார வாழ்த்தினார் துணை முதல்வர் ஓபிஎஸ்.

    தேசிய தலைவர் படத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கதாபாத்திரத்தில் ஜெ.எம். பஷீர் நடிக்கிறார். ஏ.எம்.சௌத்ரி தேவர் தயாரிப்பில் 'ஊமை விழிகள்' புகழ் அரவிந்தராஜ் இந்த படத்தை இயக்குகிறார். இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். தொடர்ந்து 48 நாட்கள் விரதம் இருந்து நடிக்கும் ஜெ.எம். பஷீர் அதிமுக-வை சார்ந்தவர்.

    தேவர் சமுதாயத்தை சேர்ந்த தமிழக துணை முதல்வரும் அதிமுக-வின் ஒருங்கிணைப்பாளருமான ஓபிஎஸ் இவரின் உருவ ஒற்றுமையை பார்த்து ஜெ எம் பஷீரை தற்போதெல்லாம் "தேவரய்யா" என்று தான் அழைக்கிறார்.

    பஷீர் தோற்றம் மறைந்து

    பஷீர் தோற்றம் மறைந்து

    சமீபத்தில் சென்னையில் உள்ள கந்த தோட்டம் கந்தசாமி முருகன் கோயிலுக்கு ஓபிஎஸ் உடன் இஸ்லாமியரான ஜெ எம் பஷீரும் சென்றுள்ளார்.அன்று சூரஸம்ஹாரம் முருகரை வணங்கி விட்டு ஓபிஎஸ் அவர்களிடம் இருந்து விடை பெரும் போது "பசும்பொன் முத்துராமலிங்க தேவராக நடிக்கும் உங்களிடம் தேவர் போல உருவ ஒற்றுமை உள்ளது. உங்களுக்குள் தேவர் இருக்கிறார். பழைய பஷீர் தோற்றம் மறைந்து தற்போது தேவரின் தோற்றம் தெரிகிறது. உங்களுக்கு நிச்சியமாக பெரும் புகழ் கிடைக்கும்" என ஓபிஎஸ் வாழ்த்தியுள்ளார்.

    மிகவும் லக்கி

    மிகவும் லக்கி

    "தேவர் முருகனின் தீவிர பக்தர். தங்களுடன் இணைந்து இன்று முருகனை வழிபட்டது அற்புதம். என்னால் இந்த நாளை மறக்க முடியாது" என ஓ.பி.எஸ்யிடம் ஜெ.எம். பஷீர் நன்றி தெரிவித்து கொண்டார்.பொதுவாக உருவ ஒற்றுமை என்பது எல்லா நடிகர்களுக்கும் சரியாக ஒத்து போவதில்லை ஒரு சிலருக்கு மட்டும் தான் கச்சிதமாக ஒத்து போகும். அந்த வகையில் பஷீர் மிகவும் லக்கி பெர்சன் என்று பலரும் பாராட்டி வருகின்றனர்

    பாரதி கதாபாத்திரத்தில்

    பாரதி கதாபாத்திரத்தில்

    ராகவேந்திரா கதாபாத்திரத்தில் ரஜினி நடித்தது மிகவும் பொருத்தம் என்று இன்று வரை பலரும் பாராட்டி வருகின்றனர். காந்தி வேஷத்தில் பென் கிங்ஸ்லி மிகவும் பிரமாதமாக நடித்திருப்பார். பாரதி கதாபாத்திரத்தில் ஷாயாஜி ஷிண்டே, கிருஷ்ணர் வேஷத்தில் என் டீ ஆர் அசத்தி இருப்பார். இப்படி பல நடிகர்கள் பல விதமான கதாபாத்திரங்கள் செய்து இருப்பது குறிப்பிட தக்கது

    ஆச்சரியம்

    ஆச்சரியம்

    தேவரின் உருவ ஒற்றுமை என்று வந்த பொழுது பல முகங்கள் , பல விதமான திறமைசாலிகள் இருந்தும் அனைவருக்கும் மிகவும் கச்சிதமாக பொருந்தவில்லை. பஷீரை மட்டும் பலரும் ஏற்றுக்கொண்டதற்கு காரணம் அந்த போட்டோஷூட் அவ்வளவு அட்டகாசமாக அனைவரையும் ஆச்சரியப்படுத்திய உருவ ஒற்றுமை இந்த படம் வெற்றி பெற வேண்டும் என்று பல அரசியல் தலைவர்களும் சினிமா பிரபலங்களும் தொடர்ந்து வாழ்த்திய வண்ணம் உள்ளனர்.

    English summary
    Ops praises J. M. Basheer
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X