“ஒரே ஒரு மொக்க ராஜா” – சிரிக்காதீங்கா இது படத்தோட பேருங்க!
சென்னை: கோலிவுட்டில் தேவகலா பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக உல்லாஸ் கிளி- கொல்லூர் மற்றும் சுரேஷ் இணைந்து தயாரிக்கும் படத்திற்கு வித்தியாசமாக "ஒரே ஒரு ராஜா மொக்க ராஜா" என்று பெயரிட்டுள்ளனர்.
இந்தப் படத்தில் சஞ்சீவ் முரளி என்ற புதுமுகம் கதாநாயகனாக நடிக்கிறார்.
காநாயகியாக ஸ்ரீரக்ஷா நடிக்கிறார். இன்னொரு நாயகியாக அஸ்வினி நடிக்கிறார்.

ரஞ்சித் முக்கிய வேடத்தில்:
ஸ்ரீரக்ஷா சில மலையாளப் படங்களில் நாயகியாக நடித்திருக்கிறார். முக்கியவேடத்தில் ரஞ்சித் நடிக்கிறார். வில்லனாக சாகர் என்ற புதுமுகம் அறிமுகமாகிறார்.

நடிகர்கள் பட்டாளம்:
தலைவாசல் விஜய், வனிதா, பாலாசிங், நான்கடவுள் ராஜேந்திரன் மயில்சாமி விஜய்கணேஷ், நெல்லை சிவா, வெங்கட்ராவ், சிவசநாராயண மூர்த்தி, சிசர்மனோகர், இந்திரன், அம்பிகாமோகன், எம்.ஆர்.கோபகுமார் ஆகியோரும் நடித்துள்ளார்கள்.

இசை, இயக்கம், ஒளிப்பதிவு:
என். ஐயப்பன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு சுமன்பிச்சு இசையமைக்கிறார். கதை, திரைக்கதை எழுதி இயக்குகியுள்ளார் சந்தோஷ் கோபால்.

விஐபி “ஹீரோ”:
வேலை வெட்டி இல்லாமல் இருக்கும் கதாநாயகன் சஞ்சீவ்முரளி ஊரில் தாதாவாகத் திரியும் வில்லனுடன் நட்பு பாராட்ட நினைக்கிறார். அதனால் தனக்கு மிகப் பெரிய அந்தஸ்து ஏற்படும் என்று நினைத்து வில்லனுடன் பழகுகிறார்.

வாழ்க்கையை சிதைக்கும் கூடா நட்பு:
கூடா நட்பு கேடாய் முடியும் என்பது போல் இந்நட்பினால் கதாநாயகனின் குடும்பம் சந்திக்கும் பிரச்சனைகள் தான் படத்தின் கதையாம்.


Click it and Unblock the Notifications











