twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இந்தியளவில் இந்த மாதமும் முதலிடத்தில் விஜய் தான்.. 10வது இடத்தில் அஜித்.. ரசிகர்கள் மோதல்!

    |

    சென்னை: ஆர்மேக்ஸ் மீடியா வெளியிட்டுள்ள இந்தியாவிலேயே பாப்புலரான ஆண் நடிகர்கள் பட்டியலில் தொடர்ந்து இந்த மாதமும் நடிகர் விஜய் தான் முதலிடத்தில் உள்ளார்.

    Recommended Video

    Actor Rajkumar |கன்னத்தில் விழும் குழி, என்ன காரணம்? | ithu Solla Marandha Kadhai Serial| *Interview

    ஆர்மேக்ஸ் மீடியா சமீபத்தில் தமிழில் பாப்புலரான நடிகர்கள் பட்டியலை வெளியிட்டது அதிலும் விஜய் தான் முதலிடம்.

    ஆனால், அந்த பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருந்த அஜித்துக்கு இந்தியளவிலான பட்டியலில் 10வது இடம் கிடைத்துள்ளது.

    அரசியலில் குதிக்க போகிறாரா த்ரிஷா?...இவர் கொடுத்த ஐடியாவா இது? அரசியலில் குதிக்க போகிறாரா த்ரிஷா?...இவர் கொடுத்த ஐடியாவா இது?

    ஆர்மேக்ஸ் மீடியா பட்டியல்

    ஆர்மேக்ஸ் மீடியா பட்டியல்

    ஆர்மேக்ஸ் மீடியா எனும் தனியார் நிறுவனம் தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் பாப்புலரான நடிகர்கள், நடிகைகள், படங்கள், ஓடிடி வெப்சீரிஸ்கள் உள்ளிட்டவற்றை பட்டியலிட்டு வருகிறது. ஜூலை மாதத்திற்கான பாப்புலர் நடிகர்கள் மற்றும் நடிகைகள் பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது.

    சமந்தா முதலிடம்

    சமந்தா முதலிடம்

    இதில், இந்தியளவில் நடிகைகள் பட்டியலில் நடிகை சமந்தாவுக்கு முதலிடம் கிடைத்துள்ளது. இரண்டாம் இடத்தில் ஆலியா பட்டும், மூன்றாவது இடத்தில் நடிகை நயன்தாராவும் உள்ளனர். சமீபத்தில் காபி வித் கரண் சீசன் 7ல் கூட ஆர்மேக்ஸ் மீடியா பட்டியல் பற்றி பேசி கரண் ஜோஹர் நயன்தாரா ரசிகர்களிடம் செமத்தியாக வாங்கிக் கட்டிக் கொண்டார்.

    எப்பவுமே நம்பர் ஒன்

    எப்பவுமே நம்பர் ஒன்

    இந்த பட்டியலில் தமிழ் சினிமாவாக இருக்கட்டும் அல்லது ஒட்டுமொத்த இந்திய சினிமாவாக இருக்கட்டும் நடிகர் விஜய் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். மற்ற நடிகர்களின் ரசிகர்கள் இதற்காக சண்டை போடுவதும், காசு வாங்கிக் கொண்டு தான் இந்த ஆர்மேக்ஸ் நிறுவனம் இப்படி பட்டியலை வெளியிடுகிறது என்றும் ஏகப்பட்ட குற்றச்சாட்டுக்களையும் முன் வைத்து வருகின்றனர்.

    டாப் 10

    டாப் 10

    முதல் இடத்தில் விஜய், இரண்டாவது இடத்தில் பிரபாஸ், மூன்றாவது இடத்தில் ஜூனியர் என்டிஆர், நான்காவது இடத்தில் அல்லு அர்ஜுன், ஐந்தாவது இடத்தில் யஷ், ஆறாவது இடத்தில் ராம்சரண், ஏழாவது இடத்தில் அக்‌ஷய் குமார், எட்டாவது இடத்தில் மகேஷ் பாபு, ஒன்பதாவது இடத்தில் சூர்யா, பத்தாவது இடத்தில் அஜித் உள்ளனர்.

    2வது இடம் 10வது இடம்

    2வது இடம் 10வது இடம்

    தமிழ்நாடு அளவில் பாப்புலரான நடிகர் பட்டியலில் நடிகர் அஜித் இரண்டாவது இடத்திலும், இந்திய அளவில் நடிகர் அஜித் 10வது இடத்திலும் இந்த பட்டியலில் இருப்பது சர்ச்சையை கிளப்பி உள்ளது. விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் அந்த பதிவின் கீழ் பெரும் சண்டையை போட்டு வருகின்றனர். தொடர்ந்து நடிகர் விஜய்யை ஆர்மேக்ஸ் மீடியா முதலிடத்தில் வைத்திருப்பது ஏன் என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன. பாலிவுட் நடிகர்களில் அக்‌ஷய் குமார் மட்டுமே இருப்பதும் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

    English summary
    Ormax Top 10 list: Vijay continuously spot in first place and Ajith spotted 10th place sparks fans fight. Actor Vijay again spotted number one position in all over India popular actors top 10 list.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X