»   »  ப்ப்பா... என்னா ரியாக்‌ஷனு.. ஜிமிக்கி கம்மலுக்கு பிறகு செம ட்ரெண்டாகும் ஒரு அடார் லவ்!

ப்ப்பா... என்னா ரியாக்‌ஷனு.. ஜிமிக்கி கம்மலுக்கு பிறகு செம ட்ரெண்டாகும் ஒரு அடார் லவ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கொச்சின் : ஒவ்வொரு வாரமும் சமூக வலைதளங்களில் ஏதாவது ஒரு விஷயம் செம ட்ரெண்டாகி வருகிறது.

ஜிமிக்கி கம்மல் உலகளவில் வைரலானதைத் தொடர்ந்து சமீபத்திய 'பக்கோடா' வரை பல விஷயங்களையும் நெட்டிசன்கள் வைரலாக்கியுள்ளனர்.

அந்த வகையில், லேட்டஸ்ட் வைரல் பிரியா பிரகாஷ் வாரியர். 'ஒரு அடார் லவ்' படத்தில் நடித்திருக்கும் பிரியாதான் ரசிகர்களின் லேட்டஸ்ட் வாவ் பொண்ணு!

மலையாள சினிமா

மலையாள சினிமா

மலையாள சினிமாவின் புதுவரவு இயக்குநர்கள் அம்மொழியின் சினிமா மீதான பிம்பங்களை மாற்றி வருகிறார்கள். சமகால அரசியலையும், நேட்டிவிட்டியையையும், சமூகப் பிரச்னைகளையும் தங்களது படங்களில் புகுத்தி ரசிகர்களால் கொண்டாடப் படுகிறார்கள் இளம் இயக்குநர்கள்.

ட்ரெண்ட் படங்கள்

ட்ரெண்ட் படங்கள்

மாட்டுக்கறி தடை தொடர்பான சர்ச்சைகள் கிளம்பும்போதே 'பீப்' கறியை மையமாக வைத்துப் படம் எடுத்து ஹிட் அடிப்பதுதான் மலையாளிகளின் வெற்றி. அப்படி இப்போது அடுத்த அரசியல் பிரச்னையைக் கையில் எடுத்திருக்கிறார்கள் சேட்டன்கள்.

ஒரு அடார் லவ்

ஒரு அடார் லவ்

'ஹேப்பி வெட்டிங்', 'சங்க்ஸ்' ஆகிய படங்களை இயக்கி ஹிட் அடித்த இயக்குநர் ஓமர் லுலு இயக்கியிருக்கும் படத்துக்கு 'ஒரு அடார் லவ்' என டைட்டில் வைத்துள்ளார். ஆதார் கார்டு கட்டாயம் எனும் மத்திய அரசின் விதிகள் நாடு முழுவதும் பேசப்பட்டு வரும் நிலையில் இப்படி ஒரு டைட்டில் வைத்திருப்பது வெகுவாக ஈர்த்துள்ளது.

ஆதார் காதல் கதை

ஆதார் காதல் கதை

ஆதார் கார்டு தரும் சிக்கல்கள், அந்த ஆதார் கார்டினாலேயே காதல் உருவாவது என ஆதார் கார்டை மையப்படுத்தி ரொமான்ஸ், காமெடி என பொழுதுபோக்குப் படமாக இதன் கதை அமைக்கப்பட்டுள்ளதாம்.

மாணிக்க மலராய பூவி

'ஒரு அடார் லவ்' படத்தின் 'மாணிக்க மலராய பூவி' பாட்டு சமீபத்தில் வெளியானது. பெரிய நடிகர்கள் நடிக்காத இப்படத்தில், இந்தப் பாடலின் வீடியோவை இதுவரை 44 லட்சம் பேர் பார்த்துள்ளனர். ஷான் ரஹ்மான் இசையில் இப்பாடலை வினீத் ஶ்ரீனிவாசன் பாடியுள்ளார்.

பிரியா பிரகாஷ் வாரியர்

பிரியா பிரகாஷ் வாரியர்

இந்தப் பாடலை இத்தனை வைரல் ஆக்கியது, நடிகை பிரியா பிரகாஷின் அழகான முக பாவனைகள்தான். இவரது க்யூட் எக்ஸ்பிரஷன்கள் பலரையும் கவர்ந்தது. சமூக வலைதளங்களில் பிரியா பிரகாஷுக்கு பல ரசிகர் பக்கங்கள் வளர தனது அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கத்தை ஷேர் செய்துள்ளார் பிரியா.

பிரியா வாரியர்

ஃபேஸ்புக்கில் ஒரு வீடியோவையும் பிரியா பிரகாஷ் பகிர்ந்துள்ளார். அதில், தனக்கு சிறு வயதிலிருந்து நடிப்பதற்கு ஆசையெனவும், 'சங்க்ஸ்' படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாகவும் 12-ம் வகுப்பில் இருந்த காரணத்தால் தன்னால் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள முடியவில்லையென்றும் கூறியுள்ளார்.

ஒரு அடார் லவ்

ஒரு அடார் லவ்

அதன்பிறகே, 'ஒரு அடார் லவ்' படத்தில் வாய்ப்பு கிடைத்ததாகவும் கூறியிருக்கிறார். பிரியா வாரியரின் ரியாக்‌ஷனுக்கு ரசிகர்கள் குவிகிறார்கள். அவரது புகைப்படங்கள் தற்போது அதிகமாகப் பகிரப்பட்டு வருகின்றன. இதன்மூலம் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகி இருக்கிறார் பிரியா.

Read more about: love, movie
English summary
Every week, Any one issue became trending on social networks. In that sense, the latest Viral is Priya Prakash Varrier. Priya prakash is a heroine in 'Oru Adaar Love' malayalam film. Recently 'Manikya Malaraya Poovi' song was released and going viral on social networks.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil