ஆமா.. அதை மாத்துனா சரிப்பட்டு வருமா.. சரி, மாத்திதான் பார்ப்போமே

சென்னை: திரையில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் 'ஒரு அடார் லவ்' படத்துக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்காததால், கிளைமாக்ஸ் காட்சியை மாற்ற படக்குழு முடிவு செய்துள்ளது.

படத்தின் கிளைமாக்ஸை மாற்றுவது தமிழ் சினிமாவிற்கு புதிதல்ல. ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க கிளைமாக்ஸ் மாற்றப்பட்டு வெற்றி அடைந்த படங்கள் உண்டு.

Oru Adar Love team is changing the movie climax

ஆழமான காதலை கூறிய படங்களில் முக்கியமான படம் வசந்த மாளிகை. இன்றளவும் காதல் தோல்வி என்றால், யாருக்காக இந்த வசந்த மாளிகை என பாடிய சிவாஜி தான் நினைவுக்கு வருவார். அந்த படத்தின் கிளைமாக்ஸ் முதலில் சிவாஜி மரணமடைவது போல் வெளியானது. ஆனால் ரசிகர்கள் இதனை ஏற்காததால், அவர் உயிர் பிழைத்து வாணிஸ்ரீ யுடன் இணைவது போல் மாற்றி வெளியிடப்பட்டது. கிளைமாக்ஸ் மாற்றப்பட்டதும் படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது.

காதலின் வலியை கூறிய காதல் படத்திற்கு பின் இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கிய படம் கல்லூரி. கிராமப்புற கல்லூரியை எதார்த்தமாக காட்டிய இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது. படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில், மூன்று பெண்களை ஓடும் பேருந்தில் உயிருடன் கொளுத்துவது போன்ற காட்சி வைக்கப்பட்டிருந்தது. இதை ரசிகர்கள் ஏற்காததால், அதனை நீக்கி கிளைமாக்சையும் மாற்றினார்.

அஜித் - த்ரிஷா நடிப்பில் , விஜய் இயக்கத்தில் வெளியான படம் கிரீடம். இப்படத்தின் சோகமான முடிவை அஜித் ரசிகர்கள் ஏற்காததால், மாற்றி வெளியிட்டனர். அஜித் ஜெயிலுக்கு போவதுபோல் இருந்த கிளைமாக்ஸ், அவர் விடுதலையாகி அவரது தந்தையின் ஆசைப்படி போலீஸ் ஆவது போல் மாற்றப்பட்டது. அஜித்தின் முகவரி படத்தின் கிளைமாக்ஸ் கூட ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க மாற்றப்பட்டதுதான்.


இந்த படங்கள் யாவுமே, ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க மாற்றப்பட்டு, வெற்றியடைந்தன. ஒரு அடர் லவ் படத்தின் மாற்றப்பட்ட கிளைமாக்ஸ் ரசிகர்களை இருக்குமா என்பது பொறுத்திருந்து பார்த்தால்தான் தெரியும்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X