போலீஸ் அதிகாரியாக அதிரடி காட்டும் கெத்து பொண்டாட்டி..லப்பர் பந்து நடிகை சுவாசிகாவின் த்ரில்லர் படம்!

சென்னை: அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் நடித்த லப்பர் பந்து படத்தில் எதார்த்தமான குடும்ப பெண்ணாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகை சிவாசிகா. தற்போது இவர் அதிரடியாக போலீஸ் கெட்டப்பில் மாஸ் காட்டி நடித்திருக்கிறார். இந்த படத்தைப்பார்த்த ரசிகர்கள் கெத்து பொண்டாட்டி கெத்து என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

வைகை என்ற படத்தில் உமா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை சிவாசிகா. இந்த படத்தில் விசாகா என்ற பெயரில் அறிமுகமான சிவாசிகா, "விசாகா" என்ற பெயர் ராசி இல்லாததால், தனது பெயரை சிவாசிகா என்று மாற்றிக்கொண்டார். இதைத்தொடர்ந்து கோரிப்பாளையம், சாட்டை, அப்புச்சி கிராமம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழ் படத்தில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு கதாபாத்திரம் அமையாததால், மலையாள சினிமா பக்கம் சென்றார்.

lubber pandhu swasika

லப்பர் பந்து: மலையாளத்தில் Aaraattu, Vasanthi, kumari, Vivekanandan Viralaan என அடுத்தடுத்த படத்தில் நடித்தார். இந்த படம் மலையாளத்தில் வெற்றிப்பெற்ற திரைப்படமாகும். இதைத்தொடர்ந்து, தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் உருவான லப்பர் பந்து படத்தில் நடித்தார். அந்த படத்தில், அட்டக்கத்தி தினேஷூக்கு மனைவியாக நடித்திருந்தார். படத்தில் மற்றொரு நடிகை சஞ்சனா நடித்திருந்தாலும், நடிகை சுவாசிகாவிற்கு தான் அழுத்தமான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டது

ஒரு அன்வேசத்தின்டே தொடக்கம்: இந்நிலையில்,நடிகை சிவாசிகா மலையாளத்தில் 'ஒரு அன்வேசத்தின்டே தொடக்கம்' என்கிற புலனாய்வு திரில்லர் படத்தில் அதிரடி போலீஸ் அதிகாரியாக முக்கியமான ரோலில் நடித்து அதிரடி காட்டி உள்ளார். 8ந் தேதி வெளியான இந்த படத்தைப் பார்த்த ரசிகர்கள், உண்மையில் கெத்து பொண்டாட்டி கெத்து தான் என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். எம்.ஏ. நிஷாத் இயக்கிய இப்படத்தில் டாம் சாக்கோ, சமுத்திரக்கனி ஆகியோர் லீட் ரோலில் நடித்துள்ளனர்.

‛ஒரு அன்வேசத்தின்டே தொடக்கம்' என்கிற மலையாளத் திரைப்படம் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் மம்முட்டி நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற புலனாய்வு திரில்லர் படமான கண்ணூர் ஸ்குவாடு பாணியில் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த படம் வசூலை அள்ளி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X