twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஒரு கதை சொல்லுங்க... கோலாகலமாகத் தொடங்கியது இளம் திறமையாளர்கள் வேட்டை!

    By Shankar
    |

    Recommended Video

    சூர்யா - மூவி பஃப் நடத்தும் மாபெரும் குறும்பட போட்டி..

    மூவிபஃப் மற்றும் 2டி எண்டர்டெயின்மெண்ட் என்ற இரண்டு நிறுவனங்களும் இணைந்து இரண்டாம் ஆண்டிற்கான ஃபர்ஸ்ட் கிளாப் சீசன் 2 என்ற குறும்பட போட்டி குறித்த தொடக்கவிழா சமீபத்தில் சென்னை ஜி ஆர் டி கன்வென்சன் சென்டரில் நடைபெற்றது. இளம் இயக்குநர்களை உருவாக்கும் திறமை தேடும் போட்டி இது.

    இந்த விழாவில் முன்னணி இயக்குநர்களான ராம், கார்த்திக் நரேன், நித்திலன், அருண் பிரபு புருஷோத்தமன் ஆகியோர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

    இந்த போட்டி குறித்து க்யூப் சினிமா டெக்னாலாஜிஸ் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி அரவிந்த் பேசுகையில், "தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இந்த குறும்படப் போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியின் தொடக்கவிழாவிற்கு வருகைத்தந்த அனைத்து இளந் தலைமுறை இயக்குநர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். புதிய கதை களம், புதுமையான கதை சொல்லல், திறமையான படைப்பாளிகளை அடையாளம் காணுதல் போன்ற நோக்கங்களைக் கொண்டே இந்த குறும் பட போட்டியை தொடங்கியிருக்கிறோம்.

    டிஜிட்டல் மயம்

    டிஜிட்டல் மயம்

    தற்போதைய உலகம் முழுவதும் டிஜிட்டல் மயமாகிவிட்டதால் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் கதையை குறும்படமாக்கலாம். தங்களுடைய வாழ்க்கையை நடைபெற்ற அனுபவத்தை வைத்து ரசிகர்களை பரவசமடையச்செய்ய முடியும் என்று நினைப்பவர்கள் அனைவரும் இந்த போட்டியில் கலந்து கொள்ளலாம். இதற்கான பாதையைத்தான் நாங்கள் திறந்திருக்கிறோம்.

    இதற்கு எங்களுடன் நடிகர் சூர்யாவின் 2 டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் தங்களுடைய பங்களிப்பை அளித்திருக்கிறது. இந்த குறும்படங்களுக்கு தேவையான தொழில்நுட்ப உதவியை அளிக்க நாக் ஸ்டுடியோஸ் முன்வந்திருப்பதையும் நாங்கள் மனதார வரவேற்கிறோம்.

    பெரிய நடிகர்

    பெரிய நடிகர்

    சீசன் 1 இல் வெற்றிப் பெற்ற இளம் இயக்குநர் ஆனந்த் என்பவர் தற்போது முன்னணி நடிகர் ஒருவரை வைத்து திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார் என்பதை பெருமிதத்துடன் சொல்ல விரும்புகிறோம். அத்துடன் கடந்த ஆண்டில் நடைபெற்ற குறும் பட போட்டியில் வெற்றிப் பெற்ற ஐந்து திரைப்படங்களை தமிழகம் முழுவதும் உள்ள நாற்பதிற்கும் மேற்பட்ட நகரங்களில் இருக்கும் 150க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் திரையிடப்பட்டது. இதனை முப்பத்தைந்து லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பார்வையிட்டு பாராட்டியிருக்கிறார்கள். சீசன் -1 ஐ போல் சீசன் -2 போட்டியும் வெற்றிப் பெறும்.

    பரிசுகள்

    பரிசுகள்

    ஃபர்ஸ்ட் கிளாப் சீசன் 2 வில் மூன்று நிமிட கால அளவிற்குள் குறம்படத்தை அனுப்பவேண்டும். போட்டியில் முதலிடத்திற்கு தேர்ந்தெடுப்பவர்களுக்கு மூன்று இலட்ச ரூபாயும், இரண்டாமிடத்தை வென்றவருக்கு இரண்டு லட்ச ரூபாயும், மூன்றாமிடத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவருக்கு ஒரு லட்ச ரூபாயும் பரிசாக வழங்கப்படும்.

    சூர்யா வாய்ப்பு

    சூர்யா வாய்ப்பு

    முதலிடத்தை வென்ற போட்டியாளருக்கு சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2 டி எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனத்துடன் தங்களின் கதை மற்றும் திரைக்கதையை கூற வாய்ப்பு அளிக்கப்படும். அத்துடன் அந்நிறுவனம் தயாரிக்கும் படங்களில் பயிற்சி பெறுவதற்கான வாய்ப்பும் அளிக்கப்படும்," என்றார்.

    இயக்குநர் ராம்

    இயக்குநர் ராம்

    இயக்குநர் ராம் பேசுகையில், "மக்களையும், படைப்பாளிகளையும் பரவசப்படுத்தும் இடமாக இன்றும் திரையரங்கம் மட்டுமேயிருக்கிறது. பெரிய திரை, சுற்றிலும் இருட்டு, நவீன ஒலியமைப்பு என பல விசயங்களை சொல்லலாம். ஆனால் குறும்படம் என்பது வேறு வகையிலான கலை வடிவம்.

    கோடம்பாக்கத்தைத் தாண்டுங்க

    கோடம்பாக்கத்தைத் தாண்டுங்க

    இங்கு குறும்படம் என்பது பெரிய படங்களை இயக்குவதற்கான ஒத்திகையாகவும், முன் அனுபவமாகவும்தான் இருக்கிறது. அதனால் குறும்படங்கள் கோடம்பாக்கத்தையே சுற்றி சுற்றி வருகின்றன. இதைத் தவிர்த்து நீங்கள் கனடா, ஆஸ்திரேலியா, இலங்கை என எங்கேயிருந்தாலும், உங்களுடைய கதையை குறும்படமாக எடுத்தால், அது இந்த போட்டியில் வெற்றிப் பெற்றால், அது பெரிய திரையில் திரையிடப்படக்கூடிய வாய்ப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது.

    திறமையான இளைஞர்கள்

    திறமையான இளைஞர்கள்

    இந்த போட்டியில் வெற்றிப் பெற்ற படத்தை தமிழகத்தில் மட்டும் திரையிடாமல் இந்தியா மற்றும் உலக அளவிலான அனைத்து திரையரங்குகளில் திரையிடப்படவேண்டும் என்ற வேண்டுகோளையும் இந்த தருணத்தில் முன்வைக்கிறேன். ஏனெனில் கனடா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, யாழ்பாணம் என பல இடங்களிலும் திறமையான இளங்கலைஞர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வார்கள்," என்றார்.

    நிகழ்ச்சியில் நாக் ஸ்டுடியோ கல்யாணம், 2 டி சார்பில் ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர். #OruKathaiSollunga

    Read more about: surya சூர்யா
    English summary
    Movie Buff's Oru Kathai Sollunga, a talent hunt season 2 was kick started recently.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X