twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'கொலை மிரட்டல் வருதுங்க...'- இது புலம்பலா.. பப்ளிசிட்டி ஸ்டன்ட்டா குப்பி ரமேஷ்?

    By Shankar
    |

    சுனந்தா புஷ்கர் மர்ம மரணத்தை படமாக்குவதாக எனக்கு கொலை மிரட்டல் வருகிறது என்று இயக்குநர் 'குப்பி' ரமேஷ் கூறினார்

    முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூர் மனைவி சுனந்தா புஷ்கர் கடந்த ஆண்டு மர்மமாக மரணமடைந்தார். அவர் கொடிய பாம்பு விஷம் கொடுத்து கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகங்கள் உள்ளன. இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது.

    இந்த மர்ம மரணத்தை கருவாக வைத்து தமிழில் ‘ஒரு மெல்லிய கோடு' என்ற பெயரில் படம் தயாராவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த படத்தில் சசிதரூர் கதாபாத்திரத்தில் ஷாமும், சுனந்தா புஷ்கர் வேடத்தில் மனிஷா கொய்ராலாவும் நடிப்பதாகக் கூறப்படுகிறது. வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் அர்ஜுன் நடிக்கிறார்.

    எதிர்ப்புகள்

    எதிர்ப்புகள்

    இந்த படத்துக்கு எதிர்ப்புகள் கிளம்பின. ஆனாலும் படப்பிடிப்பை முடித்து விட்டார். விரைவில் திரைக்கு கொண்டு வர ஏற்பாடுகள் நடக்கிறது. இந்தநிலையில் படத்தை வெளியிடக்கூடாது என்று மீண்டும் கொலை மிரட்டல்கள் வருவதாக இயக்குநர் 'குப்பி' ரமேஷ் தெரிவித்தார்.

    குஷ்பு

    குஷ்பு

    இதுகுறித்து அவர் கூறுகையில், "ஒரு மெல்லிய கோடு' படத்தை வெளியிடக்கூடாது என்று தொடர்ந்து மிரட்டல்கள் வருகின்றன. நடிகை குஷ்பு ஏற்கனவே எனது மக்கள் தொடர்பாளரிடம் தொடர்பு கொண்டு கதையைக் கேட்டார். கதையை அவரிடம் சொல்ல மறுத்துவிட்டேன்.

    அரசியல் கட்சிகள் மிரட்டல்

    அரசியல் கட்சிகள் மிரட்டல்

    நான் கர்நாடகாவில் வசிப்பதால் அங்குள்ள அரசியல் கட்சியினரும் மிரட்டுகிறார்கள். ஒருவரின் மனைவி கொலை செய்யப்படுவதும் என்ன மாதிரி விஷம் கொடுத்து கொல்லப்பட்டாள் என்பதும் தான் கதை. இது சுனந்தா புஷ்கர் கதையா? என்பது குறித்து சொல்ல விரும்பவில்லை படம் வரும்போது தெரிந்து கொள்ளட்டும்.

    ராஜீவ் கொலை பற்றிய படம்

    ராஜீவ் கொலை பற்றிய படம்

    ஏற்கனவே ராஜீவ்காந்தி கொலைபற்றி ‘குப்பி' என்ற பெயரிலும் சந்தன கடத்தல் வீரப்பனைப் பற்றி ‘வனயுத்தம்' என்ற பெயரிலும் படங்கள் எடுத்தேன். அவற்றில் யாரையும் புண்படுத்தவில்லை. அதுபோல் இந்தப் படத்திலும் சர்ச்சைக் காட்சிகள் இருக்காது. மிரட்டல்களுக்கு பயப்படமாட்டேன். தணிக்கை குழுவில் சான்று பெற்று படத்தை திரைக்குக் கொண்டு வருவேன்," என்றார்.

    ஸ்டன்ட்டா...

    ஸ்டன்ட்டா...

    இதுகுறித்து விசாரித்தால், எந்தக் கட்சியும் பிரமுகரும் அப்படி மிரட்டியதாக ஒப்புக் கொள்ளவில்லை. குறிப்பாக நடிகை குஷ்பு, தான் அப்படி பேசவில்லை என்று கூறியுள்ளார். குப்பி ரமேஷ் தனக்குத் தானே விளம்பரம் தேடுகிறாரா?

    English summary
    Ramesh, director of Oru Melliya Kodu has alleged that some political parties threatened him for making the movie.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X