twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்... ஆண்டின் முதல் வெற்றியைப் பதிவு செய்யுமா?

    By Shankar
    |

    Recommended Video

    400 தியேட்டர்களில் வெளியாகும் 'ONNPS'!

    இந்த வருட முதல் மாதத்தில் வெளியான 14 படங்களில் எந்த படமும் பெரிய வெற்றி பெறவில்லை.

    பிப்ரவரி முதல் வாரம் நாளை ஐந்து படங்கள் ரீலீஸ் ஆக உள்ளன. தமிழ் சினிமாவில் வியாபாரம் உள்ள கதாநாயகனாக மாறி உள்ள விஜய் சேதுபதி நடித்து உள்ள ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் இவற்றில் முக்கியமான படமாகும்.

    Oru Nalla Naal Paarthu Solren - preview

    துணை நடிகராக நடித்து கொண்டிருந்த விஜய் சேதுபதி 2010ல் வெளியான "தென் மேற்கு பருவக்காற்று" படத்தின் மூலம் கவனம் ஈர்க்கும் கதாநாயகனாக அறிமுகமானார்.

    அறிமுகமாகும் முதல் படத்திலேயே ஐம்பது பேரை அடித்து துவைக்கும் ஆக்க்ஷன் ஹீரோவாக பில்டப் கொடுக்கும் நடிகர்கள் மத்தியில் இயக்குநர் கொடுக்கும் கதாபாத்திரத்திற்குள் தன்னை நுழைத்துக் கொண்டு கவனம் ஈர்த்தவர் விஜய் சேதுபதி.

    தமிழ் நடிகர்கள் தங்கள் இமேஜ் பாதிக்கும் என்பதற்காக நடிக்க தயங்கும் கதாபாத்திரங்ளை புறக்கணிக்காது தன் நடிப்பை மட்டும் நம்புகிற நடிகராக வளர்ந்து நிற்கும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான படங்கள் அவுட் ரேட் அடிப்படையில் வியாபாரமானதில்லை.

    கருப்பன் 2017ல் ரீலீஸ் ஆன இந்த படம் தமிழ்நாடு உரிமை மட்டும் அவுட் ரேட் அடிப்படையில் வியாபாரமான படம். அதனை வாங்கியவருக்கு குறைந்த அளவு நஷ்டம் ஏற்பட்டது.

    விஜய் சேதுபதி நடிப்பில் இன்று வெளியாகியுள்ள படம் ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன். அவருடன் கவுதம் கார்த்திக், நிகாரிகா, காயத்ரி, விஜி சந்திரசேகர், ரமேஷ் திலக் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைத்துள்ளார், பி.ஆறுமுக குமார் இயக்கி உள்ளார்.

    7ஜி எண்டர்டெயின்மெண்ட், அம்மா நாராயணா புரொடக்க்ஷன் சார்பில் கணேஷ் காளிமுத்து, ரமேஷ் காளிமுத்து மற்றும் இயக்குனர் ஆறுமுககுமார் மூவரும் இணைந்து தயாரித்துள்ளனர்.

    கெளதம் கார்த்திக் காதலிக்கும் பெண்ணை விஜய் சேதுபதி கடத்தி விடுகிறார். அதனால் 10க்கும் மேற்பட்ட கெட் அப்களில் படத்தில் வலம் வருகிறார். இதனால் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. விஜய் சேதுபதி நடித்து வெளியான படங்கள் தமிழ் நாட்டில் அதிகபட்சம் 8 கோடிக்கு மேல் வருமானத்தைக் கொடுத்தது இல்லை.

    இருப்பினும் ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படம் தமிழ்நாடு உரிமை பத்துகோடி ரூபாய்க்கு அவுட்ரேட் அடிப்படையில் விற்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

    அதே போன்று அதிக திரைகளில் வெளியாகும் விஜய் சேதுபதி நடித்துள்ள படம் இதுதான். இன்று (2ந் தேதி) தமிழ் நாட்டில் மட்டும் 350 தியேட்டர்கள் வரை திரையிடப்பட ஒப்பந்தங்கள் போடப்பட்டு வருகிறது.

    இந்த படத்தை வாங்கி வெளியிடும் கிளாப் போர்ட் புரொடகக்ஷ்ன் வி.சத்யமூர்த்தி கூறியதாவது: இதுவரை நான் ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் படத்தைப் பார்க்கவில்லை. விஜய் சேதுபதி மீது முழு நம்பிக்கை இருக்கிறது. விஜய்சேதுபதி - கெளதம் கார்த்திக்கின் இந்த புதிய கூட்டணி எல்லா தரப்பு ரசிகர்களாலும் வரவேற்கப்படும் என்கிறார்.

    குடும்பங்கள் விரும்பும் ஹீரோக்கள் பட்டியலில் விஜய் சேதுபதிக்கு இடம் இருந்தாலும் இவர் பிற ஹீரோக்களுடன் இணைந்து நடிக்கும் போது கிடைக்கும் வருமானம் தனியாக வருவதில்லை என்கிற குறை விநியோகஸ்தர்கள் மத்தியில் உள்ளது. அந்த குறையை இந்தப் படம் போக்குமா? ஆண்டின் முதல் வெற்றிப் படம் என்ற பெருமையைப் பெறுமா...?

    Read more about: review vijay sethupathy
    English summary
    Vijay Sethupathy's Oru Nalla Naal Paarthu Solren is releasing in big way today.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X