தொடரும் சோகம்.. ஒரேநாளில் 3 பேர்.. தயாரிப்பாளர் இப்ராஹிம் மரணம்: ஈட்டியாய் பாயகிறது.. டிஆர் இரங்கல்!

சென்னை: தமிழ் சினிமாவின் மூத்த தயாரிப்பாளரும் இயக்குநருமான இப்ராஹிம் உடல்நலக்குறைவால் காலமானார்.

1980 ஆம் ஆண்டு டி ராஜேந்தர் இயக்கத்தில் வெளியான படம் ஒரு தலை ராகம். மயிலாடுதுறை சுற்றுவட்டார பகுதியில் காட்சியாக்கப்பட்ட இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்தப் படத்தை தயாரிப்பாளர் இப்ராஹீம் தயாரித்தார். இப்படம் பெரும் வெற்றி பெற்றது.

வயது மூப்பு..

வயது மூப்பு..

இந்நிலையில் இப்படத்தை தயாரித்த தயாரிப்பாளர் இப்ராஹிம் இன்று காலமானார். வயது மூப்பு காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த இப்ராஹிம் இன்று காலை உயிரிழந்தார்.

ஒரு தலை ராகம்

ஒரு தலை ராகம்

இப்ராஹிம் மயிலாடுதுறையை அடுத்த வடகரையை சேர்ந்தவர். டி ராஜேந்தரின் ஒரு தலை ராகம் படத்தை தயாரித்ததோடு அவரோடு இணைந்து இந்தப் படத்தை இயக்கியும் இருந்தார் இப்ராஹிம்.

ஈட்டியாய் பாய்கிறது

ஈட்டியாய் பாய்கிறது

இந்நிலையில் அவர் காலமான தகவலை அறிந்த டி ராஜேந்தர், அறிக்கை மூலம் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். அவர் தனது அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, "1980ம் ஆண்டு வெளியான என் முதல் படமான 'ஒரு தலை ராகம்' படத்தின் தயாரிப்பாளர் திரு E.M.இப்ராஹிம் அவர்கள் மறைந்துவிட்டார் என்ற செய்தி என் இதயத்தில் ஈட்டியாய் பாய்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

Recommended Video

Actor Pandu Passed Away | நகைச்சுவை நடிகர் பாண்டு காலமானார்
திரைத்துறையினர் அதிர்ச்சி

திரைத்துறையினர் அதிர்ச்சி

ஏற்கனவே இன்று ஒரே நாளில் நடிகர் பாண்டு, பாடகர் கோமகன் ஆகியோர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். அந்த அதிர்ச்சியில் இருந்து தமிழ் சினிமா மீள்வதற்குள் தயாரிப்பாளர் இப்ராஹிம் மரணமடைந்திருப்பது தமிழ் திரைத்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

More from Filmibeat

Read more about: oru thalai ragam t rajender
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X