twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஹார்ட் அட்டாக் வந்தது போல் உள்ளது... மணல் நகரம் இசை வெளியீட்டில் உணர்ச்சி வசப்பட்ட தும்பு கைலாஷ்!

    |

    சென்னை: கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னையில் மணல்நகரம் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.

    இப்படத்தின் இயக்குநர் சங்கர் ஒரு தலை ராகம் படத்தில் நாயகனாக நடித்தவர். எனவே, இந்த இசை வெளியீட்டு விழாவிற்கு ஒரு தலை ராகம் படக்குழுவினரை அழைத்து விழாவை வித்தியாசமாக நடத்தினார்.

    விழாவில் பேசிய அனைவருமே தங்களது ஒரு தலை ராகம் படப்பிடிப்பை பற்றிய நினைவலைகளைப் பகிர்ந்து கொண்டனர்.

    பள்ளி நாடகம்...

    பள்ளி நாடகம்...

    விழாவில் நடிகர் தியாகு பேசுகையில், ‘இவன் ராஜா (டி.ஆர். ) எங்கள் பக்கத்து வீட்டுக்காரன். ஒரே பள்ளியில் ஒன்றாகப் படித்தோம். பள்ளியில் நாலாம் வகுப்பு படித்த போதே போர்வையை கட்டி நாடகம் போட்டோம்.

    சினிமா வாழ்க்கை...

    சினிமா வாழ்க்கை...

    'ஒருதலை ராகம்'படத்தை மறக்க முடியாது. அதை வைத்துதான் 34 ஆண்டுகளாக என் சினிமா வண்டி ஓடுகிறது.

    கைவிடவில்லை...

    கைவிடவில்லை...

    அப்போது சினிமாவுக்கு வந்ததற்கு போகக் கூடாது என்று வீட்டில் மிரட்டினார்கள். துணிந்து சினிமாவுக்கு வந்தேன். சினிமா என்னைக் கைவிடவில்லை." என்றார்..

    நன்றி...

    நன்றி...

    அதனைத் தொடர்ந்து தும்பு கைலாஷ் பேசுகையில், ‘ஒருதலை ராகம்'படத்தை வைத்து 90 படங்கள் நடித்துவிட்டேன். நான் இப்போது திருவனந்தபுரத்தில் இருக்கிறேன்.இன்று எங்களை ஒன்றாக இணைத்து வைத்த சங்கருக்கு நன்றி.

    ஹார்ட் அட்டாக்...

    ஹார்ட் அட்டாக்...

    இப்போது என்னால் பேசமுடியவில்லை. கொஞ்ச காலம் முன் எனக்கு முதல் ஹார்ட் அட்டாக் வந்தது பிழைத்து விட்டேன். இன்றைக்கு 2 வது ஹார்ட் அட்டாக் வந்தது போல இருக்கிறது. உறைந்து போய் நிற்கிறேன். பேசமுடியவில்லை' என உணர்ச்சி வசப்பட்டார்.

    நெகிழ்ச்சி...

    நெகிழ்ச்சி...

    அதனைத் தொடர்ந்து, ஒரு தலை ராகம் பட நாயகி ரூபா பேசும்போது, ‘இப்போது என்ன பேசுவது என்றே புரியவில்லை. நெகிழ்ச்சியாக இருக்கிறது.

    காலேஜ் பிக்னிக்...

    காலேஜ் பிக்னிக்...

    நேற்று நடந்தது போல இருக்கிறது. 'ஒருதலை ராகம்' படத்தில் நடித்தது. காலேஜ் பிக்னிக் போல போய் வந்தோம்.

    நநடிக்க வைப்பார்...

    நநடிக்க வைப்பார்...

    ஒவ்வொரு ஷாட் எடுக்கும் போதும் ராஜேந்தர் மியூசிக் போட்டுக் கொண்ட நடிக்கவைப்பார்.

    இது தான் குறை...

    இது தான் குறை...

    படத்தில் அருமையான பாடல்கள்.ஆனால் ஒரு குறை எனக்குப்பாட ஒரு பாட்டு கூட இல்லை.

    வெற்றி விழா...

    வெற்றி விழா...

    'மணல் நகரம்' மீண்டும் நம்மை இணைத்துள்ளது. இதன் வெற்றிவிழாவில் மீண்டும் சந்திப்போம். அதற்காகவாவது இந்தப்படம் ஓட வேண்டும்'' எனத் தெரிவித்தார்.

    சந்தோஷமான தருணம்...

    சந்தோஷமான தருணம்...

    ஜே எஸ் கே சதிஷ்குமார் பேசும்போது " சமீபத்தில்20 வருஷத்துக்கு முந்தைய பள்ளி நண்பர்களை சந்தித்தபோதே சந்தோஷமாக இருந்தத .தாங்க முடியவில்லை.இது உண்மையிலேயே சந்தோஷமான நெகிழ்ச்சியான தருணம்' எனக் கூறினார்.

    English summary
    The Oru thalai ragam team gathered at the audio release of Manal Nagaram film. In which T.Rajendar released the audio.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X