twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஒருதலை ராகம் சங்கர் இயக்கும் முதல் தமிழ்ப் படம்.. மணல் நகரம்!

    By Shankar
    |

    ஒருதலை ராகம் ஹீரோ சங்கரை நினைவிருக்கிறதா... தொடர்ந்து சில தமிழ்ப் படங்களில் நடித்தவர், பின்னர் முழுசாக மலையாளத்திலேயே நடித்துக் கொண்டிருந்தார்.

    கிட்டத்தட்ட 225 படங்கள் நடித்துள்ள சங்கர், நடித்த சமீபத்திய தமிழ்ப் படம் மது. இப்போது ஒரு இயக்குநராக தமிழில் அறிமுகமாகிறார் சங்கர்.

    மணல் நகரம்

    மணல் நகரம்

    தான் தமிழில் இயக்கும் முதல் படத்துக்கு மணல் நகரம் என்று தலைப்பு வைத்திருக்கிறார் சங்கர்.

    டி ஜே எம் அசோசியேட்ஸ் என்ற நிறுவனம் சார்பாக எம் ஐ வசந்தகுமார் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

    பிரஜின்

    பிரஜின்

    சன் மியூசிக் புகழ் பிரஜின், கௌதம் கிருஷ்ணா, தேஜஸ்வினி ஆகியோர் நடிக்கின்றனர். துபாயைச் சேர்ந்த வருணா ஷெட்டி புதுமுக நாயகியாக அறிமுகம் ஆகிறார்.

    துபாயில் 50 நாட்கள்

    துபாயில் 50 நாட்கள்

    இந்தப் படத்துக்காக துபாயில் 50 நாட்கள் படப்பிடிப்பு நடத்தி புதிய சாதனை படைத்துள்ளார் சங்கர். இதுகுறித்து அவர் கூறுகையில், "பொதுவா பாட்டு அல்லது சில காட்சிகளுக்காகத்தான் துபாய் வருவாங்க. ஆனா நாங்கதான் முழுதாக ஐம்பது நாட்கள் துபாயில் தங்கி மணல் நகரத்தைப் படமாக்கி வந்திருக்கிறோம். துபாயின் சட்டதிட்டங்களுக்கு நடுவே ஐம்பது நாட்கள் படப்பிடிப்பு எத்தனை பெரிய சாதனை என்பதை திரையுலகினர் அறிவார்கள்," என்றார் சங்கர்.

    மீண்டும் தமிழில் நடிக்க ஆர்வம்...

    மீண்டும் தமிழில் நடிக்க ஆர்வம்...

    தமிழில் நீண்ட இடைவெளி ஏன் என்று கேட்டதற்கு, "மலையாளத்தில் நடித்துக்கொண்டுதான் இருக்கிறேன். எல்லாம் சரியாக அமைந்தால் தமிழில் நடிப்பேன். மணல் நகரத்தில் கூட ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். துபாயில் வசிக்கும் எனது நண்பர் முரளிராமன் இலாயத்தின் கதைக்கு எனது சென்னை நண்பரும் படத்தின் தயாரிப்பாளருமான எம். ஐ. வசந்த் திரைக்கதை அமைத்துத் தந்தார். நான் இயக்கியுள்ளேன்,'' என்றார்.

    என்ன கதை?

    என்ன கதை?

    படத்தின் கதை குறித்து கூறுகையில், "வேலைக்காக, குடும்பத்தின் முன்னேற்றத்திற்காக புலம் பெயர்ந்து வெளிநாடுகளுக்குச் செல்லுபவர்கள் படும் பாடு மிகக் கொடியது. தவிர, கடுமையான சட்டதிட்டங்களுக்கு நடுவே அவர்கள் வாழும் வாழ்க்கை.. குடும்பத்தைப் பிரிந்து பாசத்தால் படும் அவதி பாதி, அங்கு வாழப் போராடும் அவர்களின் போராட்டம் மீதின்னு போகும்... ஐம்பது நாட்கள் துபாயில் படப்பிடிப்பு முடிந்தது.. இன்னும் பத்து நாட்கள் சென்னையில் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. மணல் நகரத்தை கமர்ஷியலாக, பிரமாண்டமாக உருவாக்கியுள்ளோம்.

    'மணல் நகரம்' - காதல் மற்றும் சில வலிகளையும் சுமந்து பேசும். அது நிறைய மனங்களுக்கு ஆறுதலையும் சொல்லும்,'' என்றார்.

    புது இசையமைப்பாளர்

    புது இசையமைப்பாளர்

    இந்தப் படத்தில் ரெனில் கவுதம் என்பவர் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். வேலுமணி வசனம் எழுதுகிறார்.

    சங்கர் தமிழில் இயக்குவது இதுதான் முதல் முறை என்றாலும், அவர் ஏற்கெனவே மலையாளத்தில் வைரஸ், கோளோற்சவம் 2009 ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

    Read more about: tamil cinema
    English summary
    Oruthalai Ragam fame Sankar is directing his first Tamil Movie Manal Nagaram.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X