ஆஸ்கர் 2020: இந்த ஆண்டின் சிறந்த துணை நடிகர் நடிகை விருதை தட்டப்போவது யார்.. ஹெவி காம்பிடிஷன் போல!

சென்னை: ஆஸ்கர் விருது விழா இந்திய நேரப்படி அமெரிக்காவில் நாளை காலை நடைபெற உள்ள நிலையில் நாமினேஷன் லிஸ்ட்டில் இடம்பெற்றுள்ள துணை நடிகர்கள் மற்றும் நடிகைகள் யார் என்ற தகவலை இங்கு காணலாம்.

92வது ஆஸ்கர் விருது விழா இந்திய நேரப்படி நாளை காலை நடைபெறுகிறது. உலமே ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது.

ஆஸ்கர் விருதுக்காக நாமினேட் செய்யப்பட்டுள்ள, படங்கள், நடிகர்கள், நடிகைகள், துணை நடிகர்கள் துணை நடிகைகள், தொழில் நுட்ப கலைஞர்கள், இசையமைப்பாளர்கள், இயக்குநர்கள் என ஒவ்வொருவரின் பட்டியலும் வெளியாகி பிபியை எகிற வைத்து வருகிறது.

களைக்கட்டும் ஏற்பாடு

களைக்கட்டும் ஏற்பாடு

ஆஸ்கர் விருது விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறுகிறது. இதனால் விழா நடைபெறும் டால்பி திரையரங்கம் விழாக்கோலம் பூண்டுள்ளது. சிவப்புக்கம்பள ஏற்பாடு, விருந்து நிகழ்ச்சி என களைகட்டியிருக்கிறது அந்த பகுதி. உலக நாடுகளை சேர்ந்த திரை நட்சத்திரங்கள் பலரும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு குவிந்து வருகின்றனர்.

சிறந்த துணை நடிகர்கள்

சிறந்த துணை நடிகர்கள்

நாளை ஆஸ்கர் விருது வழங்கப்பட உள்ள நிலையில் துணை நடிகர்கள் மற்றும் துணை நடிகைகளின் நாமினேஷன் பட்டியல் குறித்த தகவலை பார்க்கலாம். சிறந்த துணை நடிகருக்கான நாமினேஷன் பட்டியல் மற்றும் சிறந்த துணை நடிகைக்கான நாமினேஷன் பட்டியலில் தலா 5 பேர் இடம்பெற்றுள்ளனர். அவர்கள் யார் எந்த படங்களுக்காக நாமினேட் செய்யப்பட்டுள்ளார்கள் என்ற விபரம்..

தி ஐரிஷ் மேன்

தி ஐரிஷ் மேன்

ஏ பியூட்டிஃபுல் டே இன் தி நெய்பர்ஹுட் என்ற படத்திற்காக நடிகர் டாம் ஹேங்ஸின் பெயர் நாமினேட் செய்யப்பட்டிருக்கிறது. அடுத்த தி டூ போப்ஸ் படத்திற்காக நடிகர் அன்டானி ஹாப்கின்ஸ் பெயர் நாமினேஷன் லிஸ்ட்டில் இடம் பெற்றுள்ளது. இதேபோல் நடிகர்கள் அல் பேஸினோ மற்றும் ஜோ பேஸி ஆகியோரின் பெயர்கள் தி ஐரிஷ் மேன் படத்திற்காக நாமினேட் செய்யப்பட்டுள்ளன. ஒன்ஸ் அபான் எ டைம் என் ஹாலிவுட் என்ற படத்திற்காக நடிகர் பிராட் பிட்டின் பெயர் இடம் பெற்றிருக்கிறது.

சிறந்த துணை நடிகைகள்

சிறந்த துணை நடிகைகள்

இதேபோல் சிறந்த துணை நடிகைக்கான விருதை வெல்ல போவது யார் என்ற எதிர்பார்ப்பும் எகிறியிருக்கிறது. சிறந்த துணை நடிகைக்கான பட்டியலிலும் ஐந்து நடிகைகள் இடம்பெற்றுள்ளனர். ரிச்சர்டு ஜிவெல் படத்திற்காக காதி பேட்ஸின் பெயர் நாமினேட் செய்யப்பட்டுள்ளது. அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் மேரேஜ் ஸ்டோரி படம் சிறந்த துணை நடிகைக்கான பட்டியலிலும் இடம் பெற்றிருக்கிறது. மேரேஜ் ஸ்டோரி படத்திற்காக நடிகை லாரா டெர்ன் பெயர் நாமினேட் செய்யப்பட்டுள்ளது.

நாமினேஷன் லிஸ்ட்

நாமினேஷன் லிஸ்ட்

ஜோஜோ ராபிட் படத்திற்காக நடிகை ஸ்கார்லெட் ஜோஹான்சன் பெயர் நாமினேட் செய்யப்பட்டுள்ளது. லிட்டில் வுமன் படத்திற்காக நடிகை ஃபுளாரன்ஸ் பக்கின் பெயர் நாமினேஷன் லிஸ்ட்டில் இடம் பெற்றிருக்கிறது. நடிகை மார்கட் ராபியின் பெயர் பாம்ஷெல் படத்திற்காக நாமினேட் செய்யப்பட்டுள்ளது. இதில் மேரேஜ் ஸ்டோரி, லிட்டில் வுமன், பாம்ஷெல், ஜோஜோ ராபிட் ஆகிய படங்கள் வேறு சில பிரிவுகளில் விருது நாமினேஷன் லிஸ்ட்டில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X