ஆஸ்கர் மேடையை தெறிக்கவிட்ட நாட்டு நாட்டு பாடல்... தீபிகா படுகோன் சொன்ன அந்த வார்த்தை..!

லாஸ் ஏஞ்சல்ஸ்: 95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா இந்திய நேரப்படி இன்று காலை நடைபெற்றது.

ராஜமெளலியின் ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் விருதை வென்றது.

முன்னதாக தீபிகா படுகோனின் அறிமுகத்தோடு ஆஸ்கர் மேடையில் நாட்டு நாட்டு பாடல் Live-ஆக பெர்பாமன்ஸ் செய்யப்பட்டது.

நாட்டு நாட்டு பாடலுக்கு ஆட்டம் போட்டு முடிந்ததும் மொத்த அரங்கமும் எழுந்து நின்று கைகளை தட்டி ஆர்ப்பரித்தது.

 ஆஸ்கர் விழாவில் தீபிகா படுகோன்

ஆஸ்கர் விழாவில் தீபிகா படுகோன்

2023ம் ஆண்டுக்கான 95வது ஆஸ்கர் விருது விழா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. டால்பி தியேட்டரில் நடைபெற்ற இந்த விருது விழாவை பிரபல ஹாலிவுட் நடிகர் ஜிம்மி கிம்மல் தொகுத்து வழங்கினார். முன்னதாக இந்த விழாவில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

 தெறிக்கவிட்ட நாட்டு நாட்டு பாடல்

தெறிக்கவிட்ட நாட்டு நாட்டு பாடல்

ரெட் கார்பெட்டில் கறுப்புச் சிலையாக வலம் வந்த தீபிகா படுகோன், அதன் பின்னர் ஆஸ்கர் மேடையேறினார், ராஜமெளலியின் ஆர்ஆர்ஆர் படத்தையும் அதில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் குறித்தும் அறிமுகம் கொடுத்தார். முக்கியமாக இந்தப் பாடலின் கோரியோகிராஃபி, யூடியூப்பில் வந்த வீவ்ஸ், ரீல்ஸில் ரசிகர்கள் ஆடிப்பாடியது என வரிசையாக அடுக்கினர். தீபிகா படுகோன் ஆர்ஆர்ஆர் பற்றி பேசும் போது ரசிகர்கள் அவரை பேசவிடாமல் ஆரவாரம் செய்தது குறிப்பிடத்தக்கது.

 எழுந்து நின்று கரகோஷம்

எழுந்து நின்று கரகோஷம்

அதன்பின்னர் 'நாட்டு நாட்டு' பாடல் ஆஸ்கர் மேடையில் அரங்கேற்றப்பட்டது. ராகுல் சிப்லிகஞ்ச், கால பைரவா இருவரும் நாட்டு நாட்டு பாடலை லைவ்வாக பாடி அசத்தினர். அதற்கு நடனக் கலைஞர்கள் ஆட்டம் போட்டது ஒட்டுமொத்த ரசிகர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தியது. நாட்டு நாட்டு பாடல் பெர்ஃபாமன்ஸ் முடிந்ததும் ஆஸ்கர் விருது விழா அரங்கத்தில் அமர்ந்திருந்த ஒட்டுமொத்த பிரபலங்களும் எழுந்து நின்று கை தட்டி ஆர்ப்பரித்தனர். இந்த வீடியோவை இந்திய ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

 இரண்டு முறை அரங்கேற்றம்

இரண்டு முறை அரங்கேற்றம்

நாட்டு நாட்டு பாடல் விருது வழங்கும் முன்பும் ஒருமுறை ஆஸ்கர் மேடையில் அரங்கேறியது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய ஜிம்மி கிம்மலை, நாட்டு நாட்டு பாடலுக்கு ஆட்டம் போட்டு நடனக் கலைஞர்கள் ஓரங்கட்டினர். ஆஸ்கர் விருது அறிவிப்புகள் தொடங்க உள்ளதாக ஜிம்மி கிம்மல் அறிவித்ததும், திடீரென மேடைக்கு சென்ற சில நடனக் கலைஞர்கள், ஆர்ஆர்ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆட்டம் போட்டது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X