வகை வகையான உணவு.. மாதம்பட்டி ரங்கராஜின் சமையல்.. எம்.எம்.கீரவாணியின் மகன் திருமண வரவேற்பு விருந்து!
சென்னை ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணியின் இளைய மகனுக்கும் பழம்பெரும் நடிகரும் அரசியல்வாதியுமான முரளி மோகனின் பேத்தி ராக மகந்தியுடன் கடந்த மாதம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் திருமணம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து ஹைதராபாத்தில் நடைபெற்ற வரவேற்பில் மாதம்பட்டி ரங்கராஜின் விதவிதமான உணவுகள் இடம்பெற்றுள்ளன.
ராஜமௌலி இயக்கத்தில் 2022ம் ஆண்டு வெளியானத் திரைப்படம் ஆர்ஆர்ஆர். இப்படத்தில் ராம்சரண், ஜூனியர் என் டிஆர், ஆல்யா பட், சமுத்திரக்கனி என பலர் நடித்திருந்தனர். ராம்சரண், ஜூனியர் என் டிஆர், நெருங்கிய நண்பர்களாக நடித்திருந்தனர். படம் மெகா ப்ளாக் பஸ்டர் அடித்தது. மேலும் வசூல் ரீதியாகவும் படத்துக்கு மக்களிடம் இருந்து ரெஸ்பான்ஸ் கிடைத்தது. படத்துக்கு எம்.எம்.கீரவாணி இசையமைத்திருந்தார். படத்தின் பாடல்களும் சூப்பர் ஹிட்டடித்தன. முக்கியமாக நாட்டு நாட்டு பாடலுக்காக கீரவாணி ஆஸ்கர் விருதையும் கோல்டன் குளோப் விருதுகளையும் வென்றார்.

எம்.எம்.கீரவாணியின் திருமண வரவேற்பு: இந்நிலையில்,எம்.எம்.கீரவாணியின் இளைய மகன் ஸ்ரீ சிம்ஹாவுக்கு நிச்சயதார்த்தம் நவம்பர் மாதம் நடைபெற்றது. திருமணத்திற்கு முந்தைய வைபவங்கள் ஹைதராபாத்தில் உள்ள கோல்கொண்டா ரிசார்ட்ஸில் இரவு சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மகேஷ் பாபு, எஸ்.எஸ்.ராஜமௌலி, எம்.எம்.கீரவாணி, வி.கே.நரேஷ், பவித்ரா லோகேஷ், மற்றும் ரகுராம கிருஷ்ணம் ராஜு போன்ற முக்கிய பிரமுகர்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர். இந்த கொண்டாட்டத்தின் புகைப்படங்கள் இணையத்தில் டிரெண்டானது. இதையடுத்து, டிசம்பர் 14ந் தேதி, ஐக்கிய அரபு எமிரேட்லில் இவர்களின் திருமணம் நடைபெற்றது. இந்த திருமண விழாவில், ராஜமொளலி கலந்து கொண்டு அட்டகாசமாக நடனம் ஆடி இருந்தார்.
மாதம்பட்டி ரங்கராஜின் உணவு பட்டியல்: ஐக்கிய அரபு எமிரேட்லில் திருமணம் நடைபெற்றதைத் தொடர்ந்து தற்போது ஹைதராபாத்தில் திருமண வரவேற்பு நடைபெற உள்ளது. அந்த வரவேற்பிற்காக மாதம்பட்டி ரங்கராஜின் விதவிதமான உணவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் என்னென்ன உணவு பரிமாரப்பட உள்ளதாக அவர் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், மினி கீ ஜிலேபி, வால்நட் பிக் பர்பி, மதுரை ஸ்பெஷல் மட்டன் கீமா, ஸ்பைசி பெரி பெரி சிக்கன், மட்டன் வறுவல், பிரான் தொக்கு, வஞ்சரம் மீன் வறுவல், கிராப் லாலி பப், தென்னக்குறுத்து தோரன், பீன்ஸ் பருப்பு உசிலி, செட்டிநாடு லிவர் சாப், திருநெல்வேலி அவியல், கேரள கேரட் பச்சடி, செட்டிநாடு மா இஞ்சி புளி மண்டி, பன் பரோட்டா, பள்ளிப்பாளையம் நாட்டுக்கோழி குழப்பு, மாதம்பட்டி ஸ்பெஷல் தம் பிரியாணி, கொங்குநாடு மட்டன் குழம்பு, சின்ன வெங்காயம் முருங்கைக்காய் சாம்பார், மலபார் மீன் குழம்பு, எண்ணை கத்திரிக்காய் குழம்பு என வரவேற்புக்கான உணவு பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.


Click it and Unblock the Notifications











