twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆஸ்கர்காரன் செமயா அசிங்கப்பட யார் காரணம் தெரியுமா?

    By Siva
    |

    லாஸ் ஏஞ்சல்ஸ்: ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த படத்திற்கான விருது தவறாக அறிவிக்கப்பட்டதற்கு பொறுப்பேற்று பிரைஸ்வாட்டர் ஹவ்ஸ் கூப்பர்ஸ் ஆடிட்டிங் நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது.

    89வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்று நடைபெற்றது. விழாவில் சிறந்த படத்திற்கான விருது தவறுதலாக லா லா லேண்ட் படத்திற்கு அளிக்கப்பட்டது.

    பின்னர் அந்த விருதை வாங்கி மூன்லைட் படக்குழுவிடம் அளிக்கப்பட்டது.

    தவறு

    தவறு

    பிரைஸ்வாட்டர்ஹவுஸ் கூப்பர்ஸ் மற்றும் மார்தா அக்கவுண்டிங் நிறுவன ஆட்கள் விருது வென்றவர்களின் பெயர்கள் அடங்கிய கவர்களை இரு பெட்டிகளில் போட்டு மேடையின் இரு ஓரங்களிலும் நின்றார்கள். அதில் பிரைஸ்வாட்டர்ஹவுஸ் நிறுவன ஆள் தான் தவறான கவரை நடிகர் வாரன் பெட்டியிடம் அளித்தது.

    மன்னிப்பு

    மன்னிப்பு

    ஆஸ்கர் விழாவில் சொதப்பியதற்கு பொறுப்பேற்று பிரைஸ்வாட்டர்ஹவுஸ் கூப்பர்ஸ் நிறுவனம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளது. நடிகர் வாரனிடம் தவறான கவரை அளித்ததையும் ஒப்புக் கொண்டுள்ளது.

    வாரன்

    வாரன்

    வாரனிடம் அளிக்கப்பட்ட கவரில் எம்மா ஸ்டோன், லா லா லேண்ட் என்று எழுதியிருந்தது. சிறந்த படத்திற்கான விருதுக்கு எப்படி எம்மாவின் பெயர் வரும் என்று வாரன் விழித்தார்.

    டிரம்ப்

    டிரம்ப்

    ஆஸ்கர் விழாவில் அமெரிக்க அதிபர் டிரம்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய ஜிம்மி டிரம்பை கலாய்க்க கடைசியில் டிரம்ப் அவர்களை கலாய்க்கும்படியாகிவிட்டது.

    English summary
    Accounting firm, PricewaterhouseCoopers has appologised for the goofup in the Oscars function held in Los Angeles today.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X