விஜய் மெச்சூரிட்டியான நடிகர் இல்லை.. அந்த விசயத்தில் அஜித்திற்கு பாராட்டு - பிரபல தயாரிப்பாளர் ஓபன்!
சென்னை: தமிழ் சினிமாவில் அஜித் - விஜய் என்றாலே தொழிலில் போட்டியாளர்களாக உள்ள நடிகர்கள் என்ற சூழலை தமிழ் சினிமா உலகமும் இவர்களது ரசிகர்களும் ஏற்படுத்தியுள்ளனர். இப்படியான நிலையில் நடிகர் அஜித்தின் செயல்பாடுகளுக்கும் முடிவுகளுக்கும் பாராட்டுகளைத் தெரிவித்தும், நடிகர் விஜய்க்கு மெச்சூரிட்டி இல்லை எனவும் பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு கூறியுள்ளார். இது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது. இது குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்
தமிழ் சினிமாவைப் பொறுத்தவரையில் பல நடிகர்கள் தங்களது பெயருடன் அடைமொழியையும் சேர்த்து போட்டுக் கொள்கின்றார்கள். இந்த வழக்கம் என்பது பிளாக் அண்ட் ஒய்ட் காலகட்டத்தில் இருந்து இப்போது வரை இருக்கின்றது. தற்போது ரஜினிகாந்த் என்றால் சூப்பர் ஸ்டார் என்றும் கமல்ஹாசன் என்றால் உலகநாயகன் என்றும் அடைமொழிகள் உள்ளது. இப்படியான நிலையில் இவர்கள் இருவருக்கும் வேறு பெயர்களும் உள்ளது. அதாவது ரஜினிகாந்த் என்றால் அவரை தலைவர் என அழைப்பதும், கமல்ஹாசன் என்றால் அவரை ஆண்டவர் என அழைப்பதும் ரசிகர்கள் மத்தியில் பல ஆண்டுகளாக உள்ளது.

இந்நிலையில் கமல்ஹாசன் தனது 70வது பிறந்த நாளுக்கு அடுத்த நாளில் தன்னை யாரும் உலகநாயகன் என்று அழைக்க வேண்டாம் எனத் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் அதில், தன்னை இனிமேல் ரசிகர்கள் கமல்ஹாசன் என்றோ அல்லது K.H என்றோ அழைக்கலாம் எனத் தெரிவித்துள்ளார். கமல்ஹாசன் இவ்வாறு தெரிவித்தது ரசிகர்கள் மத்தியில் கொஞ்சம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனாலும் பரவலாக பாராட்டுகளையும் பெற்றார்.
அஜித்: இது தொடர்பாக பிரபல தயாரிப்பாளர், பாலாஜி பிரபு பேசுகையில், " கமல்ஹாசனுக்கு 70 வயதில் இப்படியான மெச்சூரிட்டி வந்தது எனக்கு ஆச்சரியத்தைக் கொடுக்கவில்லை. ஆனால் பராட்டுகின்றேன். அதேநேரத்தில் நடிகர் அஜித் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு முன்பே தன்னை யாரும் அல்டிமேட் ஸ்டார் என அழைக்கவேண்டாம் எனக் கூறிவிட்டார். மேலும் தனது ரசிகர்கள் மன்றங்களைக் கலைத்தும்விட்டார். ஆனால் அவரது வியாபாரம் என்பது இப்போதுவரை உச்சத்தில்தான் உள்ளது. அஜித்துக்கு அந்த மெச்சூரிட்டி என்றோ வந்துவிட்டது. அதனால்தான் தன்னை யாரும் 'தல' என்று கூட அழைக்கவேண்டாம் எனக் கூறினார். இதுபோன்ற செயலுக்காகவே அஜித்தை பாராட்டலாம்.

மெச்சூரிட்டி: ஆனால் நடிகர் விஜய் அப்படியான மெச்சூரிட்டியான நடிகர் என்று கூறமாட்டேன். காரணம் விஜய் சினிமாவுக்கு வந்து கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் ஆகிவிட்டது. தொடக்கத்தில் இளைய தளபதியாக இருந்த விஜய், தற்போது தனது அடைமொழியை தளபதி என மாற்றிக்கொண்டுள்ளார். இது மெச்சூரிட்டியா? மெச்சூரிட்டி என்பது வயதுக்கான செயல்பாடு இருக்கவேண்டும். பட்டங்களை இளைய தளபதி என்பதில் இருந்து தளபதி என மாற்றிக் கொள்வதால் அவரை மெச்சூரிட்டியான நடிகர் எனக் கூறிவிடமுடியாது.

இளைய தளபதி: இதுமட்டும் இல்லாமல், தற்போது விஜய்யின் இளைய தளபதி பட்டம் காலியாக உள்ளது. அடுத்த யார் இளைய தளபதி எனக் கேட்டால், சிவகார்த்திகேயன் வரப்போகின்றார் எனக் கூறுகின்றனர். சிவகார்த்தியன் யாரு எனக் கேட்டால் அவரை பலரும் திடீர் தளபதி என்கின்றார்கள். கோட் படத்தின் காட்சியில் சிவகார்த்திகேயன், விஜய் ஆகிவிடுவாரா? முடியாது. காரணம் மக்கள் அந்த உயரத்தில் கொண்டுபோய் வைக்க வேண்டும்" எனக் கூறினார்.



Click it and Unblock the Notifications











