விருதுகளின் மன்னன்.. 70 ஆண்டுகால சினிமா வாழ்க்கை.. பழம்பெரும் நடிகர் டீன் ஸ்டாக்வெல் காலமானார்

லாஸ் ஏஞ்சல்ஸ்: பழம்பெரும் ஹாலிவுட் நடிகர் டீன் ஸ்டாக்வெல் காலமானார். அவருக்கு வயது 85.

தனது சிறந்த நடிப்புக்காக ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர் டீன் ஸ்டாக்வெல் என்பது குறிப்பிடத்தக்கது.

குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் தொடங்கிய இவர் கிட்டத்தட்ட 70 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் அசத்தி உள்ளார்.

ஹாலிவுட் நடிகர் காலமானார்

ஹாலிவுட் நடிகர் காலமானார்

பழம்பெரும் ஹாலிவுட் நடிகர் டீன் ஸ்டாக்வெல் காலமானார். அவருக்கு வயது 85. வயது மூப்புக் காரணமாக அவர் இயற்கை எய்தினார் என அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். பழம்பெரும் நடிகரின் மறைவு ஹாலிவுட் திரையுலகை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

குழந்தை நட்சத்திரம்

குழந்தை நட்சத்திரம்

1936 மார்ச் 5ம் தேதி கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸில் பிறந்த ராபர்ட் டீன் ஸ்டாக்வெல் எம்ஜிஎம் தயாரிப்பு கம்பெனியில் குழந்தை நட்சத்திரமாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். 1945ம் ஆண்டு வெளியான Anchors Aweigh, The Green Years (1946), Gentleman's Agreement உள்ளிட்ட ஏராளமான படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

70 ஆண்டுகள்

70 ஆண்டுகள்

10 வயது முதலே சினிமாவில் நடிக்கத் தொடங்கிய இவர் 2016ல் வெளியான மேக்ஸி ரோஸ் திரைப்படம் வரை நடித்துள்ளார். கிட்டத்தட்ட 70 ஆண்டுகாலம் சினிமாவில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட நடிகர் என்கிற புகழுக்கு சொந்தக்காரர் டீன் ஸ்டாக்வெல். ஏகப்பட்ட படங்களிலும் டிவி தொடர்களிலும் இவர் நடித்துள்ளார்.

ஆஸ்கர் விருதுக்கு

ஆஸ்கர் விருதுக்கு

Long Day's Journey into Night திரைப்படத்தில் நடித்த இவருக்கு சிறந்த நடிகருக்கான விருது கான்ஸ் திரைப்பட விழாவில் வழங்கப்பட்டது. ஏகப்பட்ட சர்வதேச விருதுகளை வென்ற இவர் 1988ல் வெளியான Married to the Mob படத்திற்காக ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார். குவாண்டம் லீப், டூன், ப்ளூ வெல்வட் உள்ளிட்ட ஏகப்பட்ட சூப்பர் ஹிட் படங்களில் இவர் நடித்துள்ளார்.

பிரபலங்கள் இரங்கல்

பிரபலங்கள் இரங்கல்

ஹாலிவுட்டின் பழம்பெரும் நடிகரான டீன் ஸ்டாக்வெல் காலமான செய்தி ஹாலிவுட் பிரபலங்களையும் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. ஏகப்பட்ட பிரபலங்கள் அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தி உள்ளனர். உலகளவில் ட்விட்டர் டிரெண்டிங்கில் அவரது மறைவையடுத்து வைரலான இரங்கல் ஹாஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X