twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆஸ்கருக்கு தேர்வான செல்லோ ஷோ படத்தில் நடித்த சிறுவன் உயிரிழப்பு… பெற்றோர் எடுத்த அதிர்ச்சி முடிவு!

    |

    சென்னை: 95வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அடுத்தாண்டு மார்ச் மாதம் நடைபெறுகிறது.

    ஆஸ்கர் விருதுகளுக்காக வெளிநாட்டுப் பிரிவின் கீழ் இந்தியாவில் இருந்து குஜராத்தி மொழித் திரைப்படமான செல்லோ ஷோ தேர்வானது..

    இந்நிலையில், இந்தப் படத்தில் நடித்த 15 வயது சிறுவன் ராகுல் கோலி கேன்சர் நோயால் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ஆஸ்கருக்கு தேர்வான செல்லோ ஷோ… சினிமா பாரடைசோ படத்தின் காப்பியா?: வெளுத்துவாங்கும் நெட்டிசன்கள்ஆஸ்கருக்கு தேர்வான செல்லோ ஷோ… சினிமா பாரடைசோ படத்தின் காப்பியா?: வெளுத்துவாங்கும் நெட்டிசன்கள்

    ஆஸ்கர் செல்லும் செல்லோ ஷோ

    ஆஸ்கர் செல்லும் செல்லோ ஷோ

    ஆஸ்கர் அகாடமி விருதுகளுக்கான வெளிநாட்டு மொழி பிரிவின் கீழ், இந்தியத் திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. தமிழில் இருந்து இரவின் நிழல், இந்தியில் பதாய் தோ, ராக்கெட்ரி நம்பி, பிரம்மாஸ்திரம், தி காஷ்மீர் ஃபைல்ஸ், தெலுங்கில் ஆர்.ஆர்.ஆர் என பல படங்களுக்கு இடையே போட்டி நடைபெற்றது. ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் குஜாரத்தி மொழியில் வெளியான 'செல்லோ ஷோ' திரைப்படம் தேர்வானது. பேன் நலின் இயக்கியுள்ள இந்தப் படம், 9வயது சிறுவனின் சினிமா கனவை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ளது.

    சிறுவனுக்கு நேர்ந்த சோகம்

    சிறுவனுக்கு நேர்ந்த சோகம்

    1988ல் வெளியான சினிமா பாரடைசோ படத்தை தழுவி சொல்லோ ஷோ உருவாகியுள்ளதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர், செளராஸ்ட்ரா பகுதியில் உள்ள கிராமப்புறத்தைச் சேர்ந்த 10 வயது சிறுவன் சினிமா மீது காதல் கொள்வதும், அதன் தொடர்ச்சியாக வரும் சம்பவங்களும் தான் இந்தப் படத்தின் கதை என சொல்லப்படுகிறது.. பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டுள்ள 'சொல்லோ ஷோ' வரும் 14ம் தேதி ரிலீஸாகிறது. இந்நிலையில், செல்லோ ஷோ படத்தில் நடித்த சிறுவன் ராகுல் கோலி உயிரிழந்துள்ளது ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    கேன்சர் நோயால் பாதிப்பு

    கேன்சர் நோயால் பாதிப்பு

    செல்லோ ஷோ படத்தில் 6 சிறுவர்களின் ஒருவராக ராகுல் கோலி என்ற சிறுவனும் நடித்துள்ளார். லுகேமியா எனும் ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மரணம் அடைந்திருப்பது தற்போது தெரியவந்துள்ளது. 15 வயதாகும் ராகுல் கோலி கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்துள்ளார். கடந்த 2ம் தேதி காலை உணவு சாப்பிட்டவுடன் ராகுலுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர் ரத்த வாந்தி எடுத்த சிறுவன் ராகுல் கோலி, சிறிது நேரத்தில் உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது.

    பெற்றோர் அதிர்ச்சி முடிவு

    பெற்றோர் அதிர்ச்சி முடிவு

    வரும் 14ம் தேதி செல்லோ ஷோ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், அதற்கு முன்பே படத்தில் நடித்த சிறுவன் ராகுல் கோலி உயிரிழந்துள்ளது ரசிகர்கள், திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, 14ம் தேதி செல்லோ ஷோ படத்தை தியேட்டரில் பார்த்த பின்னரே ராகுலுக்கு இறுதிச் சடங்கை செய்யவுள்ளதாக அவரது தந்தை கண்ணீர்மல்க கூறியுள்ளார்.

    English summary
    The 95th Oscars will be held in March 2023. Chhello Show a Gujarati language film from India has been selected for the Oscars. This film will hit the theaters on the 14th. In this case, Oscar-nominated Chhello Show actor 10-year-old Rahul Koli died due to cancer. Rahul Kohli's death has caused sadness among the film industry.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X