twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆஸ்கர் நாயகனின் அடுத்த சிறப்பு.. பிரிட்டீஷ் கவுன்சிலின் புதிய முயற்சிக்கு தூதராக நியமனம்!

    |

    டெல்லி : ஆஸ்கர், கிராமி என சர்வதேச அளவில் விருதுகளை குவித்தவர் பிரபல இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான்.

    Recommended Video

    Ms Marvel-ல் Rajini-AR Rahman Song! Linga in Marvel | *Trending | OneIndia Tamil

    இவர் தொடர்ந்து பல ஆண்டுகளாக தன்னுடைய இசை சேவையை தொடர்ந்து வருகிறார். இவரது இசையில் பல பரிணாமங்களை ரசிகர்களை அனுபவித்து வருகின்றனர்.

    சர்வதேச அளவிலும் இவர் பல திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இவரது இசைக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் காணப்படுகின்றனர்.

    மறைந்த பாடகர் கேகே குறித்து ஏஆர் ரஹ்மான் உருக்கமான பதிவு மறைந்த பாடகர் கேகே குறித்து ஏஆர் ரஹ்மான் உருக்கமான பதிவு

    இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான்

    இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான்

    இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் தனது சிறப்பான இசையால் ஏராளமான ரசிகர்களை தன்வசப்படுத்தி வருகிறார். சிறுவயதிலிருந்தே இசையமைப்பில் ஆர்வம் கொண்ட ஏஆர் ரஹ்மான், தன்னுடைய தந்தையும் இசையமைப்பாளருமான சேகரிடம் பல நுணுக்கங்களை

    லண்டன் இசைக்கல்லூரியில் பயிற்சி

    லண்டன் இசைக்கல்லூரியில் பயிற்சி

    ஆரம்பத்தில் எம்எஸ்வி, இளையராஜா ஆகியோரின் இசைக்குழுவில் இவர் பணியாற்றியுள்ளார். தன்னுடைய தந்தையின் இறப்பால் பள்ளிக்கல்வியை பாதியில் நிறுத்திய ஏஆர் ரஹ்மான், பின்னாளில் லண்டன் இசைக்கல்லூரியில் ஸ்காலர்ஷிப் பெற்று இசையை பயின்றார்.

    ரோஜா படத்தில் அறிமுகம்

    ரோஜா படத்தில் அறிமுகம்

    விளம்பர படங்களுக்கு ட்யூன் போட்டுக் கொண்டிருந்தவர், மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ரோஜா படத்தின்மூலம் தன்னை சிறப்பாக வெளிப்படுத்தினார். அதன்பின்பு எல்லாமே ஏஆர் ரஹ்மானுக்கு ஏறுமுகமாகவே அமைந்தது. இந்த முதல் படத்திலேயே அவருக்கு தேசிய விருது கிடைத்தது.

    ஆஸ்கர் விருதுகள்

    ஆஸ்கர் விருதுகள்

    தொடர்ந்து தன்னுடைய ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்காக இரண்டு ஆஸ்கர் விருதுகளை பெற்று, எல்லா புகழும் இறைவனுக்கே என்று அந்த மேடையில் பேசினார். இதன்மூலம் தமிழை சர்வதேச அளவில் பிரபலப்படுத்தினார். தொடர்ந்து பல படங்களுக்கு இசையமைத்து வரும் ஏஆர் ரஹ்மான், ரசிகர்களுக்கு தன்னுடைய இசையின்மூலம் வித்தியாசமான அனுபவங்களை கொடுத்து வருகிறார்.

     கலாச்சார தூதர்

    கலாச்சார தூதர்

    அவருடைய இசை சேவைக்கு அவருக்கு பல விருதுகள், பாராட்டுக்கள், கௌரவங்கள் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பிரிட்டீஷ் கவுன்சிலின் புதிய கலாச்சார நிகழ்வின் தூதராக ஏஆர் ரஹ்மான் நியமிக்கப்பட்டுள்ளார். இரண்டு நாடுகளின் சிறப்பான கூட்டுறவின் 75வது ஆண்டு கொண்டாட்டம் தற்போது கொண்டாடப்பட்டு வருகிறது.

    புதிய முயற்சி

    புதிய முயற்சி

    இதையொட்டி கலை சார்ந்த புதிய நிகழ்வை நேற்றைய தினம் பிரிட்டீஷ் கவுன்சில் டெல்லியில் துவங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஏஆர் ரஹ்மான் நேரடியாக கலந்துக் கொள்ளவில்லை. ஆயினும் வீடியோ காலில் பேசிய அவர், இந்த நியமனம் குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதன்மூலம் கலை சார்ந்த பல விஷயங்கள் முன்னெடுக்கப்பட உள்ளன.

    English summary
    AR Rahman to be Ambassador of British council's new cultural initiative
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X