ஆஸ்கார் விருது பெற்ற இயக்குனர் பால் ஹாகிஸ்..பாலியல் குற்றச்சாட்டில் இத்தாலியில் கைது !

ரோம் : ஆஸ்கார் விருது பெற்ற இயக்குனர் பால் ஹாகிஸ் பாலியல் வன்கொடுமை வழக்கில் இத்தாலியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கனடாவில் பிறந்த 69 வயதான பால் ஹாகிஸ், இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் ஆவார்.

இவர் 2006 ஆம் ஆண்டு க்ராஷ் மற்றும் மில்லியன் டாலர் பேபி ஆகிய படத்திற்காக ஆஸ்கார் விருதை வென்றுள்ளார்.

இயக்குநர் பால் ஹாகிஸ்

இயக்குநர் பால் ஹாகிஸ்

இயக்குனர் பால் ஹாகிஸ் இத்தாலியின் ஒஸ்துனியில் தொடங்க உள்ள "அலோரா ஃபெஸ்ட்" திரைப்பட விழாவில் தலைமை தாங்குவதற்காக இத்தாலி சென்றுள்ளார். இங்கு இளம் பெண் ஒருவரின் விருப்பத்திற்கு மாறாக கட்டாயப்படுத்தி உடலுறவு வைத்துக்கொண்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக இத்தாலி போலீசார் தெரிவித்துள்ளனர்.

போலீசார் விளக்கம்

போலீசார் விளக்கம்

விசாரணையை நடத்தும் வழக்கறிஞர்கள் அன்டோனியோ நீக்ரோ மற்றும் லிவியா ஆர்லாண்டோ வெளியிட்டுள்ள அறிக்கையில், இளம் பெண் ஒருவரை இயக்குநர் ஹாகிஸ் பிரிண்டிசியில் உள்ள பப்போலா கசலே விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை மோசமான நிலையில் விட்டு சென்றுள்ளார்.

கட்டாயப்படுத்தி உடலுறவு

கட்டாயப்படுத்தி உடலுறவு

விமான நிலையத்தில், மோசமான நிலையில் இருந்த அந்த பெண்ணை விமான நிலைய ஊழியர்கள் மீட்டு ஏ. பெரினோ மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதைடுத்து, போலீசார் மேற்கொண்ட விசாரணையில், இயக்குநர் ஹாகிஸ் தன்னை கட்டாயப்படுத்தி இரண்டு நாட்கள் உடலுறவு கொண்டதாகவும், தன்னை தாக்கியதாகவும் புகார் அளித்துள்ளார். அந்த பெண் அளித்த புகாரின் பேரில் ஹாகிஸ் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஹாகிஸ் நிரபராதி

ஹாகிஸ் நிரபராதி

இயக்குனர் பால் ஹாகிஸ் கைது செய்யப்பட்டதை அவரின் வழக்கறிஞர் உறுதிப்படுத்தியுள்ளார். இத்தாலிய சட்டத்தின் படி, நான் ஆதாரங்கள் பற்றி விவாதிக்க முடியாது என்றும். ஹாகிஸ் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளும் நிராகரிக்கப்படும் என்று நான் நம்புவதாகவும், அவர் நிரபராதி உண்மையை விரைவாக வெளியில் கொண்டுவர தான் விரும்புவதாகவும் கூறியுள்ளார்.

எங்கு இருக்கிறார்

எங்கு இருக்கிறார்

இயக்குனர் பால் ஹாகிஸ் தற்போது தலைமைச் செயலகத்தில் உள்ள காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருக்கிறாரா? அல்லது ஹோட்டலில் வைக்கப்பட்டிருக்கிறாரா என்ற எந்த விவரமும் தெரியவில்லை என்று அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். பாலியல் வன்கொடுமை வழக்கில், பால் ஹாகிஸ் கைது செய்யப்பட்டுள்ளது அறிந்து பலர் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X