விஜய் சேதுபதியின் 25-வது படத்துக்கு ஆஸ்கர் வென்ற மேக்கப் மேன்!

By Vignesh Selvaraj

சென்னை : விஜய் சேதுபதியின் 25-வது படமாக உருவாக இருக்கிறது 'சீதக்காதி' திரைப்படம். 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தை இயக்கிய பாலாஜி தரணீதரன் இந்தப் படத்தை இயக்குகிறார்.

அய்யா என்கிற நாடக மேடைக் கலைஞரின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு வரும் 'சீதக்காதி' படத்தில் 75 வயது, 50 வயது மற்றும் 30 வயது என மூன்று விதமான வெவ்வேறு வயதுடைய தோற்றங்களில் நடிக்கிறார் விஜய்சேதுபதி.

இவற்றில் 75 வயதுடைய கேரக்டருக்கு ஹாலிவுட் மேக்கப்மேனை பயன்படுத்த உள்ளனர். இதற்காக விரைவில் லாஸ் ஏஞ்சல்ஸ் சென்று ஹாலிவுட் மேக்கப் கலைஞர் கிரேக் கேனம் என்பவரைச் சந்திக்கவிருக்கிறாராம் விஜய்சேதுபதி.

'மிசஸ் டவுட்பயர்', 'தி க்யூரியஸ் கேஸ் ஆப் பெஞ்சமின் பட்டன்', 'டிராகுலா' போன்ற ஹாலிவுட் படங்களுக்காக ஆஸ்கர் விருதுகளை வென்றவர் கிரேக் கேனம். ஷாருக்கானின் 'ஃபேன்' மற்றும் 'கபூர் அண்ட் சன்ஸ்' போன்ற ஹிந்தி படங்களுக்கும் மேக்கப் கலைஞராகப் பணியாற்றியுள்ளார் கிரேக் கேனம்.

Oscar winning makeup man for Vijay Sethupathi's 25th film

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X