ஆஸ்கர் வென்ற படங்கள்.. எந்தெந்த ஓடிடியில் பார்க்கலாம்னு தெரிஞ்சிக்கலாம் வாங்க!

சென்னை : நேற்றைய தினம் அதிகாலையில் 2023 ஆண்டிற்கான ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டன. இதில் ஆர்ஆர்ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடல் சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் விருது பெற்றுள்ளது.

இதையடுத்து தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ் சிறந்த ஆவணப்பட குறும்படம் பிரிவில் ஆஸ்கர் விருதை தட்டிச் சென்றது. இதையடுத்து இந்தப் படங்களுக்கு பாராட்டுக்கள் குவிந்தன.

இதனிடையே, ஆஸ்கர் வென்றுள்ள படங்களை பார்க்க ரசிகர்கள் அதிகமாக ஆர்வம் காட்டி வருகின்றனர். எந்தெந்த ஓடிடியில் இந்தப் படங்கள் உள்ளன என்பதை தெரிந்துக் கொள்வோம்.

ஆஸ்கர் விருதுகள்

ஆஸ்கர் விருதுகள்

95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நேற்றைய தினம் அமெரிக்காவின் நியூயார்க்கில் நடைபெற்றது. இந்த விழாவில் இந்திய அளவில் இரண்டு முயற்சிகள் விருதுகளை தட்டியுள்ளன. ராஜமௌலி இயக்கத்தில் வெளியாகி சூப்பர் டூப்பர் வெற்றிப் பெற்ற ஆர்ஆர்ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடல் சிறந்த ஒரிஜினல் பாடல் என்ற பிரிவில் விருதை பெற்ற நிலையில், எலிஃபண்ட் விஸ்பரர்ஸ் சிறந்த ஆவணப்பட குறும்படம் பிரிவில் ஆஸ்கர் விருதை தட்டியுள்ளது.

நெட்பிளிக்சில் வெளியான ஆர்ஆர்ஆர் இந்தி பதிப்பு

நெட்பிளிக்சில் வெளியான ஆர்ஆர்ஆர் இந்தி பதிப்பு

இந்திய அளவில் ஆஸ்கர் விருதுகளை பெற்றுள்ள இந்தப் படைப்புகளுக்கு சர்வதேச அளவில் பாராட்டுக்கள் குவிந்துள்ளன. இந்நிலையில், இந்த ஆண்டிற்கான ஆஸ்கர் விருதுகளை பெற்றுள்ள படங்களை பார்க்கும் ஆர்வம் சினிமா ரசிகர்களிடையே அதிகமாக காணப்படுகிறது. என்டிஆர், ராம்சரண் உள்ளிட்டவர்கள் நடிப்பில் வெளியான ஆர்ஆர்ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடல் சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான ஆஸ்கர் விருதை பெற்றுள்ள நிலையில், இந்தப் படத்தின் இந்தி பதிப்பு தற்போது நெட்பிளிக்சில் கிடைக்கிறது. மற்ற மொழிகளில் ஜி5 ஓடிடி தளத்தில் காணக்கிடைக்கிறது.

 நெட்பிளிக்சில் தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்

நெட்பிளிக்சில் தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்

இதேபோல சிறந்த ஆவணப்பட குறும்படம் பிரிவில் ஆஸ்கர் விருதை பெற்றுள்ள தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ் நெட்பிளிக்சில் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை கார்த்திகி கோன்ஸ்லேவ்ஸ் இயக்கியுள்ள நிலையில், குர்னீத் மோங்கா தயாரித்துள்ளார். யானைகளின் வாழ்வியலை மையமாகக் கொண்டு இந்தப் படம் வெளியாகியுள்ளது. இந்நிலையில் ஆஸ்கர் விருது பெற எந்த குறுக்குவழியும் இல்லை என்று குர்னீர் மோங்கா பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.

சோனி லைவில் எப்ரிதிங் எவிவேர் ஆல் அட் ஒன்ஸ்

சோனி லைவில் எப்ரிதிங் எவிவேர் ஆல் அட் ஒன்ஸ்

இதனிடையே இந்த ஆண்டின் ஆஸ்கர் விருதுகளை ஏழு பிரிவுகளில் வென்றுள்ள படம் எவ்ரிதிங் எவிவேர் ஆல் அட் ஒன்ஸ். இந்தப் படத்தில் சிறந்த நடிகைக்கான விருதை வென்றுள்ளார் மிச்சேல் யோவ். இவர் இந்த விருதை வென்றுள்ள முதல் ஆசிய பெண் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். சிறந்த துணை நடிகர், சிறந்த திரைப்பட தயாரிப்பாளர் என இந்தப் படம் 7 விருதுகளை வென்றுள்ள நிலையில், சோனி லைவ் ஓடிடி தளத்தில் இந்தப் படத்தை ரசிகர்களை கண்டு களிக்கலாம்.

டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் பிளாக் பாந்தர் :வகாரா ஃபாரவர்

டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் பிளாக் பாந்தர் :வகாரா ஃபாரவர்

அடுத்ததாக பிளாக் பாந்தர் :வகாரா ஃபாரவர் படம் சிறந்த ஆடைகளுக்கான ஆஸ்கர் விருதை தட்டியுள்ளது. இந்தப் படம் டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது. இதையடுத்து 4 ஆஸ்கர் விருதுகளை அள்ளியுள்ள ஆல் க்யட் ஆன் த வெஸ்டர்ன் ஃபிரண்ட் என்ற படம். இந்தப் படத்தை பார்ப்பவர்களுக்கு போர்ச்சூழலில் இருப்பதாக உணர்வு ஏற்படும். இந்தப் படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ஒளிபரப்பாகி வருகிறது.

 4 ஓடிடி தளங்களில் அவதார் : தி வே ஆஃப் வாட்டர்

4 ஓடிடி தளங்களில் அவதார் : தி வே ஆஃப் வாட்டர்

தொடர்ந்து ஜேம்ஸ் கேமரூனின் அவதார் : தி வே ஆஃப் வாட்டர் படம் சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் என்ற பிரிவில் ஆஸ்கர் விருதை தட்டியுள்ளது. இந்தப் படம் வரும் 28ம் தேதி முதல் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் அமேசான் ப்ரைம் வீடியோ ஆகிய ஓடிடி தளங்களில் ஒளிபரப்பாக உள்ளது. இதேபோல ஆப்பிள் டிவி மற்றும் வூட் ஆகியவற்றிலும் இந்தப் படம் ஒளிபரப்பாக உள்ளது. அடுத்ததாக சிறந்த ஒலி வடிவமைப்பிற்கான ஆஸ்கர் விருதை வென்றுள்ள டாப் கன் : மேவரிக் படம் அமேசான் ப்ரைம் வீடியோவில் ஒளிபரப்பாகி வருகிறது.

நெட்பிளிக்சில் கில்லர்மோ டெல் டோரோ வின் பினோச்சியோ

நெட்பிளிக்சில் கில்லர்மோ டெல் டோரோ வின் பினோச்சியோ

அடுத்ததாக சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதை கில்லர்மோ டெல் டோரோ வின் பினோச்சியோ படம் வென்றுள்ளது. இந்தப் படம் நெட்பிளிக்சில் ஒளிபரப்பாகி வருகிறது. சினிமாவின் மிக உயரிய விருதாக கருதப்படும் இந்தப் படங்களை பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்தப் படங்களை திரையரங்குகளில் சென்று பார்க்க முடியாதவர்கள், வீட்டிலேயே ஓடிடி தளங்களில் பார்க்க முடிவது அவர்களுக்கு கூடுதல் சந்தோஷத்தை அளிக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X