Kanguva: கங்குவா படப் பாடலுக்கு நடனம் அமைத்த ஆஸ்கர் பாடலின் நடன இயக்குநர்.. வேற லெவல்!
சென்னை: நடிகர் சூர்யா, திஷா பட்டானி உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகி வருகிறது கங்குவா படம். இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது.
கமர்ஷியல் இயக்குநராக தன்னை வெளிப்படுத்திவந்த இயக்குநர் சிவா, இந்தப் படத்தில் வரலாற்று பின்னணியில் கதைக்களத்தை தொட்டுள்ளார்.
இருவேறு காலகட்டங்களை மையமாக கொண்டு கங்குவா படத்தின் கதைக்களம் அமைந்துள்ள நிலையில், பிளாஷ்பேக் காட்சிகள் கொடைக்கானலின் அடர்ந்த காடுகளில் படமாக்கப்பட்டு வருகிறது.
கங்குவா பாடலுக்கு இசையமைத்த நாட்டுக்கூத்து நடன இயக்குநர்: நடிகர் சூர்யா, திஷா பட்டானி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துவரும் படம் கங்குவா. இருவேறு காலகட்டங்களை மையமாக கொண்டு இந்தப் படத்தை பிரபல இயக்குநர் சிவா இயக்கி வருகிறார். இந்தப் படம் 1000 ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்தையும் தற்போதைய காலகட்டத்தையும் மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். சிங்கம் படங்களை தொடர்ந்து அவர் மீண்டும் சூர்யாவுடன் இந்தப் படத்தின்மூலம் இணைந்துள்ளார்.

கங்குவா படத்தின் சூட்டிங் முன்னதாக கோவாவில் பிரம்மாண்டமான செட் அமைக்கப்பட்டு சூட்டிங் நடத்தப்பட்டது. இதில் சூர்யா, திஷா பட்டானி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து கொடைக்கானல், சென்னை ஆகிய பகுதிகளிலும் படத்தின் சூட்டிங் நடத்தப்பட்டு வருகின்றன. கொடைக்கானலின் அடர்ந்த காடுகளில் படத்தின் வரலாற்று கதைக்களத்தின் சூட்டிங் எடுத்து முடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்த ஷெட்யூலுக்கும் படக்குழுவினர் கொடைக்கானல் செல்லவுள்ளனர்.
விரைவில் இந்தப் படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்துவிட்டு போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகளில் ஈடுபட சிறுத்தை சிவா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படம் அடுத்த ஆண்டு துவக்கத்தில் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 10 மொழிகளில் வெளியாகவுள்ள இந்தப் படம் 3டி வெர்ஷனில் ரிலீசாகவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் சென்னையில் பிரம்மாண்டமான செட் அமைக்கப்பட்டு இந்தப் படத்தின் பீரியட் கால பாடல் படமாக்கப்பட்டுள்ளது.
இந்தப் பாடலில் 1500க்கும் மேற்பட்ட நடனக்கலைஞர்கள் சூர்யாவுடன் இணைந்து ஆடியுள்ளதாகவும் பாடலுக்கு பிரபல நடன இயக்குநர் பிரேம் ரக்ஷித் நடனம் அமைத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இவர் ஆஸ்கர் விருது பெற்ற ஆர்ஆர்ஆர் படத்தின் நாட்டுக் கூத்து பாடலுக்கு நடனம் அமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பாடலின் சூட்டிங் நேற்றுடன் நிறைவுப் பெற்றுள்ளது. இதனிடையே, இந்தப் பாடல் சிறப்பான விஷுவல்களுடன் பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைக்கும் வகையில் அமைந்துள்ளதாக படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படத்தின் அடுத்தடுத்த கட்ட சூட்டிங்குகள் மிகவும் சிறப்பான திட்டமிடலுடன் நடந்து வருகிறது. தற்போது பீரியட் போர்ஷனுக்கான பாடல் சூட்டிங் நடந்து முடிந்துள்ள நிலையில், மீண்டும் கொடைக்கானலின் அடர்ந்த காடுகளில் இதற்கான காட்சிகள் படமாக்கப்பட உள்ளன. இதற்காக இந்த வாரத்தில் படக்குழுவினர் கொடைக்கானல் புறப்பட்டு செல்கின்றனர். கடந்த கொடைக்கானல் ஷெட்யூலின்போதும், மழை, வெயில் பார்க்காமல் படக்குழுவினர் பணியாற்றியதாக தகவல்கள் வெளியாகின.
இந்தப் படம் சூர்யா கேரியரில் மிகவும் முக்கியமான படமாக அமையும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கேற்றாற்போல இந்தப் படத்திற்காக சூர்யா அதிகமான மெனக்கெடலுடன் நடித்து வருகிறார். சமீபத்தில் இந்தப் படத்தின் லுக்குடன் அவர் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றதும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. சூர்யாவின் கங்குவா படம், ரிலீசுக்கு முந்தைய வியாபாரத்தில் மற்ற படங்களை காட்டிலும் அதிகமாக வசூலித்துள்ள தகவலும் வெளியானது.


Click it and Unblock the Notifications











