»   »  ஆஸ்கர் நாயகன் ரசூல் பூக்குட்டி நாயகனாக நடிக்கும் படம் - 4 மொழிகளில் ரிலீஸ்

ஆஸ்கர் நாயகன் ரசூல் பூக்குட்டி நாயகனாக நடிக்கும் படம் - 4 மொழிகளில் ரிலீஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : சிறந்த ஒலிப்பதிவுக்காக ஆஸ்கர் விருது பெற்றவர் ரசூல் பூக்குட்டி. கேரளாவைச் சேர்ந்த ஒலிப்பதிவாளர் ரசூல் பூக்குட்டி இப்போது நடிகர் ஆகிவிட்டார்.

மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் தயாராகும் 'ஒரு கதை சொல்லட்டுமா' என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார். இந்தப் படத்தை பிரசாத் பிரபாகரன் இயக்குகிறார்.

கேரள மாநிலம் திருச்சூரில் நடைபெறும் பூரம் திருவிழாவில் எழுப்பப்படும் ஒலிகளைப் பதிவு செய்ய விரும்பும் ஒரு ஒலிப்பதிவாளனின் கதைதான் இந்தப் படம். அந்த ஒலிப்பதிவாளராக ரசூல் பூக்குட்டி நடித்துள்ளார்.

ஒரு கதை சொல்லட்டுமா

ஒரு கதை சொல்லட்டுமா

திருச்சூரில் ஏழு நாட்கள் நடைபெறும் உலகப் புகழ் பெற்ற பூரம் திருவிழா பல லட்சம் கணக்கான மக்கள் கலந்து கொண்டு கொண்டாடும் விழா. ஆயிரக்கணக்கான இசைக் கலைஞர்கள் நூற்றுக்கணக்கான இசை கருவிகளை வாசிக்கும் அந்த சூழல் மேஜிக்காக இருக்கும். அதைத்தான் முதல்முறையாகப் பதிவு செய்திருக்கிறோம் என இயக்குநர் கூறியுள்ளார்.

ரசூல் பூக்குட்டி

ரசூல் பூக்குட்டி

இந்த எல்லா ஒலிகளையும் ரெகார்ட் செய்ய ஆசைப்படும் ஒரு சவுண்ட் டிசைனராக ரசூல் பூக்குட்டி நடித்துள்ளார். அவரது நிஜ வாழ்விலும் இது ஒரு நீண்ட நாள் ஆசை என்பது குறிப்பிடத்தக்கது . இந்தப் படத்தின் உண்மையான ஒலிப்பதிவாளரே நடிப்பது சிறப்பு.

எளிதான காரியம் அல்ல

எளிதான காரியம் அல்ல

முழு பூரம் திருவிழாவையும் நேரில் சென்று படமாக்குவது என்பது எளிதான காரியம் அல்ல. படக்குழுவினர் பெரும் பாடுபட்டு இந்த காரியத்தை வெற்றிகரமாக முடிக்க முடித்தது. படப்பிடிப்புக்கு நான்கு மாதங்கள் முன்பே பணிகளை தொடங்கிவிட்டோம் எனக் கூறியுள்ளார் பிரசாத் பிரபாகரன்.

ஹாலிவுட் கலைஞர்கள்

ஹாலிவுட் கலைஞர்கள்

ஹாலிவுட் மற்றும் பாலிவுட்டை சேர்ந்த 80-க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப கலைஞர்கள் இப்படத்திற்காக பூரம் திருவிழா ஒலிகளைப் பதிவு செய்வதில் பணிபுரிந்தனர். 22 கேமராக்களை கொண்டு அந்த விழாவில் வாசித்து அசத்திய 300-க்கும் மேற்பட்ட இசை கலைஞர்களை படமாக்கியுள்ளோம் .

பார்வையற்றவர்களும் ரசிக்கலாம்

பார்வையற்றவர்களும் ரசிக்கலாம்

கண் பார்வை இல்லாதவர்களும் கதையை உணர்ந்து ரசிக்கும் படி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. ராகுல் ராஜ் இசையில், வைரமுத்து வரிகளில் இப்படம் உருவாகியுள்ளது.

நான்கு மொழிகளில்

நான்கு மொழிகளில்

'மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என நான்கு மொழிகளில் இப்படம் வெளிவரவுள்ளது. எங்களது அசுர உழைப்பை மக்கள் கண்டு ரசித்து பாராட்டும் நாளை எதிர்நோக்கியுள்ளேன்.' எனக் கூறியிருக்கிறார் பிரசாத் பிரபாகரன்.

English summary
The Oscar-winning sound designer Resul Pookutty has acted as a hero in the movie 'Oru kathai sollatuma'. This film is the story of a sound designer who wishes to record the sounds raised at the Pooram festival in Thrissur, Kerala.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil