twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆஸ்கர் போட்டியில் இருந்து வெளியேறியது ஜல்லிக்கட்டு.. ஆனால், அந்த இந்திய படம் தேர்வாகிடுச்சு!

    |

    சென்னை: 93வது ஆஸ்கர் போட்டிக்காக இந்தியா சார்பாக அனுப்பப்பட்ட ஜல்லிக்கட்டு திரைப்படம் இறுதி பரிந்துரை பட்டியலுக்கு தேர்வாகவில்லை.

    இயக்குநர் கரிஷ்மா தேவ் துபேவின் 'பிட்டு' குறும்படம் ஆஸ்கர் போட்டிக்கு தேர்வாகி உள்ளது.

    கமலி ஃப்ரம் நடுக்காவேரி படத்தில் நடிக்க வேணாம்னு அட்வைஸ் பண்ணாங்க... கயல் ஆனந்தி பேச்சு!கமலி ஃப்ரம் நடுக்காவேரி படத்தில் நடிக்க வேணாம்னு அட்வைஸ் பண்ணாங்க... கயல் ஆனந்தி பேச்சு!

    பிப்ரவரி 10ம் தேதியான இன்று 9 பிரிவுகளுக்கான ஆஸ்கர் நாமினேஷன் ஷார்ட் லிஸ்ட் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    தேர்வான மலையாளப்படம்

    தேர்வான மலையாளப்படம்

    இந்த ஆண்டு ஆஸ்கர் விருது விழாவுக்கு இந்தியா சார்பில் சிறந்த அயல்நாட்டு மொழித் திரைப்பட போட்டிக்கு மலையாள திரைப்படமான ஜல்லிக்கட்டு தேர்வு செய்யப்பட்டு அனுப்பப்பட்டது. வழக்கமாக பாலிவுட் படங்களே ஆஸ்கர் போட்டிக்கு இந்தியா சார்பாக அனுப்பப்பட்டு வந்த நிலையில், ஜல்லிக்கட்டு தேர்வானதே தென்னிந்தியர்களுக்கு பெரிய அங்கீகாரமாக இருந்தது.

    ஜல்லிக்கட்டு தோல்வி

    ஜல்லிக்கட்டு தோல்வி

    ஆனால், வழக்கம் போல இந்த ஆண்டும் ஆஸ்கர் பரிந்துரை பட்டியலுக்கே இந்திய திரைப்படம் தேர்வாகாமல் தோல்வியை சந்தித்துள்ளது. இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிசெரி இயக்கி இருந்த இந்த திரைப்படம் மாட்டுக்கறி கடையில் இருந்து தப்பித்த மாடு ஒன்று ஊருக்குள் நிகழ்த்தும் அட்டகாசமும், மிருகத்தை விட மனிதர்கள் எவ்வளவு கொடுமையானவர்கள் என்பதை வெளிக்காட்டியும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

    ஆஸ்கர் போட்டியில் ‘பிட்டு’

    ஆஸ்கர் போட்டியில் ‘பிட்டு’

    இயக்குநர் கரிஷ்மா தேவ் துபேவின் 'பிட்டு' குறும்படம் ஆஸ்கர் போட்டியில் டாப் 10 இடங்களுக்குள் இடம்பிடித்து ஆஸ்கர் போட்டியின் அடுத்த நிலைக்கு சென்றுள்ளது. இரண்டு இளம் பள்ளி செல்லும் தோழிகளின் கதையாக இந்த பிட்டு திரைப்படம் உருவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

    ஆஸ்கர் அறிவிப்பு

    ஆஸ்கர் அறிவிப்பு

    ஆஸ்கர் போட்டியின் மொத்த நாமினேஷன் பட்டியலும் வரும் மார்ச் மாதம் 15ம் தேதி அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று சிறந்த அயல்நாட்டு திரைப்படம், சிறந்த இசை, சிறந்த குறும்படம் உள்ளிட்ட 9 பிரிவுகளுக்கான ஆஸ்கர் தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வரும் ஏப்ரல் 25ம் தேதி ஆஸ்கர் விருது விழா கோலாகலமாக நடைபெறவுள்ளது.

    English summary
    India’s official entry Jallikattu out from the Oscar race and live action short film Bittu shortlisted to the next level of Oscars.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X