Oscars 2023 - சிறந்த இயக்குநர் விருதை வென்ற டேனியல் க்வான், டேனியல் ஸ்கெய்னெர்ட்.. யார் இவர்கள்?

லாஸ் ஏஞ்சல்ஸ்: 95ஆவது ஆஸ்கர் விருதுகளில் சிறந்த இயக்குநருக்கான விருதை எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ் படத்தின் இயக்குநர்களான டேனியல் க்வானும், டேனியல் ஸ்கெய்னெர்ட்டும் பெற்றிருக்கின்றனர்.

95ஆவது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா இன்று லாஸ் ஏஞ்சல்ஸில் இருக்கும் டால்பி திரையரங்கில் இந்திய நேரப்படி அதிகாலை 5.30 மணிக்கு தொடங்கியது. விழாவை ஹாலிவுட் நடிக்கர் ஜிம்மி கிம்மல் தொகுத்து வழங்கினார். இதில் இயக்குநருக்கான விருதை எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ் படத்தின் இயக்குநர்கள் பெற்றனர்.

டேனியல் க்வானும், டேனியல் ஸ்கெய்னெர்ட்டும்

டேனியல் க்வானும், டேனியல் ஸ்கெய்னெர்ட்டும்

1988ஆம் ஆண்டு பிப்ரவரி 10ஆம் தேதி அமெரிக்காவின் வெஸ்ட்போரோவில் பிறந்தவர் டேனியல் க்வான். 1987ஆம் ஆண்டு ஜூன் மாதம் 7ஆம் தேதி அமெரிக்காவில் இருக்கும் பிர்மிங்காமில் பிறந்தவர் டேனியல் கெய்னெர்ட். வெவ்வேறு பகுதிகளில் பிறந்தாலும் இருவரும் கல்லூரியில் படிக்கும்போது க்வானும்,ஸ்கெய்னெர்ட்டும் சந்தித்துக்கொண்டனர்.

இருவருக்குமான முதல் சந்திப்பு

இருவருக்குமான முதல் சந்திப்பு

டேனியல் க்வானும், டேனியல் ஸ்கெய்னெர்ட்டும் அமெரிக்காவின் பாஸ்டனில் இருக்கும் எமெர்ஜ் கல்லூரியில் படித்தனர். அப்போது முதல் முதலாக இவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. அந்தப் பழக்கத்தின்போதுதான் இருவருக்கும் கலை மீது ஆர்வம் இருப்பதை உணர்ந்துகொண்டனர். இதனையடுத்து கடந்த 2013ஆம் ஆண்டு டிஜே ஸ்னேக்கையும், லில் ஜோனையும் வைத்து டர்ன் டவுன் ஃபார் வாட் என்ற மியூசிக் ஆல்பத்தை இயக்கினர். இதற்கு முன்னதாக அவர்கள் சில மியூசிக் ஆல்பங்களை இயக்கியிருந்தாலும் இந்த ஆல்பம் பட்டித்தொட்டியெங்கும் ஹிட்டடிக்க பலரது கவனத்தை ஈர்த்தனர்.

படுபயங்கர பிஸியான டேனியல்ஸ்

படுபயங்கர பிஸியான டேனியல்ஸ்

மியூசிக் ஆல்பங்கள் மட்டுமின்றி 2011ஆம் ஆண்டு My best friend's Wedding/My Best friend's Sweating, 2014ஆம் ஆண்டு Possibilia, Interesting Ball உள்ளிட்ட குறும்படங்களையும் இயக்கியிருக்கின்றனர். அவைகளும் ஓரளவு வரவேற்பைப் பெற்றன. இதனையடுத்து Childrens Hospital, Infomercials ஆகிய டிவி நிகழ்ச்சிகளையும் 2013ஆம் ஆண்டு இயக்கினர்.

இருவரின் முதல் திரைப்படம்

இருவரின் முதல் திரைப்படம்

குறும்படங்கள், டிவி நிகழ்ச்சிகள், மியூசிக் ஆல்பங்கள் என இயக்கத்தில் பிஸியாக இருந்த டேனியல் க்வானும், டேனியல் ஸ்கெய்னெர்ட்டும் முழுநீள திரைப்படத்தை இயக்க முடிவு செய்தனர். அதன்படி கடந்த 2016ஆம் ஆண்டு ஸ்விஸ் ஆர்மி மேன் என்ற படத்தை முதல்முதலாக இயக்கினர். பால் டானோ, டேனியல் ரேட்கிளிஃப் உள்லிட்டோ நடித்திருந்த அந்தப் படம் சர்ரியலிஸ் காமெடி டிராமாவாக உருவாகியிருந்தது. பெரும் வரவேற்பை பெற்ற அந்தப் படம் 10க்கும் மேற்பட்ட விருதுகளையும் குவித்தது. இதனால் அவர்கள் பலராலும் கவனிக்கப்படக்கூடிய இயக்குநர்களாக மாறினர்.

இருவர் இணைந்து இயக்கிய இரண்டாவது திரைப்படம்

இருவர் இணைந்து இயக்கிய இரண்டாவது திரைப்படம்

இதனையடுத்து கடந்த 2019ஆம் ஆண்டு டேனியல் ஸ்கெய்னெர்ட் மட்டும் தனியாக தி டெத் ஆஃப் டிக் லாங் என்ற படத்தை இயக்கினார். அந்தப் படம் ஓரளவு வரவேற்பைப் பெற்ற சூழலில் இருவரும் மீண்டும் இணைந்து படம் இயக்க முடிவு செய்தனர். அதன்படி எவ்ரித்ங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ் என்ற படத்தை இயக்கினர். மல்டிவெர்ஸ் போன்ற விஷயங்களை உள்ளடக்கி காமெடி டிராமாவாக வெளியான இத்திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்களிடம் பலத்த வரவேற்பைப் பெற்றது. படம் முழுக்க ரசிகர்கள் ஆச்சரியப்படும்படி இருவரும் காட்சிகளை எழுதியும், இயக்கியிருந்தது இவர்கள் ரசிகர்களின் பல்ஸை எவ்வளவு புரிந்துகொண்ட இயக்குநர்கள் என்பதை உலகுக்கு உணர்த்தியது.

ஏழு விருதுகளை அள்ளிய எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்

ஏழு விருதுகளை அள்ளிய எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்

இந்தத் திரைப்படமானது 95ஆவது ஆஸ்கர் விருதுகள் விழாவில், சிறந்த நடிகை, சிறந்த இயக்கம், சிறந்த ஒரிஜினல் திரைக்கதை, சிறந்த துணை நடிகர், சிறந்த துணை நடிகை, சிறந்த திரைப்படம், சிறந்த படத்தொகுப்பு என மொத்தம் ஏழு விருதுகளை அள்ளியிருப்பது குறிப்பிடத்தக்கது. தாங்க இயக்கிய இரண்டாவது படத்திலேயே 7 ஆஸ்கர் விருதுகளை அள்ளிய அவர்களுக்கு பலரும் வாழ்த்தும் , பாராட்டும் தெரிவித்துவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X