Oscars 2023:7 ஆஸ்கர் விருதுகளை அள்ளிக்குவித்த 'எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்'..குவியும் பாராட்டு

லாஸ் ஏஞ்சல்ஸ் : சிறந்த திரைப்படம் உள்பட 7 ஆஸ்கர் விருதுகளை பெற்ற 'எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்' திரைப்படத்திற்கு பாராட்டுகள் குவித்து வருகின்றன.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா கோலாகலமாக நடைபெற்றது.

உலக அளவில் ஏராளமான திரைப்படங்கள் பல்வேறு பிரிவுகளின் கீழ் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டன.

ஆஸ்கர் விருது

ஆஸ்கர் விருது

95வது அகாடமி விருது வழங்கும் விழா கலிபோர்னியாவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி தியேட்டரில் இந்திய நேரப்படி, மார்ச் 13ந் தேதியான இன்று அதிகாலை 5:30 மணிக்கு அறிவிக்கப்பட்டன. இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியை அமெரிக்க தொலைக்காட்சி தொகுப்பாளரான ஜிம்மி கிம்மல் தொகுத்து வழங்கினார். பாலிவுட் நடிகை தீபிகா படுகோன், ஆஸ்கர் விருதினை வழங்குபவர்களில் ஒருவராக இடம்பெற்றிருந்தார்.

'எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்'

'எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்'

இதில் டேனியல் கிவான் மற்றும் டேனியல் ஸ்கினெர்ட் இயக்கத்தில் கடந்தாண்டு வெளியான 'எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்' படம் 7 ஆஸ்கர் விருதை வென்று உலகத்தின் ஒட்டுமொத்தப் பார்வையும் தன் பக்கம் திருப்பி உள்ளது. அதன்படி சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதை படத்தில் நடித்த மைக்கேல் யோவ் வென்றுள்ளார்.

7 விருதுகள்

7 விருதுகள்

டேனியல் கிவான் மற்றும் டேனியல் ஸ்கினெர்ட் இருவரும் சிறந்த இயக்குநர்களுக்கான விருதை பெற்றுள்ளனர். சிறந்த படத்தொகுப்புக்கான விருதை பால் ரோஜர்ஸ் பெற்றுள்ளார். சிறந்த படம், சிறந்த திரைக்கதை, சிறந்த துணை நடிகர், சிறந்த துணை நடிகை, சிறந்த படத்தொகுப்பு உள்ளிட்ட 7 விருதுகளை வென்று 'எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்' திரைப்படம் உலக சாதனை படைத்துள்ளது.

10 பிரிவுகளில்

10 பிரிவுகளில்

"எவ்ரிதிங் எவிவேர் ஆல் அட் ஒன்ஸ்" திரைப்படம் 10 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்த நிலையில், 7 ஆஸ்கர் விருதுகளை பெற்றுள்ளதற்கு உலகம் முழுவதும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. ஆஸ்கர் விருதுக்கு சில வாரங்களுக்கு முன்பு, ஸ்க்ரீன் ஆக்டர்ஸ் கில்ட் விருது விழாவில் "எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்" திரைப்படம் நான்கு விருதுகளை வென்றது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X