Oscars 2023 : RRR டீமிற்கு ரஜினிகாந்த் வாழ்த்து.. பெருமைமிகு இந்தியர்களுக்கு சல்யூட் என புகழாரம்!

சென்னை : நியூயார்க்கில் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில் ஆர்ஆர்ஆர் படம் ஆஸ்கர் விருதை சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான விருதை பெற்றுள்ளது.

இதையடுத்து மேடையேறிய இசையமைப்பாளர் கீரவாணி, தன்னுடைய நன்றியை பாடலாக பாடி அசத்தினார்.

இதையடுத்து ஆர்ஆர்ஆர் டீமிற்கு பல்வேறு தரப்பினரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்தும் தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார்.

 95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா

95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா

95வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் நியூயார்க்கில் டால்வி திரையரங்கில் நடைபெற்று வருகிறது. இந்த விழாவை ஹாலிவுட் நடிகர் ஜிம்மி கம்மல் தொகுத்து வழங்கினார். முன்னதாக ஆஸ்கர் விருதுக்கு ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் நாமினேட் ஆகியிருந்தது. இந்நிலையில் இன்றைய தினம் இந்தப் பாடல் சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான விருதை தட்டிச் சென்றுள்ளது.

விருதை பெற்ற கீரவாணி -சந்திரபோஸ்

விருதை பெற்ற கீரவாணி -சந்திரபோஸ்

முன்னதாக ஏஆர் ரஹ்மான் ஆஸ்கர் விருது பெற்றுள்ள நிலையில், தற்போது இரண்டாவதாக இசையமைப்பாளர் கீரவாணி ஆர்ஆர்ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்காக இந்த விருதை பெற்றுள்ளார். இந்த விருதினை படத்தின் இசையமைப்பாளர் கீரவாணி மற்றும் பாடலாசிரியர் சந்திரபோஸ் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். விருதினை பெற்றுக் கொள்வதற்காக ஆஸ்கர் மேடை ஏறிய இசையமைப்பாளர் கீரவாணி, பாடலாக பாடி படத்தின் இயக்குநர் ராஜமௌலி மற்றும் படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.

கோல்டன் க்ளோப் விருது

கோல்டன் க்ளோப் விருது

முன்னதாக கீரவாணி மற்றும் சந்திரபோஸ் இருவரும் இதே பாடலுக்காக கோல்டன் க்ளோப் விருதை வென்ற நிலையில் தற்போது ஆஸ்கரை வென்றுள்ளனர். இதனிடையே இவர்களுக்கும் ஆர்ஆர்ஆர் பட இயக்குநர் ராஜமௌலி மற்றும் படக்குழுவினருக்கும் பல்வேறு தரப்பினரும் நன்றி தெரிவித்து வருகின்றனர். அரசியல் தலைவர்கள், பிரபல நடிகர்கள் நடிகைகள் உள்ளிட்டவர்களும் சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

ரஜினிகாந்த் வாழ்த்து

ரஜினிகாந்த் வாழ்த்து

நடிகர் ரஜினிகாந்தும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஆர்ஆர்ஆர் படக்குழுவினருக்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். இசையமைப்பாளர் கீரவாணி, இயக்குநர் ராஜமௌலி மற்றும் கார்த்திகி ஆகியோருக்கும் ரஜினிகாந்த் உளம்கனிந்த வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார். இந்த பெருமைமிகு இந்தியர்களுக்கு தன்னுடைய சல்யூட் என்று ரஜினிகாந்த் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து பல்வேறு பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

பாடகி சித்ரா வாழ்த்து

பாடகி சித்ரா வாழ்த்து

இதனிடையே பிரபல பின்னணி பாடகி சித்ராவும் தன்னுடைய வாழ்த்துக்களை ஆர்ஆர்ஆர் டீமிற்கு ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார். இசையமைப்பாளர் கீரவாணிக்கு நமஸ்தே மற்றும் வாழ்த்துக்கள் என்று கூறியுள்ள சித்ரா, படத்தின் இயக்குநர் ராஜமௌலி, பாடலாசிரியர் சந்திரபோஸ் மற்றும் ஆர்ஆர்ஆர் டீமிற்கும் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார். தொடர்ந்து பல்வேறு தரப்பினரின் வாழ்த்து மழையில் ஆர்ஆர்ஆர் டீம் நனைந்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X