Oscars 2023: ஆர்ஆர்ஆர் 'நாட்டு நாட்டு' பாடலுடன் தொடங்கிய ஆஸ்கர் 2023... வியந்து போன ஜிம்மி கிம்மல்!

லாஸ் ஏஞ்சல்ஸ்: 2023ம் ஆண்டுக்கான 95வது ஆஸ்கர் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கோலாகலமாக நடைபெற்றது.
திரையுலகின் உயரிய விருதாக கொண்டாடப்படும் ஆஸ்கர் விழாவை பிரபல ஹாலிவுட் நடிகர் ஹோஸ்ட் ஜிம்மி கிம்மல் தொகுத்து வழங்கினார்.
ஹோஸ்ட் ஜிம்மி கிம்மல் பேட்மேன் போல பறந்து வந்து ஆஸ்கர் மேடையில் இறங்கியதும் மொத்த கூட்டமும் ஆர்ப்பரித்தது.
அதனைத் தொடர்ந்து ஆஸ்கர் விருதுகள் அறிவிக்கும் முன்னர் ஆர்ஆர்ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு கலைஞர்கள் நடனம் ஆடினர்.

 ஆஸ்கர் 2023

ஆஸ்கர் 2023

2023ம் ஆண்டுக்கான 95வது ஆஸ்கர் விருது விழா அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. டால்பி தியேட்டரில் நடைபெற்ற இந்த விருது விழாவை பிரபல ஹாலிவுட் நடிகர் ஜிம்மி கிம்மல் தொகுத்து வழங்கினார். பேட்மேன் போல பறந்து வந்து ஆஸ்கர் மேடையில் இறங்கிய ஜிம்மி கிம்மல், விருதுக்காக நாமினேட் ஆகியுள்ள நடிகர்கள், நடிகைகள் உள்ளிட்ட அனைவருக்கும் வாழ்த்துத் தெரிவித்தார்.

 முதல் அரங்கேற்றம்

முதல் அரங்கேற்றம்

தனக்கே உரிய கலகலப்பான நகைச்சுவையுடன் பேச்சைத் தொடங்கிய ஜிம்மி கிம்மல், ஆஸ்கர் விழாவுக்கு வந்திருந்த கலைஞர்களை செல்லமாக கலாய்த்துக் கொண்டார். ஹாலிவுட்டின் முன்னணி நடிகர்கள், இயக்குநர்களின் பெயர்களை குறிப்பிட்டு அவர் ஜாலியாக ஹோஸ்டிங் செய்தது ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. விருது அறிவிப்புகள் தொடங்கும் முன்னர், மேடையில் பேசிக் கொண்டிருந்த ஜிம்மி கிம்மலை, நாட்டு நாட்டு பாடலுக்கு ஆட்டம் போட்டு பாலிவுட் நடனக் கலைஞர்கள் ஓரங்கட்டினர்.

 நாட்டு நாட்டு பாடல்

நாட்டு நாட்டு பாடல்

ஆஸ்கர் விருது அறிவிப்புகள் தொடங்கவுள்ளதாக ஜிம்மி கிம்மல் அறிவித்ததும், திடீரென மேடைக்கு வந்த சில நடன கலைஞர்கள், ஆர்ஆர்ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆட்டம் போட்டனர். இப்பாடலின் ஃபேவரைட் ஸ்டெப்பை மேடையில் ஆடி அசத்திய அவர்கள், ஜிம்மி கிம்மலை அங்கிருந்து அரவணைத்துச் சென்றனர். இந்த நடனத்தை பார்த்து அசந்த ஜிம்மி கிம்மல், ஆர்ஆர்ஆர் பாலிவுட் திரைப்படம் என கூறியது டோலிவுட் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்தது. அதேநேரம் ஆஸ்கர் 2023 விருது விழா நாட்டு நாட்டு பாடலுடன் தொடங்கியது இந்திய சினிமா ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.

 முதல் ஆஸ்கர் விருது

முதல் ஆஸ்கர் விருது

இதனைத் தொடர்ந்து டுவைன் ராக் ஜான்சன் மேடையேறி முதல் ஆஸ்கர் விருதை அறிவித்தார். அதன்படி, கில்லர்மோ டெல் டோரோஸ் பினாச்சியோ (Guillermo del toro's pinocchio) படத்துக்கு சிறந்த அனிமேஷன் திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. இதனையடுத்து அந்தப் படத்தின் இயக்குநர் Guillermo del Toro, Mark Gustafson ஆஸ்கர் விருதை பெற்றுக் கொண்டனர். அதற்கு அடுத்தபடியாக சிறந்த துணை நடிகர் விருது எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ் (Everything Everywhere All at Once) படத்திற்காக கீ உய் குவான்க்கு (Ke Huy Quan) வழங்கப்பட்டது. அதேபோல் சிறந்த துணை நடிகை விருதும் எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ் படத்தில் நடித்த ஜேமி லீ கர்டீஸ்க்கு (Jamie Lee Curtis ) வழங்கப்பட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X