Oscars 2025: ஆஸ்கார் ரேஸில் கழட்டிவிடப்பட்ட லாபதா லேடிஸ்.. ரசிகர்கள் அதிர்ச்சி!
மும்பை: லாபதா லேடீஸ்- திரைப்படம் கடந்த மார்ச் 1ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி பெரும் வரவேற்பைப் பெற்றது. படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதேநேரத்தில் படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆவதற்கு முன்னர்- 48வது டொரண்டோ சர்வதேச திரைப்படத் திருவிழாவில் திரையிடப்பட்டது. அங்கு படத்தைப் பார்த்த ரசிகர்கள் படக்குழுவினரை பாராட்டினர். மேலும் படத்தினை பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடவும்- வேண்டுகோள் விடுத்தனர். லாபாதா லேடீஸ் படத்தை- பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர்கானின் முன்னாள் மனைவி கிரண் ராவ் இயக்கியுள்ளார்.
அமீர் கான் கிரண் ராவை பிரிந்துவிட்டாலும்- தொழில் ரீதியாக இருவரும் ஒருவருக்கு ஒருவர்- உறுதுணையாக இருந்து வருகின்றனர் என்பதற்கு இந்தப் படம் ஒரு எடுத்துக்காட்டு. அதாவது இந்தப் படத்தினை அமீர் கான் மற்றும் கிரண் ராவ் என இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர். திரையரங்கில் பெற்ற வரவேற்பைப் போலவும்- ஓடிடியிலிம் வெளியாகி மிகச்சிறப்பான வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தில் நித்தன்ஷி கோயல்- ஸ்பார்ஷ் ஸ்ரீவத்சவ் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். இந்தியா சார்பில் ஆஸ்காருக்கு இந்தப் படம் அனுப்பப்பட்டது. படம் டாப் 15 படங்களின் பட்டியலில் இடம் பெறவில்லை. இது படக்குழுவினருக்கும் ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சர்வதேச திரைப்பட விழாவில் படத்தினைப் பார்த்த பலரும் பாராட்ட- படத்தினை ஆஸ்காருக்கு கொண்டு செல்லவும் வலியுறுத்தினர். படத்தின் தயாரிப்பாளர்களான அமீர் கான் மற்றும் கிரண் ராவ் ஏற்கனவே இந்தத் திட்டத்தில் இருந்ததால்- சர்வதேச திரைப்பட ரசிகர்களின் பாராட்டு நம்பிக்கை கொடுத்தது. இதனால் படத்தினை ஆஸ்காருக்கு கொண்டு செல்லும் பணிகளில் மிகத் தீவிரமாக ஈடுபட்டனர். அதற்கான முதற்கட்டமாக- இந்தியா சார்பில் 97வது ஆஸ்கார் நாமினேஷனுக்கு லாபாதா லேடீஸ் படத்தினை தேர்வு செய்ய வைக்கும் முயற்சியில் தீவிரமாக செயல்பட்டனர். இவர்களின் முயற்சிக்கு பலன் கிடைத்ததால்- படம் இந்தியா சார்பில் ஆஸ்காருக்கு நாமினேட் செய்யப்பட்டது.

பெயர் மாற்றம்: ஆஸ்கார் ரேஸில் படத்தினைக் கொண்டுபோக கடந்த சில மாதங்களாகவே லாபதா லேடீஸ் படக்குழு நியூயார்க்கில் முகாமிட்டிருந்தது. மேலும் ஆஸ்கார் ரேஸ்க்காக படத்தின் பெயரை லாபதா லேடீஸ் என்பதில் இருந்து லாஸ்ட் லேடீஸ் என படக்குழு பெயரை மாற்றியது. இது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது.
டாப் 15 படங்கள்: தற்போது- வெளிநாட்டு பிரிவு ஆஸ்காருக்கான- படங்களின் பட்டியலில்- டாப் 15 படங்களின் பட்டியலில் லாபதா லேடீஸ் படம் இடம் பெறவில்லை. ஆஸ்காருக்கு டாப் 15 படங்ககளாக தேர்வாகியுள்ள படங்களின் பெயர் மற்றும் நாடு.

Brazil- I'm Still Here
Canada- Universal Language
Czech Republic- Waves
Denmark- The Girl with the Needle
France- Emilia Pérez
Germany- The Seed of the Sacred Fig

Iceland- Touch
Ireland- Kneecap
Italy- Vermiglio
Latvia- Flow
Norway- Armand
Palestine- From Ground Zero
Senegal- Dahomey
Thailand- How to Make Millions before Grandma Dies
United Kingdom- Santosh
மேற்குறிப்பிடப்பட்டுள்ள 15 படங்களும் டாப் 15 பட்டியலில் இடம் பெற்றுள்ளது. லாபதா லேடீஸ் படம் தேர்வாகாதது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











