ஆஸ்கர் 2026 - விருது பெற்ற படங்கள் என்னென்ன தெரியுமா?.. இரண்டு பேருக்கு இது முதல் விருது

லாஸ் ஏஞ்சல்ஸ்: உலக சினிமாவில் கௌரவ விருதாக பார்க்கப்படும் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல் நகரில் இன்று தொடங்கியது. உலகம் முழுவதும் இருக்கும் சினிமா ரசிகர்கள்; யார் யார் விருது வாங்குவார்கள்; எந்தப் படம் விருது வாங்கும் என ஆவலோடு எதிர்பார்த்திருக்கிறார்கள். இந்நிலையில் படங்கள் பெற்ற விருது குறித்த விவரம் வெளியாகியிருக்கிறது.

சினிமா துறையில் உயரிய மற்றும் கௌரவமான விருதாக பார்க்கப்படுவது ஆஸ்கர். எப்படியாவது அந்த விருதை வாங்கிவிட வேண்டும் என திரைத்துறையில் இருக்கும் ஒவ்வொரு கலைஞரும் ஏக்கப்படுவார். தமிழ்நாட்டிலிருந்து இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இரண்டு ஆஸ்கர்களை வாங்கி வந்தார். அதற்கு பிறகு யாரும் வாங்கவில்லை. இருந்தாலும் ஆஸ்கர் விருது வழங்கும் விழா என்றாலே பலரது கவனம் அதில்தான் இப்போதும் இருக்கும். அந்தவகையில் 98ஆவது ஆஸ்கர் விழா லாஸ் ஏஞ்சல்ஸில் நடக்கிறது.

Oscars 2026 Winners Sinners Wins Best Original Screenplay Here are details

எப்போது தொடங்கியது?: அங்கிருக்கு டால்பி தியேட்டரில் இந்திய நேரப்படி இன்று அதிகாலை 4.30 மணிக்கு விழாவானது தொடங்கியது. கொனன் ஓ'பிரையன் இந்த விழாவை தொகுத்து வழங்குகிறார். இவ்விழாவில் முதல் விருது வெப்பன்ஸ் என்ற படத்தில் நடித்ததற்காக ஏமி மேடிகனுக்கு சிறந்த துணை நடிகைக்காக வழங்கப்பட்டது. முதல் விருதை பெற்றதன் காரணமாக ஏமி மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தார். அதனையடுத்து மற்ற பிரிவுகளிலும், கலைஞர்களுக்கும் விருது கொடுக்கப்பட்டது. அனைவரும் உற்சாகத்தோடு வாங்கிக்கொண்டார்கள்.

Also Read
Oscars 2026 LIVE: ஆஸ்கர் விருதுகள் 2026.. அதிக விருதுகளை தட்டித்தூக்கப்போவது யாரு?
Oscars 2026 LIVE: ஆஸ்கர் விருதுகள் 2026.. அதிக விருதுகளை தட்டித்தூக்கப்போவது யாரு?

நாமினேஷன் லிஸ்ட்: எந்தெந்த படங்கள் இந்த முறை ஆஸ்கர் விருதை பெறப்போகின்றன என்ற அதீத ஆவல் நாமினேஷன் லிஸ்ட் வந்தபோதே ஏற்பட்டுவிட்டது. நாமினேஷன் லிஸ்ட்டில், 'Bugonia,Frankenstein,F1, Hamnet, Marty Supreme, One Battle After Another, The Secret Agent, Sentimental Value, Sinners, Train Dreams' ஆகிய படங்கள் இடம்பெற்றிருந்தன. அனைத்துமே தரமான படங்கள் என்பதால் போட்டி கடுமையாக இருந்தது.

விருது பெற்ற படங்கள்: இவற்றில் சின்னர்ஸ் திரைப்படம் ஒரிஜினல் ஸ்க்ரீன்ப்ளே பிரிவில் விருதை தட்டி சென்றது. விருதினை திரைக்கதை எழுதிய ரியான் கூக்ளர் பெற்றுக்கொண்டார். சிறந்த Adapted Screenplay பிரிவில் One Battle After Another படம் விருது வென்றது. பால் தாம்சன் ஆண்டர்சன் விருதினை பெற்றுக்கொண்டார். இதே படம் பெஸ்ட் காஸ்ட்டிங் பிரிவிலும் விருது பெற்றது. மேலும் Sean Penn சிறந்த சப்போர்ட்டிங் ஆக்டருக்கான விருதை One Battle After Another படத்தில் நடித்ததற்காக வென்றார். கூகள்ருக்கும், ஆண்டர்சனுக்கும் இது முதல் ஆஸ்கர் விருது என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Read more about: oscars
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X