குழந்தைகள் வளர்ப்பில் கவனம்.... ‘கலைந்த கனவுகள்’ சொல்லும் பாடம்
மறைந்த பழம்பெரும் நகைச்சுவை நடிகர் டணால் தங்கவேலு அவர்களின் பேரன் அஸ்வின் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் கலைந்த கனவுகள்.
இந்த படத்தின் தொடக்கவிழா சென்னை ஏ.வி.எம் ஸ்டூடியோ பிள்ளையார் கோவிலில் சமீபத்தில் நடைபெற்றது. இதில் இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தனர்.
OST குரூப் வழங்கும் ஸ்டார் வேர்ல்டு எண்டெர்டெயின்மெண்ட் தயாரிப்பில் உருவாகிறது கலைந்த கனவுகள்

தங்கவேலு பேரன்
இப்படத்தின் கதாநாயகனாக அஸ்வின் (மறைந்த நகைச்சுவை நடிகர் தங்கவேல் பேரன்) ,அறிமுகமாகிறார்.

இரண்டு கதாநாயகிகள்
இப்படத்தின் கதாநாயகிகளாக T .S பிரஸ்னேவ் மற்றும் விஜி அறிமுகமாகிறார்கள்.

சீதா, சாந்தினி
இவர்களுடன் சீதா, சாந்தினி, கரிஷ்மா ,நர்மதா, ஜவஹர் ( நாசர் தம்பி) மற்றும் விபின் ஆகியோர் நடிக்கின்றனர்.

குழந்தைகள் கவனம்
இந்த காலத்தில் ஆண், பெண் குழந்தைகள் அனைவருக்கும் சுதந்திரம் கொடுத்து வளக்கின்றனர். பெண் குழந்தைகளை விட ஆண்களுக்கு அதிக சுதந்திரம் கொடுக்கப்படுகிறது. சிலநேரம் அவர்களை பெற்றோர்கள் கண்டு கொள்வதில்லை. இதுவே தவறுகள் நடக்க காரணமாகிறது.

கலைந்த கனவுகள்
பெண் பிள்ளைகளைப் போல, ஆண் பிள்ளைகளையும் கவனமாக வளர்க்க வேண்டும். கண்டுகொள்ளாமல் விட்டால் தவறான பாதையில் சென்று வன்முறையில் சிக்கி அவர்கள் அழிந்து கொள்ளும் நிலை ஏற்படும் என்பதைச் சொல்கிறது கலைந்த கனவுகள்.

தொழில்நுட்பக்கலைஞர்கள்.
கதை வசனம் எழுதி இயக்குகிறார் அ கபிலன். சத்யமூர்த்தி இசையமைக்கிறார். ஒளிப்பதிவு : J.சபீர் அலிகான்,ஆக்ஷன் : ஸ்டண்ட் சரவணன்,மக்கள் தொடர்பு : S செல்வரகு,தயாரிப்பாளர்கள் : S.குமார், J.Jஅண்டனி, S.P.சுரேஷ், வேம்புராஜ்,

எஸ்.பி.முத்துராமன்
ஏ.வி.எம் ஸ்டுடியோவில் நடைபெற்ற படத்துவக்கவிழாவில் பழம்பெரும் இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் பங்கேற்று கலைஞர்களை வாழ்த்தினார்.

கொடைக்கானல், மூணாறு
இப்படத்தின் படப்பிடிப்பு நாமக்கல், பொள்ளாச்சி, திருச்சி, கொடைக்கானல் மற்றும் மூணாறில் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.


Click it and Unblock the Notifications











