சீக்கிரமே அம்மாவாக போறேன்.. சிம்பு பட நடிகை சொன்ன ஹேப்பி நியூஸ்.. கணவருடன் எடுத்த போட்டோ வைரல்!
சென்னை: ஒஸ்தி, மயக்கம் என்ன உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை ரிச்சா கங்கோபாத்யாய் சீக்கிரமே அம்மாவாக போகிறேன் என்கிற சந்தோஷமான செய்தியை பகிர்ந்துள்ளார்.
அமெரிக்காவில் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆன நடிகை ரிச்சா தனது கணவருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இந்த சந்தோஷமான செய்தியை கூறியுள்ளார்.
நெடுவாளியை மறக்காத ரசிகர்கள் அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்

மிஸ் இந்தியா யுஎஸ்ஏ
டெல்லியில் பிறந்த நடிகை ரிச்சா கங்கோபாத்யாய் அமெரிக்காவில் வளர்ந்தார். 2007ம் ஆண்டு மிஸ் இந்தியா யுஎஸ்ஏ மற்றும் மிஸ் இந்தியா மிச்சிகன் உள்ளிட்ட பட்டங்களை வென்றார். பின்னர் இந்தியா வந்த ரிச்சாவுக்கு 2010ம் ஆண்டு டோலிவுட்டில் வெளியான லீடர் படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தது.

மயக்கம் என்ன
தொடர்ந்து தெலுங்கில் சில படங்களில் நடித்து வந்த ரிச்சா, 2011ம் ஆண்டு இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷுக்கு ஜோடியாக மயக்கம் என்ன படத்தில் நடித்தார். யாமினி எனும் கதாபாத்திரத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய ரிச்சாவுக்கு சைமா, எடிசன் மற்றும் விஜய் டிவி விருதுகள் கிடைத்தன.

ஒஸ்தி ‘நெடுவாளி’
நெடுவாளி என்றால் உடும்பு போன்ற பிடிவாதம் குணம் கொண்டவள். அப்படியொரு கதாபாத்திரத்தில் சிம்புவின் ஒஸ்தி படத்திலும் அதே ஆண்டு தமிழ் சினிமாவை கலக்கினார் நடிகை ரிச்சா. அதன் பிறகு தமிழ் சினிமாவில் அவர் நடிக்கவே இல்லை. பெங்காலியில் ஒரு படம் தெலுங்கில் சில படங்களில் நடித்த அவர், 2013ம் ஆண்டு சினிமாவுக்கு குட் பை சொல்லி விட்டார்.

சினிமாவுக்கு முழுக்கு
ஆறு தெலுங்கு படங்கள், இரண்டு தமிழ்ப் படங்கள் ஒரே ஒரு பெங்காலி படத்தில் நடித்த ரிச்சா, அதன் பிறகு அமெரிக்காவில் எம்.பி.ஏ படிக்க கிளம்பி விட்டார். அமெரிக்காவின் ராணுவத்தில் சேர்ந்து ஆப்கனிஸ்தான் மற்றும் கொரியாவில் பணியாற்றி விட்டு நாடு திரும்பிய ஜோ லங்கேலா என்பவரும் ரிச்சா படித்த அதே கல்லூரியில் சேர்ந்தார்.

இரு மத முறைப்படி
கல்லூரியில் படித்த நாட்களில் ஜோ லங்கேலாவுடன் டேட்டிங் செல்ல தொடங்கிய ரிச்சா கடந்த 2019ம் ஆண்டு ஜோ லங்கேலாவை திருமணம் செய்து கொண்டார். இந்து மற்றும் கிறிஸ்துவ முறைப்படி இவர்களது திருமணம் நடைபெற்றது. நடிகை ரிச்சாவின் திருமண புகைப்படங்கள் அப்போது கோலிவுட்டிலும் செம வைரலானது.

சீக்கிரமே அம்மா
இந்நிலையில், மீண்டும் நடிகை ரிச்சா தனது ரசிகர்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ் சொல்லியுள்ளார். வரும் ஜூன் மாதம் தான் தாயாக போகிறேன் என கணவருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த போட்டோவை பார்த்த பிரபலங்களும் ரசிகர்களும் ரிச்சாவை வாழ்த்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











