twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பார்த்திபனுக்குக்கு விருது கொடுக்காவிட்டால் மத்திய அரசு மதிப்பை இழக்கும் - எஸ்.ஏ.சந்திரசேகர்

    |

    Recommended Video

    மத்தியஅரசு மதிப்பை இழக்கும் பார்த்திபனுக்கு விருதுகொடுக்காவிட்டால் |S A CHANDRASEKAR|FILMIBEAT TAMIL

    சென்னை: ஒத்த செருப்பு சைஸ் 7 திரைபடத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் பார்த்திபனுக்கு தோன்றியதற்காகவே அவரை பாராட்ட வேண்டும். அதையும் மிக நேர்த்தியாக இயக்கிய அந்த மாமனிதரின் திறமை கடலினும் பெரிது. மேலும், பார்த்திபனின் இந்த திரைப்படத்திற்கு தேசிய விருது கொடுக்கப்படவில்லை என்றால் அது மத்திய அரசு தன்னுடைய மதிப்பையே இழப்பதற்கு சமம் என்று இயக்குநர் எ.ஸ்.ஏ.சந்திரசேகர் கூறியுள்ளார். பார்த்திபனுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் இதனை கூறியுள்ளார்.

    பார்த்திபனின் ஒத்த செருப்பு சைஸ் 7 திரைப்படத்தை பார்த்த பிறகு நேரடியாக பார்த்திபனின் அலுவலகத்திற்கு சென்று அவரின் கால்களில் விழுந்து அவரை பாராட்டி தள்ளியுள்ளார். இப்படி ஒரு திரைபடத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு தோன்றியதற்காகவே அவரை பாராட்ட வேண்டும். அதையும் மிகவும் நேர்த்தியாக இயக்கிய அந்த மாமனிதரின் திறமை கடலினும் பெரிது என்று தனது உணர்வை வெளிப்படுத்தியுள்ளார் எஸ்.ஏ.சந்திரசேகர்.

    பார்த்திபன் எனும் தனி மனிதனின் அற்புதமான படைப்பை பாராட்டாமல் யாராலும் இருக்கவே முடியாது. ஒரே ஒருவர் மட்டும் படம் முழுவதிலும் தோன்றி ரசிகர்களை அப்படியே ஆச்சரியத்தில் உறைய வைத்துள்ளார் என்றால் அது சாதாரணமான செயல் அல்ல. அதை நிகழ்த்தி காட்டிய பார்த்திபனின் ஒத்த செருப்பு சைஸ் 7 திரைப்படத்தின் வெற்றிக்காக பாராட்டு விழா இன்று நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் திரைத்துறையை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் திரைத்துறையை சார்ந்த பெரும்பாலானவர்கள் கலந்து கொண்டனர். அதில் எ.எல்.விஜய், அஜயன் பாலா, எழில், ரமேஷ் கண்ணன், ஆர்.கே.செல்வமணி, பேரரசு, ராம்ஜி, ஆர்.வி.உதயகுமார், போப்பிட தனஞ்செயன், எஸ்.ஏ.சந்திரசேகர், சீனு ராமசாமி ஆகியோர் பார்த்திபனை பாராட்டினார்கள்.

    எஸ். ஏ. சந்திரசேகர் பாராட்டு

    எஸ். ஏ. சந்திரசேகர் பாராட்டு

    இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் பாராட்டி பேசும்போது, நான் பார்த்திபனுடைய அலுவலகத்திற்கு சென்று அவருடைய காலில் விழுந்து, தயவு செய்து என்னை உங்கள் அஸிஸ்டெண்ட் டைரக்டராக சேர்த்துக்கொள்ளுங்கள் என்று கேட்டுக்கொண்டேன். வயதானாலும் பரவாயில்லை. என்னை ஒதுக்கி விடாமல் சேர்த்துக்கொள்ளுங்கள் என்று கேட்டேன்.

    அஸிஸ்டெண்ட் ஆகணும்

    அஸிஸ்டெண்ட் ஆகணும்

    நான் தமிழ் சினிமாவில் எத்தனையோ கமர்ஷியல் படங்களை எடுத்து வெற்றி பெற்று நிறைய சொத்து சேர்த்து வைத்திருக்கலாம். ஆனால், அவர் அளவுக்கு என்னால் நிச்சயம் படம் எடுக்க முடியாது. பார்த்திபன் நிஜமாகவே ஒரு ஜீனியஸ். ஒரு படத்திலாவது அவருடைய அஸிஸ்டெண்ட் டைரக்டரா, சம்பளம் இல்லாமல் வேலை பார்க்கணும் என்று பேசினார்.

    தேசிய விருது

    தேசிய விருது

    பார்த்திபனின் இந்த படத்திற்கு தேசிய விருது கொடுக்கப்படவில்லை என்றால் அது மத்திய அரசு தன்னுடைய மதிப்பையே இழப்பதற்கு சமம். இந்த படத்திற்கு தேசிய விருது அங்கீகாரம் கொடுக்கப்படவில்லை என்றால் அவர்கள் விருதுகள் கொடுப்பதற்கான அளவுகோல் என்ன என்று தெரியவில்லை என்று மிகவும் ஆதங்கத்துடன் கூறினார்.

    ஆர்.கே.செல்வமணி

    ஆர்.கே.செல்வமணி

    ஆர்.கே.செல்வமணி பேசும்போது, ஒத்த செருப்பு சைஸ் 7 திரைப்படத்திற்கு ஆஸ்கார் விருது தரவேண்டும் என்று கேட்டு, இயக்குநர் சங்கத்தின் சார்பாக, அடுத்த வாரம் வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்தப்போவதாக கூறினார். அதுமட்டுமின்றி கல்லி பாய் திரைப்படம், ஹாலிவுட் திரைப்படத்தின் இன்ஸ்பிரேஷனில் எடுக்கப்பட்ட திரைப்படம். அந்த படத்தை ஆஸ்கார் விருதுக்கு அனுப்பும்போது, ஒரிஜினல் தமிழ் படமான ஒத்த செருப்பு சைஸ் 7 திரைப்படத்தை விருதுப் பட்டியலில் சேர்க்காமல் உதாசீனப்படுத்தி திருப்பி அனுப்பியது வேதனையளிக்கிறது என்று கூறினார்.

    சீனு ராமசாமி

    சீனு ராமசாமி

    பார்த்திபனின் முயற்சியை பாராட்டி இயக்குனர் சீனு ராமசாமி பார்த்திபனின் உச்சந்தலையிலும் கைகளிலும் முத்தமிட்டு அவரின் பாராட்டுகளை தெரிவித்தார். ஒரு தேசிய விருது பெற்ற இயக்குனர் தனது சக இயக்குனரை மேடையின் மேல் நின்று அனைவர்க்கும் முன்னர் வார்த்தைகளால் சொல்ல முடியாமல் முத்தமிட்டு பாராட்டுவது என்பது எப்படிப்பட்ட ஒரு அற்புதமான கொடுப்பினை. இதற்கு நிச்சயம் பார்த்திபன் தகுதியானவர் என்பதில் எந்த ஒரு சந்தேகமுமில்லை.

    ரசிகர்கள் பாராட்டு

    ரசிகர்கள் பாராட்டு

    இது போன்ற மேடை நிகழ்வுகள் பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது. திரையுல பிரபலங்கள் மட்டுமின்றி ரசிகர்களும் அவர்களுடைய பாராட்டுகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர். தமிழ் சினிமாவை ஒரு படி மேலே கொண்டு சென்றுள்ள பார்த்திபனின் இந்த முயற்சி உலகளவில் பாராட்டை பெற்று வருகிறது. மேலும் இது போன்ற பல படைப்புக்களை வழங்க பார்த்திபன் அவர்களுக்கு எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    English summary
    Speaking at a tribute to Parthiban, Director S.A.Chandrasekhar congratulated Parthiban for his intention to create a Otha Seruppu size 7 film. This is also magnificent. Moreover,if Parthiban's film was not awarded a national award, the central government would lose its reputation.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X