‘ஒத்த செருப்பு’ ஆஸ்கருக்கு போகாட்டியும் பார்த்திபன் இப்போ ரொம்ப ஹேப்பி அண்ணாச்சி.. ஏன் தெரியுமா?
சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் பார்த்திபனின் ஒத்த செருப்பு சைஸ் 7 படத்திற்கு விருது வழங்கப்பட்டது.
Recommended Video
சென்னை: ஒத்த செருப்பு சைஸ் 7 படத்திற்கு சென்னையில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் விருது வழங்கப்பட்டது.
பிரபல இயக்குனரும் நடிகருமான ராதாகிருஷ்ணன் பார்த்திபன் தயாரித்து, இயக்கி, ஒற்றை ஆளாக நடித்த படம் ஒத்த செருப்பு சைஸ் 7. இந்த படம் எதிர்பார்த்ததை விட அதிகமாக பேசப்பட்டது.

கடந்த செப்டம்பர் மாதம் 20 ஆம் தேதி வெளியான இந்த படம் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டது. எனவே படத்திற்கு நிறைய விருதுகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அந்த எதிர்பார்ப்பு வீண்போகவில்லை.

சென்னையில் நடைபெற்ற 17வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் ஒத்த செருப்பு படத்துக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்த நடிகர் பார்த்திபன், "ஒத்த செருப்பு படம் ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பாக பரிந்துரைக்கப்படும் என எதிர்பார்த்தேன். ஆனால் அது நடக்கவில்லை. இப்போது இந்த படத்துக்கு உரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. இந்த விருது இந்த படத்திற்காக நான் எடுத்த முயற்சிக்கு தக்க சன்மானம்" என்றார்.


Click it and Unblock the Notifications











