ஒத்த செருப்பு சைஸ் 7 : பார்த்திபனுக்கு குவியும் பாராட்டு - தேசிய விருது ஏக்கத்தை போக்கும்

Recommended Video

ROOM போட்டு தரேன் உக்காந்து REVIEW பண்ணுங்க | ஒத்த செருப்பு SIZE -7 | PARTHIEPAN |FILMIBEAT TAMIL

சென்னை: ஒரு போலீஸ் ஸ்டேசன், லாக்அப் ரூம், அந்த லாக்கப் ரூமில் நடக்கும் விசாரணை, இதை அடிப்படையாக வைத்துதான் ஒத்த செருப்பு சைஸ் 7 படத்தின் கதையே நகர்கிறது. இந்த விசாரணையில் கதாபாத்திரங்கள் நகரும் விஷயத்தை வைத்து தான் படமே எடுக்கப்பட்டுள்ளது. நாம், ஏதாவது கதையோ நாவலோ படிக்கும்போது, அந்த கதாபாத்திரங்களுக்கு நாமே மனதில் ஒரு உருவம் கொடுத்துக்கொள்வோம். அதேபோல் தான், ஒத்த செருப்பு சைஸ் 7 படத்தின் சிறப்பு காட்சியை முக்கிய விஐபிகளுக்கு திரையிட்டு காண்பித்துள்ளனர். அதேபோல், இந்தப்படத்தில் வரும் கதாபாத்திரங்களையும் நாமே யூகித்துக்கொள்ளவேண்டும்.

நடிகரும் இயக்குனருமான ஆர்.பார்த்திபன் எதையும் வித்தியாசமாக செய்து ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துவதில் கில்லாடி. இது அவருடைய முதல் படத்திலிருந்தே தொடர்ந்து நடந்து வருகிறது. அது மாதிரியே எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, இவர் கலந்து கொண்டால் அந்த நிகழ்ச்சியில் இவர் பேசும் பேச்சு தான் முத்தாய்ப்பாக இருக்கும்.

மற்ற விருந்தினர்கள் என்னதான் பேசினாலும் சரி, அதை எல்லாம் தூக்கி சாப்பிடும் வகையில் இவருடைய பேச்சு இருக்கும். இவரின் பேச்சை கேட்கும் பார்வையாளர்களின் கைதட்டல் அடங்க நெடு நேரமாகும். எதையுமே வித்தியாசமாக செய்வதால் தான் பார்த்திபன் மற்றவர்களிடமிருந்து தனித்து நிற்கிறார். அதே போல் தான், இவர் தற்போது எடுத்துள்ள திரைப்படமான ஒத்த செருப்பு திரைப்படமும். இந்த திரைப்படத்தை பார்த்த விஐபிக்கள் அனைவருமே பாராட்டி தள்ளியிருக்கிறார்கள்.

ஒத்த செருப்புக்கு பாராட்டு

ஒத்த செருப்புக்கு பாராட்டு

முக்கியமாக தமிழக அரசின் பிரதிநிதிகளே படத்தை பாராட்டியுள்ளனர். தமிழக அமைச்சரான கடம்பூர் ராஜூவே, தமிழ் சினிமாவுக்கு தேசிய விருதுகள் இல்லை என்ற குறையை நிச்சயம் ஒத்த செருப்பு திரைப்படம் போக்கும் என்று பாராட்டியுள்ளார். இந்த திரைப்படத்தை பார்த்த ரஜினியும், பார்த்திபன் இந்த திரைப்படத்தின் மூலம் உச்சத்தை தொட்டிருக்கிறார் என்று பாராட்டு தெரிவித்துள்ளார்.

பார்த்திபனுக்கு பாராட்டு

பார்த்திபனுக்கு பாராட்டு

இயக்குனர் இமயம் பாரதிராஜாவோ, பார்த்திபன் இங்கு இருக்கவேண்டிய ஆளே கிடையாது. இவருக்கு தமிழ் சினிமா இன்னும் ஒரு நிலையான இடம் கொடுக்காதது தமிழ் சினிமாவின் துரதிருஷ்டம் என்று வேதனைப்பட்டிருந்தார்.

பார்த்திபன் மட்டுமே

பார்த்திபன் மட்டுமே

இந்த ஒத்த செருப்பு சைஸ் 7 திரைப்படம் அப்படி என்ன ஸ்பெஷல் என்று கேட்டால், அனைவருமே பொதுவான ஒரு பதில் தான் சொல்வதுண்டு. இப்படத்தில் பார்த்திபன் மட்டுமே நடித்திருக்கிறார் என்பது. ஆனால் அது மட்டுமே ஸ்பெஷல் கிடையாது. இந்த படத்தின் தயாரிப்பு முதல் நடிப்பு வரை அனைத்து துறைகளையும் ஒருவரே கையாண்டு வெற்றி பெற்றது தான் இதன் ஸ்பெஷல்.

ஒரே ஒரு கதாபாத்திரம்

ஒரே ஒரு கதாபாத்திரம்

உலகளவில் ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டுமே இடம்பெற்றுள்ள படங்களின் எண்ணிக்கை 12 தான். ஆனால் அந்த படங்களில் எல்லாமே தயாரிப்பு முதல் இயக்கம் வரை அனைத்தும் தனித்தனி நபர்களால் மேற்கொள்ளப்பட்டிருக்கும். ஆனால் இந்த ஒத்த செருப்பு சைஸ் 7 திரைப்படமோ, படத்தின் தலைப்புக்கு ஏற்பவே தனியாளாவே போராடி வெற்றி பெற்றுள்ளது தான் இந்தப்டத்தின் தனிச்சிறப்பாகும்.

நடிப்பு பசிக்கு தீனி

நடிப்பு பசிக்கு தீனி

இந்த ஒத்த செருப்பு சைஸ் 7 திரைப்படம், பார்த்திபன் என்னும் நடிப்பு அசுரனின் நடிப்பு பசிக்கு சரியான தீனியாக வாய்த்துள்ளது என்று தான் சொல்லத்தோன்றுகிறது. இந்தியாவில் அதிலும் தமிழ் சினிமாவில் எடுக்கப்பட்ட ஒரு உலகத்தரமான சினிமா என்று தான் ஒத்த செருப்பு படத்தை பார்த்த அனைவருமே பாராட்டுகின்றனர். இந்த படம் தேசிய விருதுக்காக மட்டுமே எடுக்கப்படவில்லை. நாம் பொதுவாக எந்த படத்தை பார்த்தாலும் இது உலகத்தரத்தில் எடுக்கப்பட்டுள்ளது என்ற பேருக்கு சொல்வோம்.

தமிழ் சினிமாவிற்கு பெருமை

தமிழ் சினிமாவிற்கு பெருமை

ஆனால், உண்மையிலேயே இது தான் உலகத்தரத்தில் எடுக்கப்பட்ட தமிழ் சினிமா என்பதில் நமக்கெல்லாம் பெருமைதான். தமிழ் சினிமா உலகத் தரத்தை எட்டவேண்டும் என்ற எல்லோருமே கனவு கண்டுகொண்டிருக்கும் வேளையில், பார்த்திபன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவருக்கே உரித்தான பாணியில் பல விஷயங்களை செய்து வருகிறார்.

தேசிய விருது

தேசிய விருது

1989ஆம் ஆண்டில் இவர் இயக்கி நடித்த முதல் படமான புதிய பாதை படத்திற்கும், 1999ஆம் ஆண்டில் இயக்கி நடித்த ஹவுஸ்புல் படத்திற்கும் சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருது கிடைத்துள்ளது. அதன் பிறகு இவருக்கு எந்த விருதும் கொடுக்கப்படவில்லை என்பதே வேதனையான விஷயம் தான்.
ஒத்த செருப்பு சைஸ் 7 திரைப்படம் விருதுக்காக எடுக்கப்படவில்லை. படம் பார்க்கும் ரசிகர்களின் மத்தியில் இது ஒரு வித்தியாசமான முயற்சியாக தெரியவேண்டும் என்பதற்காகவே எடுக்கப்பட்டுள்ளது என்று பார்த்திபன் கூறியுள்ளார்.

கதாபாத்திரத்தின் முகங்கள்

கதாபாத்திரத்தின் முகங்கள்

பொதுவாகவே, நாம் அன்றாடம் தூங்கி விழித்தவுடன் நம் மனக்கண்ணில் பல்வேறு கதாபாத்திரங்கள் ஓடும். ஆனால் சில கதாபாத்திரங்கள் மட்டுமே தொடர்ந்து மனதில் நிலைத்து நிற்கும். சில காணாமல் போய் வேறு முகங்கள் நம் மனதில் வந்து நிற்கும். அது மாதிரியே, இந்தப் படத்தில் இடம் பெற்றிருக்கின்ற ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் நாமே ஒரு உருவம் கொடுத்துக்கொள்ளலாம்.

மனதில் வரும் உருவம்

மனதில் வரும் உருவம்

நாம், ஏதாவது கதையோ நாவலோ படிக்கும்போது, அந்த கதாபாத்திரங்களுக்கு நாமே மனதில் ஒரு உருவம் கொடுத்துக்கொள்வோம். அதேபோல் தான், ஒத்த செருப்பு சைஸ் 7 படத்தின் சிறப்பு காட்சியை முக்கிய விஐபிகளுக்கு திரையிட்டு காண்பித்துள்ளனர். அதேபோல், இந்தப்படத்தில் வரும் கதாபாத்திரங்களையும் நாமே யூகித்துக்கொள்ளவேண்டும்.

ஓவியங்கள்

ஓவியங்கள்

அந்த கதாபாத்திரங்களை யூகித்து வரைவதற்காகவே போட்டியை வைத்திருக்கிறார்கள். இப்போட்டியில் ஓவியக்கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டு ஓவியங்களை வரைந்து வருகிறார்கள். இதனை நேரடியாக இன்று காலை முதல் 24 மணி நேரத்திற்கு நேரடியாக ஒளிபரப்பி வருகின்றனர்.
இந்த ஓவியம் வரைவதற்கு, ஒரு போலீஸ் ஸ்டேசன், லாக்அப் ரூம், அந்த லாக்கப் ரூமில் நடக்கும் விசாரணை, இதை அடிப்படையாக வைத்துதான் ஒத்த செருப்பு சைஸ் 7 கதையே நகர்கிறது.

முயற்சிக்கு வெற்றி

முயற்சிக்கு வெற்றி

இந்த விசாரணையில் கதாபாத்திரங்கள் நகரும் விஷயத்தை வைத்து தான் படமே எடுக்கப்பட்டுள்ளது. இது ஒரு நல்ல முயற்சிதான். பார்த்திபனின் இந்த அசாத்திய முயற்சி அபார வெற்றி பெற நம்முடைய ஃபிலிமிபீட் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X