twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஒத்த செருப்பு சைஸ் 7 : தனி ஒருவனாக கலக்கும் பார்த்திபன்

    |

    Recommended Video

    ROOM போட்டு தரேன் உக்காந்து REVIEW பண்ணுங்க | ஒத்த செருப்பு SIZE -7 | PARTHIEPAN |FILMIBEAT TAMIL

    சென்னை: ஒத்த செருப்பு சைஸ் 7 படத்தின் சிறப்பு காட்சியை பார்த்த சினிமா பிரபலங்கள் படத்தை வெகுவாக பாராட்டினர். அதோடு இந்த திரைப்படத்தை பார்த்த ஓவியர்கள் மற்றும் மாணவர்களில் பெரும்பாலானவர்கள் பார்த்திபனின் மகனாக வரும் கதாபாத்திரத்தைய வரைந்து கொண்டிருந்தது பலரையும் உற்று நோக்க வைத்தது என்று சொல்லலாம்.

    இந்திய சினிமா வரலாற்றிலேயே படம் வெளியாவதற்கு முன்பே பரபரப்பாக பேசப்பட்டு வரும் திரைப்படம் ஒத்த செருப்பு சைஸ் 7. பெரும் எதிர்பார்ப்போடும், அதிக சிரத்தையோடும் உருவாக்கப்பட்ட படம் தான் அது.

    இந்த திரைப்படத்தைப் பற்றி தமிழ் சினிமாவின் ரஜினி, கமல், கன்னட சினிமாவின் கே.ஜி.எஃப் புகழ் யாஷ், மலையாள சினிமாவின் மம்முட்டி, மோகன்லால், தெலுங்கு மெகாஸ்டார் சிரஞ்சீவி, பாலிவுட்டின் அமீர்கான் என பாராட்டாத ஜாம்பவான்களே கிடையாது என்று சொல்லலாம்.
    உலக சினிமா வரலாற்றிலேயே இதுவரை 12 திரைப்படங்கள் மட்டுமே இந்த மாதிரியான கதைக்களத்தோடு வெளிவந்துள்ளன. ஆனால் அவையெல்லாமே தயாரிப்பு, இயக்கம், நடிப்பு என ஒவ்வொன்றும் தனித்தனி ஆளுமையின் கீழ் உருவாக்கப்பட்டிருக்கும்.

    பார்த்திபன் ஒன் மேன் ஆர்மி

    பார்த்திபன் ஒன் மேன் ஆர்மி

    ஒத்த செருப்பு சைஸ் 7 திரைப்படத்தை, தயாரிப்பு, இயக்கம் நடிப்பு என அனைத்து பொறுப்புகளையும் ஒற்றை ஆளாகவே ஏற்று திறம்பட உருவாக்கி இருக்கும் சாதனை படமாகும். இந்தப்படத்தில் ஆர்.பார்த்திபன் மட்டுமே நடித்துள்ளார். மற்ற கதாபாத்திரங்கள் வெறும் பின்னணியில் மட்டுமே ஒலிக்கின்றன. இதனால், சினிமா ரசிகர்களின் மத்தியில் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது.

    கதையும் திரைக்கதையும்

    கதையும் திரைக்கதையும்

    பொதுவாகவே, ஒரு திரைப்படத்தின் கதையும் திரைக்கதையும் தயாரானவுடன், அடுத்ததாக, அந்தக் கதையில் இடம்பெற்றுள்ள கதாபாத்திரங்களுக்கு ஏற்றவாறு நடிகர்களை தேர்வு செய்வதுதான் முக்கிய வேலையாகும். படங்களை பார்த்து ரசிக்கும் நாமே ஒரு படத்தை பார்க்கும்போதே, இந்த கதாபாத்திரத்திற்கு இவருக்கு பதில் அவர் நடித்திருந்தால் மிகச்சிறப்பாக இருந்திருக்கும் என்று நம்முடைய மனதிலேயே ஒரு உருவத்தை வரைந்திருப்போம். அது மாதிரியே ஒரு படத்தில் இடம்பெறும் கதாபாத்திரங்களை தேர்வு செய்வதும் வழக்கம்.

    வித்தியாசமான பார்த்திபன்

    வித்தியாசமான பார்த்திபன்

    இந்த கதாபாத்திரத்திற்கு இவர் தான் சரியான தேர்வாக இருப்பார் என்று இயக்குநர் முடிவு செய்து அதற்கேற்ப நடிகர்களை தேர்வு செய்வது வழக்கம். நாயகனாக, நாயகியாக, வில்லனாக, என அனைத்தையும் சரியான முறையில் தேர்ந்தெடுத்து படத்தில் நடிக்கவைப்பது நடைமுறை. அப்பொழுது தான் அந்த திரைப்படமும் இயக்குநர் எதிர்பார்த்த மாதிரியான காட்சியமைப்பு இருக்கும். ஆனால், நம் இயக்குநர் பார்த்திபனோ, எதையும் வித்தியாசமாக செய்வது தானே வழக்கம். இந்த ஒத்த செருப்பு சைஸ் 7 படத்திலும் வித்தியாசமாக தயாரித்திருக்கிறார்.

    ஓவியக்கல்லூரி மாணவர்கள்

    ஓவியக்கல்லூரி மாணவர்கள்

    இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள கதாபாத்திரங்களுக்கான உருவத்தை உருவாக்கும் வேலையை நம்மிடமே விட்டுவிட்டார். இந்த திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள கதாபாத்திரங்களை உருவாக்கவே, ஸ்பெஷலாக முக்கிய விஐவிக்களுக்கு திரையிட்டு காட்டியுள்ளனர். அதில் சென்னையிலுள்ள மிகச்சிறந்த ஓவியர்களும், ஓவியக்கல்லூரி மாணவர்களும் கலந்து கொண்டனர். இப்படத்தை பார்த்த சினிமா உலக பிரமுகர்களும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    ஓவியர் ஸ்ரீதர்

    ஓவியர் ஸ்ரீதர்

    இதில் கலந்து கொண்ட ஓவியர்களும் ஓவியக்கல்லூரி மாணவர்களும் தங்களின் கைவண்ணத்தை, ஒத்த செருப்பு சைஸ் 7 திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள கதாபாத்திரங்களை வரைவதில் காட்டியுள்ளனர். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர் பேசும்போது, நான் சென்ற வாரம் இந்த படத்தை பார்த்தேன். உண்மையிலேயே இது ஒரு மிக அற்புதமான படம். இயக்குநர் பார்த்திபன் என்னுடைய நீண்ட நாள் நண்பர். அதோடு அவர் என்னுடைய வெல்விஷரும் கூட. அவர் எது பண்ணினாலும் தன்னுடைய தனித்துவத்தை காட்டுவார். இந்த படத்தை பத்தி சொல்ல வார்த்தைகளே கிடையாது. அவ்வளவு அற்புதமாக வந்திருக்கு என்றார்.

    தனி ஒருவன் பார்த்திபன்

    தனி ஒருவன் பார்த்திபன்

    தனி ஒரு ஆளா ரெண்டு மணி நேரம் ஒரு படத்தையே கையாண்டிருக்கார். அதோடு, கிட்டத்தட்ட 30 பேரை இந்தப் படத்தில் பார்த்திபன் நம்முடைய கண் முன்னாடி கொண்டு வந்து நிப்பாட்டி இருக்கார். ஆனால் யாரையுமே நாம பார்க்க முடியாது. பார்த்திபனை மட்டுமே பார்க்க முடியும். அவரோட மிஸஸ் கதாபாத்திரம், அவரோட குழந்தை கேரக்டர், பொலிடீசியன், ஒரு போலீஸ் ஆஃபீசர் என நிறைய கேரக்டர்களை பின்னணியில கொண்டு வந்திருக்கார்.

    கதாபாத்திரங்கள் கற்பனை

    கதாபாத்திரங்கள் கற்பனை

    ஆனால், அவங்கெல்லாம் எப்படி இருப்பாங்கன்னு யாருக்குமே தெரியாது. அதனால் இந்த படத்தை பாத்துட்டு, அதை எல்லாம் நம்ம பெயிண்டர்ஸ் பெயிண்ட் பண்ணினா எப்படி இருக்கும்னு ஒரு புது முயற்சி எடுத்து பெயிண்டர்ஸ் எல்லாம் வரைஞ்சிகிட்டு இருக்காங்க. இதுல கலந்துகிட்டவங்க எல்லாமே அனுபவசாலிங்க தான் என்றார் ஸ்ரீதர்.

    மாசிலாமணி

    மாசிலாமணி

    இதில் கலந்துகொண்ட பிரியதர்ஷினி என்ற மாணவி, இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள நாயகன் பார்த்திபனின் மகனுடைய கதாபாத்திரத்தை வரைந்துகொண்டிருந்தார். அவர் கூறும்போது, படம் ரொம்ப நல்லா வந்திருக்கு, இன்ட்ரஸ்டிங்கா இருக்கு என்றார். மற்றொரு மாணவி வருணா என்பவர், ஐந்து கதாபாத்திரங்களை தேர்வு செய்து அவுட்லைன் போடும் வேலையில் பிஸியாக இருந்தார். அவரிடம் பேச்சு கொடுத்தபோது, மகேஷ் என்பவரின் கதாபாத்திரத்தை வரைந்து கொண்டிருந்தார். இந்த கதாபாத்திரத்திற்கு ஒரு கண் தெரியாது, ஒரு கால் ஊனம்னு சொன்னாங்க. அது எப்படி இருக்கும்னு யோசிச்சு வரைஞ்சிகிட்டு இருக்கேன் என்றார்.

    மாணவர்களின் கற்பனை

    மாணவர்களின் கற்பனை

    அரசியல்வாதி கதாபாத்திரத்தின் எடுபிடியாக வருபவரின் கதாபாத்திரத்தை ஒரு மாணவி வரைந்துகொண்டிருந்தார். அவரிடம் பேச்சு கொடுத்தபோது, தனக்கு மாசிலாமணியின் மகனின் கதாபாத்திரம் பிடித்திருப்பதாக சொன்னார். அதோடு ஒரு போலீஸ் அதிகாரியின் படத்தையும் இதில் வரைவதாக சொன்னார்.

    ஒத்தச்செருப்பு

    ஒத்தச்செருப்பு

    இன்னும் சிலர் ஒத்த செருப்பு படத்தை வரைந்து கொண்டிருந்தனர். ஆனால் பெரும்பாலான ஓவியர்கள் பார்த்திபன் மகனின் கதாபாத்திரத்திரம் பெரிதும் பாதித்திருப்பதாக சொல்லி அந்த கதாபாத்திரத்தையே வரைந்து கொண்டிருந்தனர். மொத்தத்தில் எதையும் புதுமையாக செய்யும் பார்த்திபனின் இந்த புதிய முயற்சியும் படைப்பும் வெற்றியடைய நமது ஃபிலிமிபீட் சார்பாக வாழ்த்துகிறோம்.

    English summary
    Cinema celebrities who have seen the special footage of the movie 'Otha Seruppu Size 7' have praised the film. In addition, most of the painters and students who saw the film were drawn to the role of Parthiban's son.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X