லாரன்ஸ் மாஸ்டர்காரு.. எங்களுக்கு உதவி செய்யுங்க.. வீடியோ மூலம் வெளி மாநில தொழிலாளர்கள் உருக்கம்!

சென்னை: தமிழகத்தில் தங்கியிருக்கும் வெளி மாநிலத் தொழிலாளர்கள் நடிகர் ராகவா லாரன்ஸிடம் உதவி கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளனர்.

Recommended Video

லாரன்ஸ் மாஸ்டர்காரு.. எங்களுக்கு உதவுங்க.. வெளி மாநில தொழிலாளர்கள்! - வீடியோ

கொரோனா வைரஸ் பரவ தொடங்கிய நாள் முதல் நடிகர் ராகவா லாரன்ஸ், வருமானம் இல்லாமல் தவிக்கும் தொழிலாளர்களுக்கு உதவி செய்து வருகிறார்.

பொருளுதவியையும் பண உதவியையும் வாரி வழங்கி வருகிறார். இல்லை என கேட்பவருக்கு இல்லை என சொல்லாமல் உதவிக்கரம் நீட்டி வருகிறார் லாரன்ஸ்.

குழந்தைக்கு

குழந்தைக்கு

லாரன்ஸ், கஷ்டப்படுபவர்களுக்கு உதவி செய்வது என்பது இன்று நேற்று நடப்பதல்ல. அவர் சம்பாதிக்க தொடங்கியது முதலே தன்னால் முடிந்தவரை ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பிறந்து 9 நாட்களே ஆன குழந்தைக்கு ஆப்ரேஷன் செய்ய உதவினார்.

கொரோனா நிதி

கொரோனா நிதி

அந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. கொரோனா நிதியுதவியாக மத்திய மாநில அரசுகளுக்கு நன்கொடை வழங்குவது, சினிமா தொழிலாளர்கள், விநியோகஸ்தர்கள் சங்கம், நடிகர்கள் சங்கம் என பலருக்கும் உதவிகளை வாரி வழங்கி வருகிறார்.

வீடியோ மூலம் கோரிக்கை

வீடியோ மூலம் கோரிக்கை

இந்நிலையில் தமிழகத்தில் வேலை பார்த்து வரும் வெளி மாநிலத் தொழிலாளர்கள் சிலர், தங்கள் ஊருக்கு திரும்பி செல்ல, நடிகர் லாரன்ஸ் உதவி செய்ய வேண்டும் என வீடியோ மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

லாரன்ஸ் மாஸ்டர்காரு..

லாரன்ஸ் மாஸ்டர்காரு..

அந்த வீடியோவில் பேசியிருக்கும் இரண்டு பெண் தொழிலாளர்கள், லாரன்ஸ் மாஸ்டர்காரு, நாங்கள் எங்கள் ஊருக்கு செல்ல உதவி செய்யுங்கள். எங்கள் பிள்ளைகள் எல்லாம் அங்கு இருக்கிறார்கள். உங்களிடம் உதவி கேட்டால் செய்வீர்கள் என்று சொன்னார்கள்.

உதவி செய்யுங்கள்

உதவி செய்யுங்கள்

அதனால் உங்கள் வீட்டிற்கு வந்தோம். ஆனால் நீங்கள் வீட்டில் இல்லை என்று உங்கள் வாட்ச்மேன் கூறினார். மேலும் எங்களின் போன் நம்பரை பெற்றுக்கொண்டு, உங்களிடம் பேசிவிட்டு நல்ல முடிவாக சொல்வதாக தெரிவித்தார். உங்களின் பதிலுக்காக காத்திருக்கிறோம். எங்களுக்கு உதவி செய்யுங்கள்.. இவ்வாறு கூறியுள்ளனர்.

அவங்களுக்கும் தெரிஞ்சுருக்கு

அவங்களுக்கும் தெரிஞ்சுருக்கு

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள், அவரிடம் கேட்டால் நிச்சயம் உதவி கிடைக்கும் என வெளி மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு கூட தெரிகிறது என புகழ்ந்துள்ளனர். அண்மையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்க வேண்டும் கமல், அஜித், விஜய், சூர்யா ஆகியோரிடம் கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Read more about: lawrence லாரன்ஸ்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X