Others Twitter Review - கௌரி கிஷனின் Others.. த்ரில்லரில் மிரள வைத்ததா படம்?.. ட்விட்டர் விமர்சனம்
சென்னை: அபின் ஹரிஹரன் இயக்கத்தில் ஆதித்யா மாதவன், கௌரி கிஷன், அஞ்சு குரியன், முனீஸ்காந்த் என பலர் நடித்திருக்கும் திரைப்படம் அதர்ஸ். மெடிக்கல் த்ரில்லர் ஜானரில் உருவாகியிருக்கும் இப்படம் நேற்று திரையரங்குகளில் ரிலீஸானது. இந்நிலையில் படம் பார்த்த பலரும் தங்களது விமர்சனத்தை எக்ஸ் பக்கத்தில் வைக்க ஆரம்பித்திருக்கிறார்கள். ஓரளவு பாசிட்டிவ் ரெஸ்பான்ஸே கிடைத்திருக்கிறது.
96 படத்தில் நடித்து பிரபலமான கௌரி கிஷன் தற்போது தமிழில் பிஸியான நடிகையாக இருக்கிறார். அவர் இப்போது அபின் ஹரிஹரன் இயக்கத்தில் அதர்ஸ் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இதில் ஹீரோவாக ஆதித்யா மாதவன் நடிக்க; அஞ்சு குரியன், முனீஸ்காந்த் உள்ளிட்டோர் எல்லாம் முக்கியமான கதாபாத்திரத்தை ஏற்றிருக்கிறார்கள். மெடிக்கல் த்ரில்லர் ஜானரில் படமானது உருவாகியிருக்கிறது.

பத்திரிகையாளர் சந்திப்பில் சர்ச்சை: இப்படம் தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பின்போதுதான் யூடியூபர் ஒருவர் கௌரி கிஷனின் எடையை பற்றி பேசினார். அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கௌரிக்கு ஆதரவாக நடிகர் கவின், நடிகை குஷ்பூ, இயக்குநர் பா.இரஞ்சித் உள்ளிட்டோர் எல்லாம் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழலில் நேற்று படமானது தியேட்டர்களில் ரிலீஸானது.
எப்படி இருக்கு படம்?: படம் பார்த்த ரசிகர்கள் தங்களது விமர்சனத்தை சொல்லியிருக்கிறார்கள். அதன்படி இவர் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், "சஸ்பென்ஸ், ட்விஸ்ட் மற்றும் திருப்பங்களுடன் மெடிக்கல் த்ரில்லர் ஜானரில் உருவாகியிருக்கிறது. இந்த ஐடியாவை இயக்குநர் சிறப்பாக ப்ரெசெண்ட் செய்திருக்கிறார். ஆதித்யா மாதவனின் ஸ்க்ரீன் ப்ரெசன்ஸ் அற்புதமாக இருக்கிறது. கௌரி கிஷனும் தனக்கு கொடுத்திருக்கும் வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். க்ளைமேக்ஸில் டைட்டிலுக்கு நியாயம் செய்திருக்கிறார்கள்" என்று பதிவிட்டிருக்கிறார்.
இந்த ரசிகர் தனது எக்ஸ் பக்கத்தில், "தெளிவான மெடிக்கல் க்ரைம் த்ரில்லர் படமாக இருக்கிறது. எதிர்பார்க்காத ட்விஸ்ட்டுகள் இருக்கின்றன. டைட்டிலுக்கு தகுந்தவாறு க்ளைமேக்ஸை செய்திருக்கிறார்கள். ஹீரோவும், ஹீரோயினும் நன்றாக நடித்திருக்கிறார்கள். 5க்கு 3.25 மதிப்பென் கொடுக்கலாம்" என குறிப்பிட்டிருக்கிறார்.

இரண்டாம் பாதி சுமார்தான்: இவர் தனது எக்ஸ் பக்கத்தில், "முதல் பாதியில் ஒரு பாடலை தவிர்த்து அனைத்தும் சிறப்பாக ஓடுகிறது. ஆனால் இரண்டாம் பாதி சுமார்தான். எடிட்டிங்கும், ரைட்டிங்கும் படத்தின் பெரிய குறை. நீளத்தையும் கொஞ்சம் குறைத்திருக்கலாம்.

ஆதித்யா மாதவனின் நடிப்பு சிறப்பாக இருக்கிறது. கௌரியும், முனீஸ்காந்த்தும் ஓகே. குறைகள் இருந்தாலும் தாராளமாக ரசிக்கலாம். 5க்கு 3 மதிப்பெண் கொடுப்பேன்" என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











