“ஒத்த செருப்பு“ இந்தி ரீமேக்கில் நடிக்கும் பிரபல நடிகர்… வெளியான சூப்பர் அப்டேட் !

சென்னை : ஒத்த செருப்பு இந்தி ரீ மேக்கில் நடிக்கும் நடிகர் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்த படத்தை இந்தியில் பார்த்திபனே இயக்குகிறார். ஒளிப்பதிவு பணிகளை ராம்ஜியும், எடிட்டராக சுதர்சனும் பணிபுரிய உள்ளனர்.

ப்ரீ - புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடந்து வந்த நிலையில், தற்போது படப்பிடிப்பும் ஆரம்பமாகியுள்ளது.

ஒத்த செருப்பு சைஸ் 7

ஒத்த செருப்பு சைஸ் 7

இயக்குநர் பார்த்திபன் எழுதி, இயக்கி, ஒரே ஆளாக நடித்திருந்த திரைப்படம் ஒத்தசெருப்பு சைஸ் 7. இந்தப் படம் கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியானது. இதன் பின்னணி இசையை இசையமைப்பாளர் சி. சத்யாவும் ஒரு பாடலை சந்தோஷ் நாராயணனும் இசையமைத்துள்ளனர். இந்தப் படத்தை பார்த்திபன் தனது தயாரிப்பு நிறுவனமான, பயோஸ்கோப் பிலிம் ப்ரேமர்ஸின் கீழ் தயாரித்து இருந்தார்.

உணர்வுப்பூர்வ

உணர்வுப்பூர்வ

காவலாளியாக வேலை பார்க்கும் நடுத்தர வயது மனிதன் மாசிலாமணி ஒரு கொலைக்குற்றவாளியாக சந்தேகிக்கப்பட்டு விசாரணையில் இருக்க, அவரது நோயுற்ற மகன் விசாரணை அறைக்கு வெளியில் காத்திருக்கிறார். திரையில் தெரியும் பார்த்திபனுக்கும், பார்வையாளர்களுக்கும் இடையேயான உரையாடலும், உணர்வுப் பூர்வமான புரிதலும் தான் ஒத்த செருப்பு சைஸ் 7.

சாதனை புத்தகத்தில்

சாதனை புத்தகத்தில்

ஒரு நபரே எழுதி, இயக்கி, நடித்து தயாரித்ததற்காக இந்த படம் ஆசிய சாதனைகள் புத்தகத்திலும் இந்திய சாதனைப் புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளது. இப்படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு, விருதுகளையும் வென்றது.

தேசிய விருது

தேசிய விருது

67-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு விழாவில் ஸ்பெஷல் ஜூரி விருதையும், சிறந்த ஒலிப்பதிவுக்கான விருதை ரசூல் பூக்குட்டி தட்டிச் சென்றார். புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் பார்த்திபனுக்கு இந்த தேசிய விருது பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

என்ன பெயர் வைக்கலாம்

என்ன பெயர் வைக்கலாம்

ஒத்த செருப்பு சைஸ்7 திரைப்படத்தை ஆங்கிலம் மற்றும் இந்தியில் உருவாக்கும் முயற்சியில் இயக்குனர் பார்த்திபன் ஈடுபட்டு வந்தார்.இதற்காக தனதுட்விட்டர் பக்க்ததில், ஒத்த செருப்பு படத்திற்கு இந்தியில், என்ன பெயர் வைக்கலாம் என கேட்டு இருந்தார்.

ரீமேக்கில் அபிஷேக் பச்சன்

ரீமேக்கில் அபிஷேக் பச்சன்

இந்த படத்தின் இந்தி ரீமேக் பற்றி தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை இந்தியில் பார்த்திபனே இயக்குகிறார். ஒளிப்பதிவாளராக ராம்ஜியும், எடிட்டராக சுதர்சனும் பணிபுரிய உள்ளனர். இந்தி சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன் இந்த படத்தை தயாரிக்கிறார். அபிஷேக் பச்சன் பார்த்திபன் நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். அபிஷேக் பச்சன் மணிரத்னம் இயக்கத்தில் உருவான குரு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் பரீச்சியம் ஆனார். அபிஷேக் பச்சனுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

விரைவில் ஹோலிவுட்டிலும்

விரைவில் ஹோலிவுட்டிலும்

இந்த படத்திற்கான ப்ரீ - புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடந்து வந்த நிலையில், தற்போது படப்பிடிப்பும் ஆரம்பமாகியுள்ளது. இதை தொடர்ந்து பலர் படக்குழுவினருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். பாலிவுட் மற்றும் இன்றி இந்த படத்தை ஹோலிவுட்டில் படமாக்கவும் பார்த்திபன் முயற்சி செய்து வருகிறார். விரைவில் ஹோலிவுட்டிலும் இந்த படத்தை ரீமேக் இருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X