twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஓட்டோ விளம்பரத்தின் காப்பியா விஜய்யின் வாரிசு போஸ்டர்? விளக்கம் அளித்த ஓட்டோ நிறுவனம்!

    |

    சென்னை : நடிகர் விஜய்யின் 48வது பிறந்தநாளையொட்டி கடந்த 22ம் தேதி அவரது வாரிசு படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியிடப்பட்டது.

    இந்நிலையில் இந்தப் படத்தின் போஸ்டர்கள் ரஜினியின் படத்திலிருந்து காப்பி அடிக்கப்பட்டதாக நெட்டிசன்கள் குறிப்பிட்டு விமர்சனம் செய்தனர்.

    மேலும் ஓட்டோ விளம்பரப் படத்திலிருந்து காப்பி அடிக்கப்பட்டதாகவும் விமர்சனங்கள் எழுந்தன.

    நமக்கு எல்லாம் இப்படியே அமையுது.. என்ன செய்ய? நொந்துகொண்ட சுந்தர்.சி! நமக்கு எல்லாம் இப்படியே அமையுது.. என்ன செய்ய? நொந்துகொண்ட சுந்தர்.சி!

    நடிகர் விஜய்

    நடிகர் விஜய்

    நடிகர் விஜய் பீஸ்ட் படத்தை தொடர்ந்து தற்போது விஜய் 66 படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் சூட்டிங் சென்னை, ஐதராபாத்தை தொடர்ந்து தற்போது சென்னையில் 3வது கட்டமாக நடைபெற்று வருகின்றன. விஜய் இந்தப் படத்தில் இரண்டு கதாபாத்திரங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது.

    குடும்ப சென்டிமெண்ட்

    குடும்ப சென்டிமெண்ட்

    தொடர்ந்து மாஸ் படங்களில் நடித்துவரும் விஜய் நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்தப் படத்தில் குடும்ப சென்டிமெண்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள கதைக்களத்தில் நடித்து வருகிறார். மேலும் அவரது படங்களுக்கே உரிய காமெடி, ஸ்டண்ட் காட்சிகளும் படத்தில் இடம்பெற்றுள்ளதாக முன்னதாக தயாரிப்பாளர் தில் ராஜூ தெரிவித்திருந்தார்.

    டைட்டில் வெளியீடு

    டைட்டில் வெளியீடு

    படத்தின் டைட்டில் வெளியிடப்படாமல் தொடர்ந்து இந்தப் படத்தின் சூட்டிங் நடத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த 22ம் தேதி விஜய் பிறந்தநாளையொட்டி படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகின. படத்திற்கு வாரிசு என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. மேலும் ஸ்டைலான விஜய்யின் 3 லுக் போஸ்டர்கள் வெளியாகின.

    வாரிசு படத்தின் பர்ஸ்ட் லுக்

    வாரிசு படத்தின் பர்ஸ்ட் லுக்

    இதில் முதலில் வெளியான போஸ்டரில் விஜய் கோட் சூட்டுடன் ஸ்டைலாக காணப்பட்டார். இந்த லுக் நடிகர் ரஜினியின் படத்தின் போஸ்டரின் காப்பி என்று முன்னதாக விமர்சனங்கள் எழுந்தன. தொடர்ந்து இந்தப் படத்தில் விஜய்யின் உடை மற்றும் போஸ் உள்ளிட்டவை துல்கர் சல்மானின் ஓட்டோ விளம்பர படத்தின் காப்பி என்று ஒப்பீட்டுடன் நெட்டீசன்கள் புகைப்படங்களை வெளியிட்டனர்.

    ஓட்டோ நிறுவனம் விளக்கம்

    ஓட்டோ நிறுவனம் விளக்கம்

    இந்த விமர்சனங்கள் விஜய் ரசிகர்களை வெகுவாக பாதித்துள்ளது. இந்நிலையில் ஓட்டோ நிறுவனம் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதுகுறித்த விளக்கத்தை அளித்துள்ளது. துல்கர் சல்மான் இடம்பெற்றுள்ள இந்த ஓட்டோ விளம்பரம் தங்களுடையது இல்லை என்றும் சில மீம்ஸ் கிரியேட்டர்கள் இதை உருவாக்கியுள்ளதாகவும் விளக்கம் அளித்துள்ளது.

    விஜய்க்கு வாழ்த்து

    விஜய்க்கு வாழ்த்து

    இதனிடையே வாரிசு படத்தின் போஸ்டர் தங்களது நிறுவனத்துடன் எந்த வகையிலும் தொடர்புடையது இல்லை என்றும் தெரிவித்துள்ளது. மேலும் விஜய்யின் வாரிசு படத்திற்கு தங்களுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளது. இதன்மூலம் இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

    விமர்சனத்திற்குள்ளான போஸ்டர்

    விமர்சனத்திற்குள்ளான போஸ்டர்

    சமீப காலங்களில் விஜய்க்கு நேரம் சரியில்லை போல இருக்கிறது. இவரது பீஸ்ட் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்தப் படத்தை இயக்கியதற்காக நெல்சன் திலீப்குமாரை ரசிகர்கள் வைத்து செய்தனர். விஜய்யையும் கலாய்த்து தள்ளினர். இந்நிலையில் தற்போது அவரது அடுத்த படத்திலும் போஸ்டர் தற்போது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

    ஓட்டோ விளக்கம்

    ஓட்டோ விளக்கம்

    3 போஸ்டர்கள் வெளியான நிலையில் 2 போஸ்டர்கள் ரஜினி பட சாயலிலும் ஒரு போஸ்டர் கேஜிஎப் படத்தின் சாயலிலும் உள்ளதாக விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் தற்போது இதுகுறித்து ஓட்டோ விளக்கமளித்துள்ளது விஜய் ரசிகர்களை ஆசுவாசப்படுத்தக் கூடும்.

    English summary
    Otto gives explanation about Varisu poster issue
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X