நம்ம தீபாவளி நவம்பர் 25ம் தேதிக்கு தள்ளி போயிருக்கு... வெங்கட் பிரபு ட்வீட்

சென்னை : நடிகர் சிம்பு, எஸ்ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ளது மாநாடு படம்.

படம் தீபாவளியையொட்டி ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி படம் நவம்பர் 25ம் தேதிக்கு ரிலீசாக உள்ளதாக அறிவித்துள்ளார்.

மாநாடு படம்

மாநாடு படம்

நடிகர் சிம்பு, எஸ்ஜே சூர்யா மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாநாடு. நீண்ட நாட்களாக படப்பிடிப்பு நடைபெற்ற நடைபெற்ற நிலையில் தற்போது ரிலீசுக்கு படம் தயாராகியுள்ளது. படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார்.

வெங்கட் பிரபு சிறப்பு

வெங்கட் பிரபு சிறப்பு

முதலில் இவர்கள் கூட்டணியில் பில்லா 3 படம் உருவாகவுள்ளதாக கூறப்பட்ட நிலையில் தற்போது இந்தப் படம் உருவாகியுள்ளது. படத்தின் ஒவ்வொரு காட்சிகளையும் சிறப்பாக வெங்கட் பிரபு இயக்கியுள்ளதாக படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. படம் தனக்கு மிகுந்த திருப்தியை அளித்துள்ளதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியும் தெரிவித்துள்ளார்.

தீபாவளி ரிலீஸ் என அறிவிப்பு

தீபாவளி ரிலீஸ் என அறிவிப்பு

இந்தப் படம் தீபாவளிக்கு அண்ணாத்த மற்றும் எனிமி உள்ளிட்ட படங்களுடன் மோதும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் விநியோகஸ்தர்கள் உள்ளிட்டோர் நஷ்டம் அடையக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு படத்தின் ரிலீசை நவம்பர் 25ம் தேதிக்கு தள்ளி வைப்பதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்துள்ளார்.

சிம்பு ரசிகர்கள் ஏமாற்றம்

சிம்பு ரசிகர்கள் ஏமாற்றம்

இதனால் சிம்பு ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். படத்தின் பாடல், டீசர், ட்ரெயிலர் உள்ளிட்டவை வெளியிடப்பட்டு மிகுந்த வரவேற்பை பெற்றுள்ள நிலையில், தயாரிப்பாளரின் இத்தகைய முடிவு அவர்களை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

தள்ளிப்போன தீபாவளி

தள்ளிப்போன தீபாவளி

இந்நிலையில் நம்முடைய தீபாவளி நவம்பர் 25ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். இந்த முடிவுக்கு படத்தின் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவும் ஆதரவு தெரிவித்துள்ளார். இது சரியான முடிவுதான் என்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

சிறப்பான நடிகர்கள்

சிறப்பான நடிகர்கள்

படத்தில் நடிகர் சிம்பு தன்னுடைய உடலை கணிசமாக குறைத்து ஸ்லிம்மாகியுள்ளார். இது படத்திற்கு மேலும் சிறப்பை சேர்த்துள்ளது. மேலும் அவருடன் ஜோடி சேர்ந்துள்ள கல்யாணி பிரியதர்ஷனும் மிகவும் அழகாகவும் இளமையாகவும் ரசிகர்களை வெகுவா கவரும் வகையில் உள்ளார் என்பது படத்திற்கு கூடுதல் பலம்.

எஸ்ஜே சூர்யா மிரட்டல்

எஸ்ஜே சூர்யா மிரட்டல்

நடிகர் எஸ்ஜே சூர்யாவும் வில்லனாக மிரட்டியுள்ளார். இதை படத்தின் ட்ரெயிலர், டீசர் உள்ளிட்டவற்றின்மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. ஒரு படத்தின் பலத்திற்கு வில்லனும் முக்கிய காரணமாக அமைய வேண்டும். அந்த வகையில்எஸ்ஜே சூர்யா சிறப்பான தேர்வாக காணப்படுகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X