twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சங்க உறுப்பினர்களின் தேவைகளை சேகரிப்பதே எங்களின் முதல் பணி: விஷால் அணி

    By Mayura Akilan
    |

    சென்னை: நடிகர் சங்க உறுப்பினர்களின் தேவைகளை சேகரிப்பதே எங்களின் முதல் பணி என்று தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற பொருளாளர் கார்த்தி கூறியுள்ளார்.

    தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் நேற்று சென்னை மயிலாப்பூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலில் நடிகர் விஷால் தலைமையில் ஒரு அணியும், நடிகர் சரத்குமார் தலைமையில் ஒரு அணியும் போட்டியிட்டது. ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற இந்தத் தேர்தலில், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட மூத்த நடிகர்கள் முதல் விஜய், ஆர்யா, சூர்யா உள்ளிட்ட இளம் தலைமுறை நடிகர்கள் வரை ஆர்வமுடன் வாக்களித்தனர். அஜீத், ஷாலினி, ஸ்ருதிஹாசன், உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் வாக்களிக்கவில்லை. மோகன், மாயா உள்ளிட்டோரின் வாக்குகளை வேறு யாரோ போட்டு விட்டனர்.

    வாக்குப்பதிவு நேற்று காலை 7மணிக்கு தொடங்கி 5 மணிவரை நடைபெற்றது. மாலை 6 மணிக்கு தொடங்கி, விடியற்காலை 4 மணி வரை வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இந்த தேர்தலில், நடிகர் சங்கத்திற்கு தலைவர், பொதுச்செயலாளர், துணைத் தலைவர், செயற்குழு உறுப்பினர்கள் என 29 இடங்களில், 25 இடங்களை விஷால் அணியினர் கைப்பற்றியுள்ளனர்.

    பாண்டவர் அணி வெற்றி

    பாண்டவர் அணி வெற்றி

    தலைவராக நாசர், பொதுச்செயலாளராக விஷால், பொருளாளராக கார்த்தி, துணைத்தலைவர்களாக பொன்வண்ணன், கருணாஸ் ஆகியோர் வெற்றி பெற்றனர். தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் பத்மநாபன் சான்றிதழ்களை வழங்கினார்.

    விடிய விடிய கொண்டாட்டம்

    விடிய விடிய கொண்டாட்டம்

    விஷால் தலைமையிலான பாண்டவர் அணியினரின் அமோக வெற்றியை அவரது ஆதரவாளர்கள் பட்டாசுகள் வெடித்து உற்சாகமாக கொண்டாடினர். தேர்தலில் வெற்றி பெற்றதும், நடிகர் கார்த்தி, விஷாலை ஆரத்தழுவி உற்சாகமாக தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

    ஆண்டவர் அணி

    ஆண்டவர் அணி

    செய்தியாளர்களிடம் பேசிய வடிவேலு, பாண்டவர் அணி இனி ஆண்டவர் அணி. வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள். இனி சங்கம் சிறப்பாக செயல்படும் என்றார்.

    கார்த்தி உற்சாகம்

    கார்த்தி உற்சாகம்

    நடிகர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்ற விஷால் தலைமையிலான பாண்டவர் அணியினர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். செய்தியாளர்களிடம் பேசிய கார்த்தி, அசம்பாவிதங்கள் ஏதும் இன்றி இந்த தேர்தலை நடத்த உதவிய அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நடிகர் சங்கத்துக்கு மீண்டும் புத்துணர்வு ஏற்பட்டு உள்ளது என்றார்.

    உறுப்பினர்களின் தகவல்கள்

    உறுப்பினர்களின் தகவல்கள்

    எங்கள் மீது நம்பிக்கை வைத்து வாக்கு அளித்த அனைவருக்கும் என் நன்றி என்றார்.இதில் இருந்து நிறைய விஷயங்களை நாங்கள் செய்யப்போகிறோம். சங்க உறுப்பினர்களின் தகவல்கள், அவர்களின் தேவைகளை சேகரிப்பதே எங்களின் முதல் பணி" என்றார் பொருளாளர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள நடிகர் கார்த்தி.

    English summary
    In the Treasurer category, the contenders were Karthi and S.S.R Kannan and the winner is Karthi. The final winning margin will be known shortly. Karthi said press persons, Our first step is to make a database for Nadigar Sangam.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X