நம்மை சுற்றியுள்ளவர்களுக்கு நல்லது செய்தால் மாற்றம் தன்னால் உருவாகும்-சாய் தன்ஷிகா

சென்னை: நம்மள சுத்தி இருக்குறவங்களுக்கும், இந்த சமுதாயத்துக்கும் நம்மளால முடிஞ்சத செஞ்சா அது பெரிய அளவுல மாற்றத்துக்கு உறுதுணையா இருக்கும்ணு நம்ம நடிகை சாய் தன்ஷிகா சொல்லியிருக்காங்க.

தமிழ் சினிமாவுல மனதோடு மழைக்காலம் அப்பிடிங்குற படத்துல ஹீரோயினா அறிமுகமானவங்க தான் நம்ம சாய் தன்ஷிகா. ஆனா 2009ஆம் வருஷம் வெளியான பேராண்மை படத்துலயும், அதுக்கப்புறமா ரஜினி கூட கபாலி படத்துல நடிச்சதுக்கு அப்புறமாதான் சாய் தன்ஷிகா பாப்புலரா ஆனாங்க.

தமிழ் சினிமாவுல இருக்குற நடிகையில சுத்தமா தமிழ் பேசுற நடிகைங்கள்ல விரல் விட்டு எண்ணக்கூடிய சில பேர்ல இவங்களும் ஒருத்தர். சுத்தமான தமிழ் பொண்ணு. காவிரி ஆறு பாயும் தஞ்சை மண்ணுல பிறந்தவங்க. இவங்க சிலம்ப விளையாட்டை முறையா கத்துக்கிட்டவங்க. அதுலயும் ரெண்டு கையிலேயும் கம்பு சுத்துறதுல எக்ஸ்பர்ட். அதனால தான் சமுதாயத்துக்கு எந்த விஷயத்த சொன்னாலும் நல்ல ஆணித்தரமா தைரியமா சொல்லுவாங்க.

சாய் தன்ஷிகா

சாய் தன்ஷிகா

தமிழ் சினிமாவுல ஒரு பொண்ணு ஜெயிக்கணும்னா கிளுகிளுப்பா தன்னோட கவர்ச்சிய காட்டி நடிச்சாதான் ஜெயிக்க முடியும்னு இருக்குற வழக்கமான பழைய ஃபார்முலாவ ஒடச்சி நொறுக்கி தள்ளிட்டு, தங்களக்குன்னு தனியா ஒரு பாணிய வச்சிக்கிட்டு நடிக்கிறவங்களும் இருக்காங்க.
அதுல இருந்து கொஞ்சம் வேறுபட்டவர் தான் நம்ம நடிகை சாய் தன்ஷிகா.

பேராண்மை தன்ஷிகா

பேராண்மை தன்ஷிகா

பேராண்மை படம் மூலமா தனக்கு அதிரடியாவும் நடிக்கத் தெரியும்னு சொல்லி அடிச்சதோடு நிக்காம, தான் நடிக்குற ஒவ்வொரு படத்துலேயும் சவாலான கேரக்டர்களையே ஏத்துக்கிட்டு நடிச்சி வர்ற நம்ம நடிகை சாய் தன்ஷிகா, இன்னிக்கு ஆகஸ்டு 15ஆம் தேதியான சுதந்திர தினத்தன்னிக்கு ஒரு நல்ல மெசேஜ் சொல்லியிருக்காங்க.

சுதந்திர தினம்

சுதந்திர தினம்

நாம நாட்டுல இருக்குற எல்லாருமே, தினந்தோறும், ஒவ்வொரு செகண்டும் நம்ம வாழ்க்கைய சந்தோஷமா வாழுறோம்ன அதுக்கு, சுதந்திர போராட்ட வீரர்கள் தான் காரணம்கிறத, இன்னிக்கு சுதந்திர தினத்த கொண்டாடுற நாம மனசுல வச்சிக்கனும்.

உயிர்த்தியாகம்

உயிர்த்தியாகம்

எத்தனையோ அஹிம்சை வழிப் போராட்டத்தையும் உயிர்த் தியாகத்தையும் செஞ்சி தான், அவங்க நமக்கு இந்த சுதந்திரத்த வாங்கிக் கொடுத்திருக்காங்க. அதனால அந்த சுதந்திரத்தை நாம சரியா முறையா பயன்படுத்தணும். அது மட்டுமில்லாம, அடுத்த தலைமுறைக்காக நம்ம நாட்டை நல்ல முறையில கொடுக்கணும்.

தியாகிகளுக்கு படம்

தியாகிகளுக்கு படம்

நம்மள சுத்தியிருக்குற ஜனங்களுக்கும், இந்த சமுதாயத்துக்கும் உங்களால முடிஞ்சத பண்ணுங்க. நம்மளோட சின்ன சின்ன பங்களிப்பு கூட நம்மள சுத்தி இருக்குறவங்கள மாத்துறதுக்கு ரொம்ப உதவியா இருக்கும். அது தாங்க நமக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்த தியாகிகளுக்கு நாம செலுத்துற மரியாதை, அப்பிடின்னு சாய் தன்ஷிகா சொல்லி இருக்காங்க. நம்மளும் அதுப்படியே நடப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X