twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விஷால் அறிவிப்புக்கு சினிமா ரசிகர்கள் அமோக வரவேற்பு... திரையரங்குகள் கடுப்பு!

    By Shankar
    |

    சென்னை: "தமிழகம் முழுவதும் உள்ள சினிமா தியேட்டர்களில் இனி ஆன்லைன் மற்றும் பார்க்கிங் கட்டணம் கிடையாது.

    இன்றுமுதல் அரசு நிர்ணயம் செய்த கட்டணம்தான் தியேட்டர்களில் வசூலிக்க வேண்டும்

    கேண்டீன்களில் விலைக்குதான் விற்கவேண்டும்

    அம்மா தண்ணீர் பாட்டில் விற்கப்பட வேண்டும்

    வீட்டிலிருந்து தண்ணீர் கொண்டு வர மக்களை அனுமதிக்க வேண்டும்"

    Overwhelming response to Vishal's new regulations

    - விஷாலின் இந்த அறிவிப்புதான் தமிழ் சினிமாவின் லேட்டஸ்ட் பரபரப்பு. பெரும் வரவேற்புடன், இதெல்லாம் நடக்குமா? நிஜம்தானா என மக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    ஆனால் எப்போதும் அராஜகத்தின் பக்கமே நிற்கும் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் இதற்கு ஒத்துழைப்பார்களா? நிச்சயம் மாட்டார்கள். ஏனெனில் கேளிக்கை வரியை நீக்கக் கோரி அரசுடன் விஷால் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கும்போதே, அவரைக் காட்டிக் கொடுத்தவர்கள் இந்த தியேட்டர் உரிமையாளர்கள்தான். "விஷால்தான் பிடிவாதம் பிடிக்கிறார்... எங்களுக்கு ஒரு பிரச்சினையும் இல்லை. நாங்கள்தான் வரியை விட அதிகமாக தியேட்டர் கட்டணத்தை உயர்த்திவிட்டோமே," என்று அமைச்சர்களிடமே சொல்லியிருக்கிறார்கள் தியேட்டர் உரிமையாளர்கள்.

    எனவே விஷாலின் இந்த அறிவிப்புக்கு தியேட்டர்கள் நிச்சயம் எதிர்ப்பு தெரிவிக்கத்தான் போகிறார்கள். ஆனால் பொதுமக்கள் வரவேற்பு தெரிவிக்கிறார்கள். சமூக வலைத் தளங்களில் விஷால் அறிவிப்புக்கு ஏக வரவேற்பு. தியேட்டர்களில் நடக்கும் கட்டண, பாப்கார்ன் கொள்ளைகளுக்கு ஒரேயடியாக முற்றுப்புள்ளி வைக்க முடியாது என்றாலும், விஷாலின் இந்த முயற்சிக்கு ஓரளவுவாவது வெற்றி கிடைத்தாலே பெரிய விஷயம்தான். பார்க்கலாம்!

    English summary
    Though Theater owners not accepting Vishal's new regulations, public audience give overwhelming responce to Vishal.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X